சிறுதானிய உணவுத்திருவிழா, சேலம்
ஆடி 10. 2046 முதல் ஆடி 24, 2046 வரை சூலை 29, 2015 முதல் ஆக.09, 2015 வரை சேலம் அத்தம்பட்டிச் சுழற்சங்கம், சேலம் ஐந்திணை உணவகம் கண்காட்சி கருத்தரங்கம்
இணைய மாநாட்டுத் தகவல்நுட்பக்காட்சி ஒளிப்படங்கள் சில, சிங்கப்பூர்
சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் 14ஆவது இணைய மாநாடு மூன்று நாள் நடைபெற்றது. இம்மாநாட்டில் தொடக்க நாளான சித்திரை 16, 2046 / மே 30, 2015 சனியன்று சிங்கப்பூர்த் தலைமையமைச்சுத்துறையமைச்சர் ஈசுவரன் தகவல்நுட்பக் காட்சியரங்கத்தைத் திறந்து வைத்தார். படங்கள் : அகரமுதல & தினமலர்
கரூரில் தமிழக அரசு சார்பில் ஓவியக்காட்சி
தமிழக அரசின் கலை-பண்பாட்டுத்துறை சார்பில், நலிந்த கலைகளை வளர்க்கும் வகையிலும் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், மாவட்டந்தோறும் கலைக் காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் ஒருபகுதியாக ஓவியக்கலை குறித்த கண்காட்சி கரூர் குமரன் நகராட்சி பள்ளியில் மாசி 15, தி.பி.2045/ பிப்.27, 2014 அன்று திறந்துவைக்கப்பெற்றது. வரும் 2 ஆம் நாள் வரை கண்காட்சி நடைபெறுகிறது. ஓவியக்காட்சி திறப்பு விழாவிற்குப் பள்ளித் தலைமையாசிரியர் கண்ணகி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசுப் பள்ளி சிறப்பாசிரியர்கள் சங்க மாநிலத் துணைத்தலைவர் ஆதிமோகன் வரவேற்றார். நகராட்சித் தலைவர் செல்வராசு ஓவியக்காட்சியைத்…