இலக்கியத்தின் எதிரிகள் 2/2: ம.பொ. சிவஞானம்
(இலக்கியத்தின் எதிரிகள் 1/2 தொடர்ச்சி) இலக்கியத்தின் எதிரிகள் 2/2 இராமாயணத்தில் தயரதனுடன் கூடி வாழ்ந்த மனைவியர் மூவர்தான். அறுபதினாயிரம் மனைவியர் என்பது பலதார மணத்தின் கொடுமையை மிகைப் படுத்திக்காட்ட கவிஞன் செய்த கற்பனை. ஆம். ‘பலதார மணம்’ என்ற தவற்றின் சிகரத்தில் தயரதனை ஏற்றி விடுகின்றான் கவிஞன். காப்பிய அமைப்பின் இலக்கணங்களை அறிந்தவர்கள் இந்தக் கற்பனையை அனுபவிப்பார்களே யன்றி ஆத்திரப்படமாட்டார்கள். ஆனால், ஈ.வெ.ராவோ, கற்பனையை உண்மையாக்கிக்கொண்டு ஆத்திரப்படுகின்றார்.அவருடைய இரசிகத்தன்மையை என்னென்பது! இராமன் அவனுடைய ஒழுக்கத்திற்காகவும் உயர் குணங்களுக்காகவும் தெய்வமாக்கப்பட்டிருப்பினும், வடநாட்டானாதலால் தமிழ் நாட்டார் அவனை…
இலக்கியத்தின் எதிரிகள் 1/2: ம.பொ. சிவஞானம்
இலக்கியத்தின் எதிரிகள் 1/2 ஏதேனும் ஒரு எதிர்ப்பு இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பது பெரியார் ஈ.வெ.ராவுக்கு வழக்கமாகி விட்டது. காரண காரியத்தோடு எதிர்ப்பு நடத்தப்பட்டால் அதைப்பற்றிக் குறை கூறுவதற்கில்லை. ஆனால், காரண காரியம் இல்லாமலே சுய விளம்பரத்திற்காக எதிர்ப்பு இயக்கம் நடத்துவது குறைமட்டுமல்ல குற்றமுமாகும். பெரியார் ஈ.வெ.ரா, அரசியலில் நல்ல அனுபவமுடையவர். சமூக சீர்கேடுகளைப் பற்றியும் வெகுவாக ஆராய்ந்திருக்கிறார். இந்த இரண்டு துறைகளிலும் அவருடைய திறமைக்கு இன்னொருவரை ஈடாகச் சொல்லமுடியாது. ஆம், அந்த திறமையை வேண்டுமென்றே தீய வழியில் பயன்படுத்துகிறார் என்று குற்றம் சொல்லலாம். ஆனால்…
இணையவழிக் கூட்டம்: கம்பரும் உமறுப் புலவரும்
வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 2/4
வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் நூலறிமுகம் 2/4 சொல்லின் செல்வர் கங்காராம் துரைராசு திருக்குறள் தூதர் வெ.இர.கனகசபை, சொல்லின் செல்வர் கங்காராம் துரைராசு குறித்து எழுதிய கட்டுரை இடம் பெற்றுள்ளது. தம்பிக்கு மடல்கள் எழுதிய அறிஞர் அண்ணா வழியில் ‘அன்ப’ எனத் தொடங்கி ஏராளமான பன்முக வாழ்வியல் மடல்களைத் தீட்டிய சிறப்பிற்குரியவர் பெருமகனார் எனக் கட்டுரையாளர் அறிமுகப்படுத்தி வைக்கிறார். 31.12.1917 ஆம் ஆண்டு தோன்றி 08.10.1998 இல் மறைந்த பெருமகனார் ஆயிரம் பிறை கண்டு அழியாப்புகழ் பெற்றுள்ளார் எனக் கட்டுரை முழுவதும் கட்டுரையாளர் நன்கு…
வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 : இலக்குவனார் திருவள்ளுவன்
தொகுப்பாளர் குறிப்பு: எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் (குறள் 355) மெய்ப்பொருள் காண்பதறிவு என மெய்ப்பொருள் காணும் வித்தகர்; ஆனித்தரமான வீரம் செறிந்த பேச்சு வல்லவர். கவிதை பொங்கும் மிடுக்கு நடை. அதுவே இவரது உரைநடை என்னும் வகையில் அழகாகத் தெளிவாகப் பேசும் சொல்லேருழவர். ஆட்சிததமிழிலும் அறிவியல் தமிழிலும் கலைச்சொல்லாக்கங்களிலும் வல்ல தமிழறிஞர். ‘அகரமுதல’ மின்னிதழின் ஆசிரியர். இணைய வழியாகத் தமிழ் பரப்புவதில் முன்னோடியாகத் திகழ்பவர். தமிழ்த்திரு இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களைப், பேராசிரியர் கு.மோகனராசு அவர்களின் வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் தொகுதி 6…
கம்பர் பாடலில் தமிழ் நாட்டின் எல்லைகள்
கம்பர் பாடலில் தமிழ் நாட்டின் எல்லைகள் சோழ நாட்டின் எல்லை: கடல்கிழக்குத் தெற்குக் கரைபொரு வெள்ளாறு குடதிசையில் கோட்டைக் கரையாம் – வடதிசையில் ஏணாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம் சோணாட்டுக் கெல்லையெனச் சொல். (1) [கிழக்கே கடல், தெற்கே (கரைகளில் மோதுமளவு நீர் நிரம்பியுள்ள) வெள்ளாறு, மேற்கில் கோட்டைக்கரை, வடக்கில் ஏணாட்டின் வயல்கள். இவற்றை எல்லைகளாகக் கொண்டு திகழும் 24 காதப் பரப்பு சோழநாடாகும்.] பாண்டிய நாட்டின் எல்லை: வெள்ளா றதுவடக்கு மேற்குப் பெருவழியாம் தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் – உள்ளார ஆண்ட…
தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 1/2 – இரா.பி.சேது(ப்பிள்ளை)
தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 1/2 இவ்வுலகில் முன்னணியில் நிற்கும் நன்னாடுகளெல்லாம் தமது தாய்மொழியைத் தலைக்கொண்டு போற்றுகின்றன. தமிழ்நாட்டில் சில காலத்திற்கு முன்னர் அந்நிய மொழிகளில் பேசுவதும் எழுதுவதும் அறிவுடைமைக்கு அழகென்றும், தாய்மொழியைப் புறக்கணிப்பது தவறன்றென்றும் அறிவாளர் கருதுவாராயினார். ஆயினும், இப்பொழுது அத்தகைய கொள்கைகள் அகன்று ஒழிய, ஆர்வம் நிறைந்த தமிழ்மக்கள் தமிழ்த்தாயை ஆதரிக்க தலைப்பட்டுள்ளனர். தமிழ்மொழியின் நயமறிந்த கவிஞரும் அறிஞரும் அம் மொழி பயிலும் தமிழகத்தை அன்பு ததும்பும் இன்ப மொழிகளாற் போற்றும் அழகு எல்லை யற்ற இன்பம் தருவதாகும். …
இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 51-70 – இலக்குவனார் திருவள்ளுவன்
(இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 31-50 தொடர்ச்சி) இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 51-70 51.காவிரி படப்பை பட்டினம்-தன்னுள் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம் 5.151தோட்டச்சிறப்பு மிக்க காவிரி பாயும் பட்டினத்துள் 52.கங்கை பேர் யாற்றினும் காவிரி புனலினும் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம் 2.120கங்கைப் பேராற்றிலும் காவிரி நீரிலும் 53.முது நீர் காவிரி முன் துறை படுத்தல் – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம் 25.123பழமைச்சிறப்பு மிக்க காவிரியின்துறைக்கண் நீர்ப்படுத்தல் 54.காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு…
இனிதே இலக்கியம் – 8 எண்ணும் வகையிலான கடவுள் – கம்பர்
8 எண்ணுவோர்க்கு எண்ணும் வகையிலான கடவுள் – கம்பர் ஒன்றே யென்னின் ஒன்றேயாம் பலவென் றுரைக்கிற் பலவேயாம் அன்றே யென்னின் அன்றேயாம் ஆமே யென்னின் ஆமேயாம் இன்றே யென்னின் இன்றேயாம் உளதென் றுரைக்கின் உளதேயாம் நன்றே நம்பி குடிவாழ்க்கை நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா கம்பரின் இறை வணக்கப் பாடல்களுள் இதுவும் ஒன்று. “கடவுள் ஒருவரே என நம்பிக்கை உள்ளவர்களுக்குக் கடவுள் ஒருவன்தான்; வெவ்வேறு கடவுள்களாக நம்புவோருக்குப் பலவாகத் தோற்றமளிக்கிறார். அஃதாவது கடவுள் எல்லா உயிர்களையும் இயக்கும் ஒரு தனிப் பெரும் ஆற்றல்…
இனிதே இலக்கியம்! 4 – முத்தொழில் ஆற்றுநரே தலைவர் : – இலக்குவனார் திருவள்ளுவன்
4 முத்தொழில் ஆற்றுநரே தலைவர் உலகம் யாவையும் தாமுளவாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா, அலகி லா விளை யாட்டுடை யார், அவர் தலைவர்! அன்னவர்க் கேசரண் நாங்களே! கவிப்பேரரசர் கம்பர் தம்முடைய இராமகாவியத்தில் எழுதிய தற்சிறப்புப்பாயிரம். “உலகங்கள் யாவற்றையும் தாம் உள்ளவாறு படைத்தலும் அவ்வுலகங்களில் உள்ள அனைத்து வகை உயிர்களையும் நிலைபெறச்செய்து காத்தலும் அவற்றை நீக்க வேண்டிய நேரத்தில் நீக்கி அழித்தலும் ஆகிய மூன்று தொழில்களையும் இடைவிடாமல்(நீங்கலா) அளவற்ற(அலகுஇலா) திருவிளை யாடல்களாகப் புரிபவர் யாரோ, அவரே எங்கள்…
சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ : ஓரங்க நாடகத்தின் பின்னுரை
(வைகாசி 3, 2015 / மே 17, 2015 தொடர்ச்சி) பின்னுரை: பன்முகமுடைய, பல இனங்கள் கொண்ட, பல சமயங்கள் உடைய, பல மொழிகள் பேசும், பல மாநிலங்கள் ஒட்டிய பாரத நாட்டில் விடுதலைக்குப் பிறகு சமயச் சண்டைகளும், இனச் சண்டைகளும், குழுச் சண்டைகளும், கட்சிச் சண்டைகளும் பெருகிக் கட்டுப்படுத்த முடியாமல் நிலைத்துப் போவது வருந்தத்தக்க வரலாற்றுக் கற்களாகும். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியப் பிரிவினைக்குப் பிறகு சமயப்போரை மறுபடியும் தொடக்கி மும்மரமாக நடத்தி வருவது, அவதாரத் தேவனாகத் தவறாகக் கருதப்படும் இராமன்…
“துறைதோறும் கம்பன்” பன்னாட்டுக் கருத்தரங்கம்: மார்ச்சு15-இல் காரைக்குடியில் தொடக்கம்
கம்பன் தமிழ் ஆய்வு மையம் சார்பில் “துறைதோறும் கம்பன்” என்ற தலைப்பில் வரும் மார்ச்சு 15-ஆம் நாள் பன்னாட்டு ஆராய்ச்சிக் கருத்தரங்கம் காரைக்குடியில் தொடங்குகிறது. கம்பர் திருநாளை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள கம்பன் தமிழ் மையம் சார்பில் 2 நாள்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், பேராசிரியர்கள் கலந்துகொள்கிறார்கள். “கம்பன் துறைகள்” என்ற பொதுத் தலைப்பில் மூன்று பிரிவுகளில் மார்ச்சு 15, 16 ஆகிய நாள்களில் காலை 9.30 மணி…