கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 36 : கோமகன் மறுமொழி
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 35 : 7. கடல்நகர் புக்க காதை – தொடர்ச்சி) பூங்கொடி கோமகன் மறுமொழி வேம்பென வெறுப்பவள், வியனுல கதனில் மேம்படு தமிழே மேவிய மூச்சாய் வாழும் குறிக்கோள் வாழ்வினள்; அம்மகள் சூழும் தொழிற்குத் துணைசெயல் இன்றி ஊறுகள் இயற்றல் ஒவ்வுமோ?’ என்றனள்; 25 கோமகன் மறுமொழி `ஊறுகள் இயற்ற ஒருப்படேன் தாயே! துணைசெய நினைந்தே தோகை அவட்குத் துணைவன் ஆகத் துணிந்தேன்’ எனலும், மீண்டும் இடித்துரை `செல்வ! நன்றுரை செப்பினை! அறிவைக் …
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 35 : 7. கடல்நகர் புக்க காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 34 : முத்தக் கூத்தன் கொலை – தொடர்ச்சி பூங்கொடி 7. கடல்நகர் புக்க காதை கோமகன் துயிலாமை மலர்மலி காவுள் மங்கை பூங்கொடியின் அலர்விழி அருளும் அந்தீங் கிளவியும் பெறாஅது கோமகன் பெயர்ந்தோன் அக்கொடி மறாஅது தன்னை மணங்கொள வழிவகை உன்னி உன்னி உறங்கா திருந்தனன்; கன்னியர் நினைவுறின் கண்படை ஒல்லுமோ? 5 கதிரவன் எழுச்சி இருளின் கால்சீய்த் தெழுந்தனன் பரிதி; மருள்கெட மக்கள் இமைகள் மலர்ந்தனர்; தெருள்நிலை கண்டனர்; தேய்ந்த உணர்வெலாம் …