ஒலி பெயர்ப்பு வரையறைக் குழு அமைக்க அரசிற்கு வேண்டுகோள்!
சீரான ஒலிபெயர்ப்பை நடைமுறைப்படுத்த தமிழக அரசிற்குத் தமிழறிஞர்களின் வேண்டுகோள் மூல மொழிச் சொற்களை உள்ளவாறு உணர்வதற்கு உதவுவது ஒலிபெயர்ப்பு. அந்த வகையில் தமிழ்ச்சொற்களைப் பிற மொழியினர் அறிய உதவுவது ஒலி பெயர்ப்பு. பொதுவாக உரோமன்/ஆங்கில எழுத்துகளில் தமிழுக்கான ஒலிபெயர்ப்பு மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. [பிற மொழியாளர்கள் புரிதலுக்காகத்தான் ஒலி பெயர்ப்பே தவிர, தமிழில் ஒலி பெயர்ப்பு முறையில் பிற மொழிச்சொற்களைக் கலக்கக்கூடாது.] ஐரோப்பியர் வருகைக்கு முன்னர், எத்தகைய ஒலி பெயர்ப்பு முறைகளைப் பிற மொழியினர் கையாண்டிருந்தனர் என நமக்குத் தெரியவில்லை. ஐரோப்பியர் வருகைக்குப்பின்னரே தமிழ்…
ஒலிபெயர்ப்பு தொடர்பான முன்மொழிவுகள் பற்றிய கலந்துரையாடல்
தமிழ்ப்பின்னங்கள், சிறப்புக்குறியீடுகள் ஆகியவற்றின் ஒலிபெயர்ப்பு, தொடர்பான முன்மொழிவுகள் பற்றிய கலந்துரையாடல் கூட்டம் தமிழக அரசின் சார்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எப்.50 கூடம், முதன்மைக் கட்டடம், சென்னைப் பல்கலைக்கழகம், சேப்பாக்கம், சென்னை 600 005 இல் சித்திரை 16, 2046 / ஏப்பிரல் 29,2016 காலை 10.30 முதல் நடைபெற உள்ளது. இதில் பங்குபெற்று கருத்து தெரிவிக்க விரும்புவோர், தங்கள் கருத்துகளையும் பங்கேற்கும் விழைவையும் மின்னஞ்சலில் தெரிவிக்க வேண்டும். அல்லது ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் மணிகண்டன் (044 2844 9537), முனைவர் பாலாசி…
தமிழைச் சிதைக்கலாமா? இலக்குவனார் திருவள்ளுவன் நேர்முகம் – கவிமணி
நாள் வைகாசி 16, 2045, மே 30, 2014 பக்கம் 16 “தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு வரையறை – கலந்துரையாடல்” என்னும் நிகழ்ச்சி நடந்ததைக் கேள்விப்பட்டோம். தமிழ்க்காப்புக்கழகம், மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறையுடனும் பிற தமிழ் அமைப்புகளுடனும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தி யிருந்தது. இது குறித்து மேலும் அறியத் தமிழ்க்காப்புக்கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவனைச் சந்தித்தோம். அப்பொழுதுதான் இது சாதாரணமான கூட்டம் அல்ல! அபாயச்சங்கு ஒலிக்கப்பட்டுள்ளது எனப் புரிந்து கொண்டோம். அவரிடம் பேசிய விவரம் வருமாறு: தமிழுக்கான…
தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு வரையறை – கலந்துரையாடல்
தமிழ்க்காப்புக்கழகமும் சென்னை மாநிலக்கல்லூரித் தமிழ்த்துறையும் பிற தமிழ்க்காப்பு அமைப்புகளுடன் இணைந்து தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு வரையறை – கலந்துரையாடலை நிகழ்த்தியது. சென்னை மாநிலக்கல்லூரியில் உள்ள பேராசிரியர் பவெல் அரங்கத்தில்,தி.பி.2045 பங்குனி 23 / கி.பி.2014 ஏப்பிரல் 6 ஞாயிறு முற்பகல் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. திரு அன்றில் இறையெழிலன் வரவேற்புரை ஆற்றினார். திரு இலக்குவனார் திருவள்ளுவன் தலைமை தாங்கினார். முனைவர் ப.மகாலிங்கம் தொடக்கவுரை ஆற்றினார். முனைவர் க.ப.அறவாணன், பேராசிரியர் முனைவர் ந.தெய்வசுந்தரம், முனைவர் கு.பாலசுப்பிரமணியன், முனைவர் மா.பூங்குன்றன், முனைவர் மு.கண்ணன், முனவைர்…
தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலிபெயர்ப்பு வரையறை – கலந்துரையாடல்
பேரன்புடையீர், வணக்கம். தமிழ்ப்பெயர்ச் சொற்களையும் தமிழ் மேற்கோள்களையும் அவ்வாறே ஆங்கிலத்தில் குறிப்பிடுகையிலும் தமிழ் இலக்கியங்களை ஆங்கில ஒலி பெயர்ப்பில் குறிப்பிடுகையிலும் தமிழ் எழுத்தொலிகளுக்குப் பொருந்தி வரும் வரிவடிவங்களே ஏற்கத்தக்கன. இப்பொழுது வெவ்வேறு வகையாகப் பின்பற்றப்படுகின்றன. சிலர், ஙகர, ஞகர, நகர, ணகர, னகர வேறுபாடுகளோ லகர, ளகர, ழகர வேறுபாடுகளோ ரகர, றகர வேறுபாடுகளோ தேவையில்லை என ஒரே ஆங்கில வரிவடிவத்தையே அனைத்திற்கும் பயன்படுத்துகின்றனர். ஒரு மொழியின் எழுத்தொலிகளைப் பிற மொழியின் வரிவடிவங்களில் அதே ஒலிப்பு முறையில் கொணருவது இயலாத ஒன்றுதான்….