ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1321-1330)-இலக்குவனார் திருவள்ளுவன்

[ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1311-1320) தொடர்ச்சி] ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! திருவள்ளுவர் திருக்குறள் காமத்துப்பால் 133. ஊடலுவகை (ஊடலில் மகிழ்தல்) தவறில்லாத பொழுதும் ஊடுதல் அன்பு செலுத்தச் செய்கிறது.(1321) ஊடல் தரும் சிறு துன்பம் மகிழத்தக்கது. (1322) நிலமும் நீரும் கலந்தாற்போன்றவருடன் ஊடுதல் தேவருலகத்தினும் இன்பமாகும். (1323) தழுவு நேர ஊடலில் உள்ளம் உடைக்கும் படை உள்ளது. (1324) தவறிலில்லையாயினும் ஊடலால் தோள் பிரிகையிலும் இன்பம் உள்ளது.(1325) உண்டலில் செரித்தல் இனிது; கூடலினும் ஊடல் இனிது. (1326) ஊடலில் தோற்பவர் வெல்வதைக் கூடலில் காணலாம்….

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1311-1320)-இலக்குவனார் திருவள்ளுவன்

[ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1301-1310) தொடர்ச்சி] ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! திருவள்ளுவர் திருக்குறள் காமத்துப்பால் 132. புலவி நுணுக்கம் (தலைவனுக்கு மற்றொருத்தியுடன் தொடர்பு இருப்பதாகக் கற்பனையாய்க் கருதிக் காய்தல்) 231. பெண்கள் பலரால் பார்க்கப்படும் பரத்தனே, உன்னைத் தழுவேன். (1311) 232. வாழ்த்தை எதிர்நோக்கி ஊடும்போது தும்மினார். (1312) 233. மலரைச் சூடினாலும் யாருக்குக் காட்டச் சூடினாய் எனச் சினப்பாள். (1313) 234. எல்லாரையும் விடக் காதலிப்பதாகக் கூறினாலும் யார்,யாரை விட என ஊடுவாள். (1314) 235. இம்மைப்பிறவியில் பிரியேன் என்றால் வரும் பிறவியில்…

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1301-1310)-இலக்குவனார் திருவள்ளுவன்

[ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1291-1300) தொடர்ச்சி] ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! திருவள்ளுவர் திருக்குறள் காமத்துப்பால் 131. புலவி 221. ஊடலில் தழுவாமல் சிறு துன்பம் தருவோம். (1301) 222. உணவில் உப்புபோல் இன்பத்தில் ஊடல் அளவாய்க் கொள்க. (1302) 223. ஊடலுற்றவரைத் தழுவாமை, துன்புற்றவர்க்குத் துன்பம் தருதலாகும்.(1303) 224. ஊடியவரைக் கூடாமை, வாடியகொடியை அடியோடு அறுத்தலை ஒக்கும்.(1304) 225. நல்லவர்க்கு ஊடலும் அழகே!(1305) 226. பூசலின்மை கனியின் இனிமை. ஊடலின்மை காயின் துவர்ப்பு.(1306) 227. கூடல் நீளாதோ என எண்ணும் துன்பம் ஊடலில் உண்டு.(1307)…

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1291-1300)-இலக்குவனார் திருவள்ளுவன்

[ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1281-1290) தொடர்ச்சி] ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!திருவள்ளுவர்திருக்குறள்காமத்துப்பால் 130. நெஞ்சொடு புலத்தல் 211. அவர் நெஞ்சோ அவரிடம்! ஆனால், என் நெஞ்சோ என்னிடம் இல்லையே! (1291) 212. அன்பு கொள்ளாதவர் மீது நெஞ்சே ஏன் நீ செல்கிறாய்? (1292) 213. கெட்டார்க்கு நட்டார் இல்லை என, நெஞ்சே அவர் பின் செல்கிறாயா? (1293) 214. நெஞ்சே! ஊடல் முடிக்கும் கூடலை அறியாத உன்னிடம் பேசேன். (1294) 215. அவரைக் காணாவிட்டாலும் அச்சம்; கண்டாலும் பிரிவெண்ணி அச்சம். (1295) 216. தனிமையில் நினைத்தல்…

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1281-1290)-இலக்குவனார் திருவள்ளுவன்

(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1271-1280) தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!திருவள்ளுவர்திருக்குறள்காமத்துப்பால்129. புணர்ச்சி விதும்பல் (தலைவனும் தலைவியும் புணர்ச்சிக்கு விரைதல்) 201. நினைத்தால் களித்தலும் கண்டால் மகிழ்தலும் கள்ளுக்கில்லை, காமத்திற்கு உண்டு.(1281)202. பனையளவு காமத்தின்பொழுது தினையளவும் ஊடாதே.(1282)203. தன் விருப்பப்படி நடந்தாலும் கணவனையே கண்கள் தேடுகின்றன.(1283)204. ஊடச் சென்றேன் நெஞ்சோ கூடியது.(1284)205. கண்ணருகே மைதீட்டி தெரியாததுபோல், கணவர் அருகே குறைகள் தெரிவதில்லை.(1285)206. நாயகரைக் கண்டால் பிழை காணேன். காணாதபோது பிழையன்றி வேறு காணேன்.(1286)207. இழுத்துச் செல்லுதலை அறிந்தும் வெள்ளத்தில் பாய்வதுபோல்,பயனின்மை அறிந்தும் ஊடுவது ஏன்? (1287)208….

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1271-1280)-இலக்குவனார் திருவள்ளுவன்

(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1261-1270) தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! திருவள்ளுவர் திருக்குறள் காமத்துப்பால் 128. குறிப்பறிவுறுத்தல் (குறிப்பால் உணர்த்துதல்) நீ மறைத்தாலும் கண்கள் உணர்த்தும் செய்தி உள்ளது. (1271) கண்நிறைந்த தலைவிக்குப் பெண்மை பேரழகு. (1272) மணிமாலையில் நூல்போல் தலைவியின் அழகில் குறிப்பு உள்ளது. (1273) பூ முகையில் மணம்போல் தலைவியின் புன்னகையில் காதல் மணம் உள்ளது. (1274) தலைவியின் கள்ளப்பார்வையில் துயர் தீர்க்கும் மருந்து உள்ளது. (1275) கலத்தல் தரும் பேரின்பம், அடுத்த பிரிவை உணர்த்துகிறது. (1276) தலைவனின் பிரிவை நம்மினும்…

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1261-1270)-இலக்குவனார் திருவள்ளுவன்

(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1251-1260) தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! திருவள்ளுவர் திருக்குறள் காமத்துப்பால் 127. அவர்வயின் விதும்பல் (தலைவன் வரவு நோக்கல்) 181. கணவன் வழி பார்த்த கண்கள் ஒளியிழந்தன; நாள் குறித்த விரல்கள் தேய்ந்தன.(1261) 182. அவரை மறப்பின் தோள் அழகு கெட்டுக் கை மெலிந்து வளையல்கள் கழலும்.(1262) 183. ஊக்கத்தைத் துணையாகக் கொண்டு சென்றவர் வரவை எண்ணி உயிர்வாழ்கிறேன். (1263) 184. கூடிப்பிரிந்த கணவன் வரவை எண்ணி நெஞ்சம் கிளைதோறும் ஏறிப்பார்க்கின்றது. (1264) 185. கணவனைக் கண்ணாரக் கண்டபின் பசலை…

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1251-1260)-இலக்குவனார் திருவள்ளுவன்

(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1241-1250) தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! திருவள்ளுவர் திருக்குறள் காமத்துப்பால் 126. நிறை அழிதல் (காமவேட்கையால் தன்னிலை இழந்து உரைத்தல்) நாணப்பூட்டு உள்ள நிறை என்னும் கதவைக் காமக்கோடரி உடைக்கிறது.(1251) என் நெஞ்சத்தை நள்ளிரவிலும் ஆள்கிறதே காமம்! (1252) காமம் மறைக்க இயலாமல் தும்மல்போல் வெளியாகிறதே!(1253) மன உறுதியை மீறிக் காமம் வெளிப்படுகிறதே (1254) பிரிந்தார் பின் செல்லா மான உணர்வை காமநோயர் அறியவில்லையே! (1255) நீங்கினார் பின் சேரச்செல்லும் காதல் எத்தகையதோ? (1256) விரும்பியவர் விரும்பியவற்றைச் செய்தால் நாணத்திற்கு…

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1241-1250)-இலக்குவனார் திருவள்ளுவன்

(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1231-1240) தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! திருவள்ளுவர் திருக்குறள் காமத்துப்பால் 125. நெஞ்சொடு கிளத்தல் (பிரிவாற்றாமையால் நெஞ்சிடம் புலம்பல்) 161. பிரிவு நோய்க்கு மருந்து சொல், நெஞ்சே! (1241) 162. அன்பில்லாதவரிடம் அன்பைக் காட்டுகிறாயே அறிவிலி நெஞ்சே! (1242) 163. வருந்தும் நோயைத் தந்தவருக்காக வருந்திப் பயனென்ன? (1243) 164. நெஞ்சே! அவரைக் காணச் செல்லும்போது கண்களையும் அழைத்துச் செல்! (1244) 165. வெறுத்தார் என்று வெறுக்க இயலுமோ (1245) 166. பொய்க்கோபம் கொள்ளும் நெஞ்சே! உனக்கேன் ஊடல்? (1246)…

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1231-1240)-இலக்குவனார் திருவள்ளுவன்

(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1221-1230) தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! திருவள்ளுவர் திருக்குறள் காமத்துப்பால் 124. உறுப்புநலன் அழிதல் பிரிந்தவரை எண்ணிக் கண்கள் மலருக்கு நாணின. (1231) பசலையும் அழும் கண்களும் காதலரின் அன்பின்மையைக் கூறும். (1232) கூடியபொழுது பருத்த தோள்கள் வாடிப் பிரிவை உணர்த்தின. (1233) துணைவரின் பிரிவால் தோள்கள் மெலிந்து வளையல்கள் கழன்றன. (1234) தலைவனின் கொடுமையை வாடிய அழகிய தோள் உரைக்கும்.(1235) காதலரைக் கொடியவர் என்பது பசலையினும் கொடியதே.(1236) அவரிடம் தோள்மெலிவைக் கூறிப் பெருமைப்படுவாயோ நெஞ்சே. (1237) தழுவலைத் தளர்த்தியதும்…

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1221-1230)-இலக்குவனார் திருவள்ளுவன்

(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1211-1220) தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (திருவள்ளுவர், திருக்குறள்,) காமத்துப்பால்அதிகாரம் 123. பொழுதுகண்டு இரங்கல்   மாலை, பிரிந்தார் உயிர் பறிக்கும் வேல். (1221) மாலைப்பொழுதின் துணைவரும் என் தலைவர் போல் கொடியவரோ?(1222) பிரிவால் வாடும் என்னைப் பனியால் வாட்டுகிறதே மாலை! (1223) காதலர் இல்லாதபொழுது கொலையாளிபோல் வருகிறதே மாலை! (1224) காலைக்குச் செய்த நன்மை என்ன? மாலைக்கு இழைத்த தீங்கு என்ன? (1225) மாலை கொடியது என்பதை மணந்தவர் பிரியாக்காலை அறியவில்லை. (1226) வேளைதோறும் அரும்பி, மொட்டாகி மாலை…

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1211-1220) – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1201-1210) தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (திருவள்ளுவர், திருக்குறள்,)  காமத்துப்பால் 122. கனவுநிலை உரைத்தல் 131 காதலர் தூதுரைத்த கனவினுக்கு, என்ன விருந்தளிப்பேன்? (1211) 132. கனவில் காதலரிடம் இருப்பதைச் சொல்ல கண்களே தூங்குக!. (1212) 133. நனவில் வராதவர் கனவில் வருவதால் உயிர் உள்ளது. (1213) 134. நனவில் வராதவரை வரவழைக்கும் கனவு. (1214) 135. நனவில் கண்டதும் இன்பம்; கனவில் காண்பதும் இன்பம். (1215) 136. நனவு வராவிடில், காதலர் கனவில் பிரியாரே! (1216) 137. நனவில் வராக்…