புகழேந்தியின் நூல் வெளியீடு,சென்னை

நானும் எனது நிறமும் –  ஓவியர் புகழேந்தியின் தன் வரலாற்று நூல் வெளியீட்டு விழா மாசி 28, 2048 / மார்ச்சு 12, 2017 மாலை 6.00  

குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கத்தின் மாநிலப் போட்டிகள்

  குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரி மாணாக்கர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் நாமக்கல் : குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரி மாணாக்கர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் 68- ஆவது குடியரசு நாள் விழாவை முன்னிட்டு நடத்தப்படுகின்றன. இவற்றில் கவிதை, கட்டுரை, ஓவியம்  முதலான போட்டிகள் நடத்தப்படுகின்றன. கவிதைப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ‘இளங்கவி விருது 2017’, கட்டுரைப் போட்டியில் பங்கேற்பவர்களுக்குச் ‘சிந்தனைச் சிற்பி விருது 2017’, ஓவியப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ‘வரைகலைச் சுடரொளி விருது 2017’ ஆகிய விருதுகளும் சான்றிதழ்களும்…

ஓவியத்திலும் பழந்தமிழர் சிறப்புற்றிருந்தனர்!

  “ஒவ்வு’ என்றால் ஒன்றைப் பற்று அல்லது ஒன்றைப் போல இருப்பது என்பது பொருள். இதிலிருந்து “ஒப்பு, ஓவம், ஓவியம்’ எனச் சொற்கள் பிறந்து உள்ளன. கண்ணால் கண்ட பொருளை மனதில் நிறுத்திப் பின்னர் இத்ன உருவத்தைச் சுவரிலோ அல்லது பிற பொருள்களின் மீதோ தீட்டி மூலப்பொருட்களின் தன்மையை அதில் எதிரொளிக்கச் செய்வதே ஓவியமாகும்.   பழந்தமிழகத்தில் வண்ணம் தீட்டும் கோல்கள் “தூரிகை, துகிலிகை’ என இருவகைகளில் இருந்தன. வண்ணம் குழைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டும் பலகை வட்டிகை, மணிப்பலகை எனப்பட்டன. தூரிகை பாதிரிப்பூவைப் போல் இருந்தன…

கரூரில் தமிழக அரசு சார்பில் ஓவியக்காட்சி

தமிழக அரசின் கலை-பண்பாட்டுத்துறை சார்பில், நலிந்த கலைகளை வளர்க்கும் வகையிலும் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், மாவட்டந்தோறும் கலைக் காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் ஒருபகுதியாக ஓவியக்கலை குறித்த கண்காட்சி கரூர் குமரன் நகராட்சி பள்ளியில்  மாசி 15, தி.பி.2045/ பிப்.27, 2014 அன்று திறந்துவைக்கப்பெற்றது. வரும் 2 ஆம் நாள் வரை கண்காட்சி நடைபெறுகிறது. ஓவியக்காட்சி திறப்பு விழாவிற்குப் பள்ளித் தலைமையாசிரியர் கண்ணகி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசுப் பள்ளி சிறப்பாசிரியர்கள் சங்க மாநிலத் துணைத்தலைவர் ஆதிமோகன் வரவேற்றார். நகராட்சித் தலைவர் செல்வராசு  ஓவியக்காட்சியைத்…