அகல் விளக்கு – மு.வரதராசனார்: 47

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 46. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 19 தொடர்ச்சி மறுநாள் பெருங்காஞ்சியிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. சந்திரன்தான் எழுதினானோ என்று பார்த்தால், அவனுடைய கையெழுத்தே இல்லை. அவனுடைய தந்தையார் சாமண்ணா எழுதியிருந்தார். பிள்ளை வீட்டார் வந்து கற்பகத்தைக் கேட்பதாகவும், பிள்ளை எங்கள் கல்லூரியில் படிப்பதால் குணம் முதலியவை அறிந்து தெரிவிக்கும் படியாகவும் எழுதியிருந்தார். என் மனம் திகைப்பு அடைந்தது, அடுத்த வரியில் பிள்ளை பி.ஏ. படிப்பதாகவும் பெயர் மாலன் என்பதாகவும் குறித்திருந்ததைப் படித்தவுடன் என் அறிவும் மனமும்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 46

  (அகல் விளக்கு – மு.வரதராசனார். 45. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 19 நான் எண்ணியது உண்மை ஆயிற்று. இரண்டு வாரங்கள் கழித்து ஆசிரியர் எனக்கு விடுதி முகவரிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். சந்திரன் தேயிலைத் தோட்டத்தை அடியோடு மறந்துவிட்டான் என்றும், அங்கு உள்ளவர்களுக்கு ஒரு கடிதமும் எழுதவில்லை என்றும், முன்போல் பரபரப்பாக அலையாமல் வீட்டோடு ஒதுங்கியிருந்தாலும் கவலை இல்லாமல் இருக்கிறான் என்றும், தந்தையார் திருமணத்துக்காகப் பெண் பார்த்து வருகிறார் என்றும், ஆவணியில் தவறாமல் திருமணம் நடக்கும்போல் இருக்கிறது என்றும் எழுதியிருந்தார். ‘ஏதாவது…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 45

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 44. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 18 தொடர்ச்சி “சந்திரா!” என்றேன். “அம்மா இல்லையா? போய்விட்டார்களா? ஐயோ! அம்மா நினைவு அடிக்கடி வந்ததே! நான் பார்க்கவே முடியாதா?” என்று விம்மி அழுதான். அப்பா வந்திருக்கிறார் என்று சொல்ல வாயெடுத்து, உடனே அடக்கிக் கொண்டேன். “எப்போது இறந்து போனார்கள்?” என்றான். “ஒரு மாதம் ஆச்சு.” “அய்யோ! என் மனம் என்னவோ போல் இருக்கிறதே” என்று கலங்கினான். சிறிது நேரத்தில் முற்றிலும் மாறியவனாய், “நீ ஏன் இங்கே வந்தாய்! உனக்கு எப்படித் தெரியும்”…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 44

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 43. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 18 தொடர்ச்சி அந்த வழியே நடந்து சென்று அவர் காட்டிய தேநீர்க் கடையை கண்டுபிடித்தோம். அங்கே தேநீர் தந்து கொண்டிருந்த ஆட்களை உற்றுப்பார்த்தேன். இளைஞனாக இருந்த ஒருவனை அழைத்துச் சந்திரனைப் பற்றிக் கேட்டேன். “நான் இங்கே வந்து ஒருவாரம்தான் ஆச்சு, அதோ அவனைக் கேட்டுப்பாருங்கள்” என்று அவன் வேறொருவனைக் காட்டினான். அவனிடம் நானே சென்று மெல்லக் கேட்டேன். அவன் ஒன்றும் விடை கூறாமல், “நீங்கள் யார்? எந்த ஊர்?”, என்று என்னையே திரும்பக்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 43

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 42. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 18 தொடர்ச்சி ‘பார்ப்பதற்கு நல்லபடி இருக்கிறாயே’ப்பா உனக்கு என்ன குறை, சொல். ஆங்கில மருத்துவரிடம் போனாலும், அவர்கள் உடனே தெரிந்துகொள்ளமாட்டார்கள். நம் உடம்பில் உள்ள குறை இன்னது என்று நாமே தெளிவாகச் சொன்ன பிறகுதான் ஆராய்ந்து மருந்து கொடுப்பார்கள். இல்லையானால் ஒன்று கிடக்க ஒன்று செய்வார்கள், ‘முதலில் உன் உடம்புக்கு என்ன என்று சொல்’ என்று கேட்டேன். உடம்பில் சத்து எல்லாம் வீணாகிறது என்றான். ஏன் அப்படி என்றேன். தூங்கும்போது என்றான். உடனே…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 42

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 41. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 18 மாலனும் நானும் மறுபடியும் ஒரே வகுப்பில் சேர்ந்து படிக்கத் தொடங்கினோம். மாலன் விடுதியில் முன் இருந்த இடத்தைவிட்டு, என் வரிசையிலேயே ஐந்தாவதாக உள்ள அறைக்கு வந்து சேர்ந்தான். பழையபடியே நாங்கள் இருவரும் மாறுபாடுகளுக்கு இடையே வேறுபாடுகளுக்கு இடையே அன்பை வளர்த்து நண்பர்களாக இருந்து வந்தோம். அதை நினைத்து ஒவ்வொரு வேளையில் வியப்படைந்தேன். தொடர்பும் பழக்கமும் இல்லாவிட்டாலும் ஒரே வகையான உள்ளத்து உணர்வு இருந்தால் நண்பர்களாக வாழலாம் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். மாலனுக்கும்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 41

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 40. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 17 அடுத்த மார்கழி விடுமுறையில் ஊருக்குச் சென்றபோது, பாக்கிய அம்மையார், வீட்டுக்கு வந்து என்னைப் பற்றியும் சந்திரனைப் பற்றியும் கேட்டார். அவருடைய முகத்தில் முன்போல் மகிழ்ச்சியும் ஊக்கமும் காணப்படவில்லை. கவலையும் சோர்வும் காணப்பட்டன. அவரைப் பார்த்தவுடன், இமாவதி சொன்னது நினைவுக்கு வந்து என் உள்ளத்தை வருத்தியது. எந்தப் பெண்ணையும் – வயதில் பெரியவள் சின்னவள் என்று இல்லாமல் – தன்மேல் ஆசை கொண்டதாக எண்ணி யாரையும் இப்படிப் பழி தூற்றுவது சந்திரனுடைய தீயகுணம்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 23

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 22. தொடர்ச்சி) அகல் விளக்கு இரண்டு வாரம் கழித்துச் சந்திரனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. சந்திரனுடைய கையெழுத்தைக் கண்டதும் எனக்கு அளவில்லா மகிழ்ச்சியாக இருந்தது. அதில் தான் சொல்லாமல் சென்னைக்குப் போனது பற்றியும், நான் தேர்வில் தவறிவிட்டது பற்றியும் வருத்தம் தெரிவித்திருந்தான். தனக்கு மனம் நன்றாக இல்லை என்றும், முன்போல் ஊக்கமாகப் படிக்க முடியவில்லை என்றும் சுருக்கமாக எழுதியிருந்தான், அவன் மனநிலையில் அப்படி மாறுதல் நேர்ந்ததற்குக் காரணம், எசு. எசு. எல். சி. யில் எண்ணியபடி வெற்றிபெற முடியாமற் போனதுதான்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 20

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 19. தொடர்ச்சி) அகல் விளக்கு மறுநாள் கற்பகம் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டாள். பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்ட போதும் அவள் முகம் வாடியே இருந்தது. அங்கே சேர்ந்து பெயர் எழுதிவிட்டுத் திரும்பிய பிறகுதான் முகத்தில் மலர்ச்சி இருந்தது. மறுநாள் சாமண்ணா ஊருக்குத் திரும்பிவிட்டார். கற்பகம் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து என் தங்கை மணிமேகலையோடு சேர்ந்து விளையாடிக் கொண்டும் பள்ளிக்கூடத்தைப் பற்றிப் பேசிக் கொண்டும் இருந்தாள். மணிமேகலையும் அவளும் ஒரே வகுப்பில் படித்தமையால் நெருங்கிய தொடர்பும் ஏற்பட்டது. ஆனால் சந்திரனும் நானும் என்றும் மாறாத…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 19

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 18. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தை வீட்டில் விருந்தினர் வந்தபோதெல்லாம் ஒதுங்கியிருந்த நான், கற்பகம் வந்தபோது அவ்வாறு ஒதுங்கியிருக்கவில்லை. அப்போது மட்டும் அடிக்கடி போய்க் கொண்டிருந்தேன். கற்பகத்தைக் காண்பதற்கென்றே அடிக்கடி போனேன். அவளும் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து, என் அலமாரியையும், பெட்டியையும் திறந்து புத்தகங்களை எடுத்துப் படங்கள் பார்த்துவிட்டுச் செல்வாள். என் தங்கை மணிமேகலையோ தம்பி பொய்யா மொழியோ அப்படி என் அலமாரியிலும் பெட்டியிலும் கை வைத்தால் எனக்கு உடனே கோபம் வரும். ஆனால் கற்பகம் வந்து எடுத்தால்…

சிம்புவின் மறைப்போசைப் பாடலும் மகளிர் அமைப்புகளும்

சிறியன சிந்திக்கலாமா? சிந்தனையைச் சிதற அடிக்கலாமா?   திடீரென்று விழிப்படைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மகளிர் அமைப்புகள் குறித்துக் காண்பதற்கு முன் சிலம்பரசன் செயல்பாடு குறித்துக் காண்போம்.   சிம்பு என்னும் சிலம்பரசனின் செயல் பண்பாடற்றது. மழலை நிலையிலிருந்தே திரைத்துறையில் இருப்பவர்; நடிகர், பாடகர், இசையமைப்பாளர் முதலான பல்வேறு துறைகளில் தந்தை வழியில் மலர்ந்து பல்துறை வித்தகராக வலம் வருபவர்; மேலும் பல முன்னேற்றங்களைக் காணும் திறமையும் வாய்ப்பும் உள்ளவர்; காதலில் தோல்விகளைச் சந்தித்த பொழுதும் தாடி வளர்த்து ஊக்கமிழந்து சோர்வடையாதவர்; தன்னம்பிக்கை மிக்கவர். இத்தகைய…