சீவனாவின் கனவை நிறைவேற்றுங்கள்!

சீவனாவின் கனவை நிறைவேற்றுங்கள்! போரின் நெருப்பில் சிரிப்பை இழந்த மழலை! தீருமா அவளின் வேதனை?  2009 ஆம் ஆண்டு 3 ஆம் மாதக் காலப்பகுதியில் தமிழின அழிப்பின் மிக உச்சக்கட்ட நடவடிக்கைகள் புதுமாத்தளன் பகுதிகளில் நடந்து கொண்டிருந்தன. அத்தருணத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் துடிதுடித்து இறந்து கொண்டிருந்தனர்.   அதிலும் குறிப்பாகக் குழந்தைகள் மிகக் கொடூரமாக அங்கவீனமாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். முல்லைத்தீவு உடுப்புக்குள ஊரைச் சேர்ந்த இரத்தினராசா  சீவனா (அகவை 11) என்னும் சிறுமி, படுகொலை நடவடிக்கையில் சிக்கிப் போர்க்காயங்களுடன் ஊனமாக்கப்பட்டு மீண்டுள்ளார்.   2009 ஆம்…

கைவிட முடியாத கனவு! – பா.செயப்பிரகாசம்

  தமிழீழம்- தமிழரின் கனவு. தமிழர் போராட்டம் தீராநதியென பெருக்கெடுத்து ஓடிய பின்னரும் விடுதலைக் கனவு மீதி இருக்கிறது. விடுதலையைக் காதலித்த எண்ணிக்கையற்ற போராளிகள் அதற்காக மடிந்தார்கள். எந்தக் கனவினைச் சுமந்து போராளிகள் இறக்கிவைக்காமல் நடந்தனரோ, அந்தக் கனவின் மீதி இன்னும் இருக்கிறது. புதைக்கப்படுவது என்பதினும் விதைக்கப்படுவோராய் போராளிகள் ஆகியிருந்தனர். ஈழப்பகுதியெங்கும் நிறைந் திருந்தன மாவீரர் துயிலுமில்லங்கள். இலங்கை இராணுவத்தால் இன்று சிதைக்கப்பட்ட துயிலும் இல்லங்கள் நம்மை நோக்கிக் கேள்வியெழுப்புகின்றன- எங்கே எமது கனவின் மீதி? ஒரு வித்து நல்வித்து எனத் தெரிகிறது. நல்வித்தை…

தண்ணீர்க் கனவு – மு. இதாயத்துல்லாஃக் இராசல் கைமா

தண்ணீர்க் கனவு மணலைப்பறி கொடுத்துவிட்டு ஏதிலியாய் நிற்கிறது ஆறு! அப்போதெல்லாம் ஆடிப்பெருக்கென்றால் ஆற்றினில் வெள்ளம் வரும் ! இப்போது … கண்ணீர் வருகிறது ! காலப்போக்கில் தண்ணீரும் .. ஒரு கனவாகிவிடுமோ? -மு. இதாயத்துல்லாஃக் இராசல் கைமா

கனவு நனவாகுமா ? – பாவலர் கருமலைத்தமிழாழன்

ஆற்றினிலே ஆலைகளின் கழிவு சேர்த்து ஆகாய வெளியினிலும் மாசு சேர்த்து ஊற்றினிலும் தூய்மையிலா நீராய் மாற்றும் உன்மத்தர் செயல்களெல்லாம் முடிந்து போகக் காற்றுவெளி தூய்மையாகிக் குடிக்கும் நீரும் கலப்படமே இல்லாமல் கிடைக்கும் இங்கே நேற்றுவரை இருந்தநிலை மாறி வாழ்வில் நோய்நொடிகள் இல்லாமல் இருப்பார் இங்கே ! பட்டங்கள் பலபெற்றும் பணியே இன்றிப் பரிதவித்தே ஏங்குகின்ற இளைஞர் கூட்டம் வெட்டியாகச் சுற்றுகின்ற நிலைமை மாறி வெறுங்கையின் சக்திதனைத் திறன்கள் தம்மைத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேலை யின்றித் திண்டாடல் பழங்கதையாய் மாறிப் போகும் கட்டாயம் பணிகிடைக்கும் வகையில்…

சங்க இலக்கியத்தில் கனவுக் குறிப்புகள் – ச.வே.சுப்பிரமணியன்

சங்க இலக்கியத்தில் கனவுக் குறிப்புகள்   சங்க இலக்கியத்தில் ஏறத்தாழ நாற்பத்து நான்கு கனவுக் குறிப்புகள் காணப்படுகின்றன. சில, தலைவன் தலைவியர் கண்டனவாகவும், சில பறவை, விலங்குகள் கண்டனவாகவும் அமைகின்றன. – நல்லறிஞர் ச.வே.சுப்பிரமணியனார்: இலக்கியக் கனவுகள்: பக்கம்: 17-18 சங்கத்தமிழ் கற்றால் கீழ்மை போகும் பழம் சங்கப் பனுவலைக் கற்றால் கிழம் போகும் கீழ்மையும் போகும் – அறிஞர் வ.சுப.மாணிக்கனார்