தோழர் தியாகு எழுதுகிறார் : குறள்நெறி
(தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழ்த் தேசியத்தில் முரண்பாடுகள் – தொடர்ச்சி) குறள்நெறி தமிழ்த் தேசியத்தில் கலாச்சாரம் என்பதை எதன் அடிப்படையில் வரையறுக்கிறீர்கள்? சல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரமா? பண்பாடு என்பதே ஒரு சமூகத்தை ஒன்றுபடுத்தியிருக்கிற விழுமியங்களின் தொகுப்பு. ஆதிக்கத்துக்கும் அடிமைக்குமான போராட்டம் அல்லது நீதிக்கும் அநீதிக்குமான போராட்டம் எப்படிச் சமூகத்தில் வேரூன்றியிருக்கிறதோ, அதேபோல் இரு பண்பாடுகளுக்கிடையேயான ஒரு போராட்டம்தான் ஒரு தேசிய இனப் பண்பாடாக அமைகிறது. பிறப்பினால் வேற்றுமை பாராட்டுவதையும், சாதியத்தையும் நியாயப்படுத்துகிற பண்பாடு ஒருபக்கம். இதை எதிர்த்து, பிறப்பினால் வேற்றுமை இல்லை என்று…
வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 9
(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 8 தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் – 9 தகையணங்குறுத்தல் தலைமகன் தலைவியைக் காணுங்கால் அவள் அழகால் உந்தப்பட்டு அதனால் உளம் வேறுபடுதல். அமைதியாக இருந்த ஆடவனின் உள்ளம் பெண்ணின் தோற்றத்தால் வருந்தத் தொடங்குதல். “தகை அணங்குறுத்தல்’ என்றால் “அழகு வருத்தத்தை அடைவித்தல்’ என்பதாகும். தலைவியைக் கண்ட தலைவன் கூறுகின்றான்: அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு (1081) அணங்குகொல்=வருத்தும் அழகுத் தெய்வமோ?; ஆய்மயில் கொல்லோ= ஆராய்ந்தெடுக்கப்பட்ட…
வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 8
(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார். 7. தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 8 3.இல்லறத் துணைவர் இனிதே சேர்தல் உலகியல் வாழ்வை உவப்புறத் துய்க்க இல்லறமே இனிதெனக் கண்டோம்; இல்லறத்தை இனிதே நடத்த இனிய துணைவி இன்றியமையாதவள் என்று தேர்ந்தோம். இனிய துணைவியை எவ்வாறு அடைவது? இன்று பெற்றோரும் உற்றோரும் துணைவனுக்குத் துணைவியையும் துணைவிக்குத் துணைவனையும் ஓடி ஆடி நாடிச் சேர்க்கின்றனர். சேர்க்கும் போது எல்லாப் பொருத்தங்களையும் இனிதே காண முயல்கின்றனர். ஆனால், உள்ளப் பொருத்தம் உளதா என…
வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 7.
(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 6. தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல் (வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.) சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும்; மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை (57) மகளிர் சிறை காக்கும்=மகளிரைச் சிறையில் வைத்துக் காப்பாற்றும். காப்பு=காவல். எவன் செய்யும்=என்ன செய்யும்? நிறைகாக்கும்=மகளிர் தமது உள்ளத்தை அறத்தின் கண் நிறுத்தும் தன்மையால், காக்கும்=காப்பாற்றும். காப்பே= காவலே, தலை=தலையானது. உலகெங்கணும் ஆண் பெண் உறவு…
வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 6.
(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 5. தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல் (வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.) பெண்ணின் பெருந்தக்க யாவுள? கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின் (54) பெண்ணின்=மனைவியைவிட,பெருந்தக்க=பெருமை மிக்கவை, யாவுள=எவை உண்டு, கற்பு என்னும்=கற்பு என்று சொல்லப்படும், திண்மை=கலங்கா நிலைமை, உண்டாகப் பெறின்=இருக்கப்பெறுமானால். நல்வாழ்க்கைக்குத் துணையாய் இருக்கக் கூடியவள் மனைவியேயாவாள். அவள் தான் கொண்ட கணவனிடம் நீங்காத அன்புடையவளாய் இருத்தல் வேண்டும்….
வஞ்சினமாலை எழுப்பும் சிந்தனைகள் 3/3 – இராம.கி.
(வஞ்சினமாலை எழுப்பும் சிந்தனைகள் 2/3 தொடர்ச்சி) 3/3 அடுத்த கதை மதுரையில் நடந்ததுபோல் புகாரில் நடந்த சகக்கிழத்திகள் கதையாகும். ………………………………………………………………. இணையாய மாற்றாள் குழவிவிழத் தன்குழவி யுங்கிணற்று வீழ்த்தேற்றுக் கொண்டெடுத்த வேற்கண்ணாள் (இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், 2.21 வஞ்சினமாலை 17-19) புகார்வணிகன் ஒருவனுக்கு இருமனைவிகள். (ஒருவனுக்கு இருவரென்பது கண்ணகியைப் பெரிதும் பாதித்திருக்கலாம்.) இருவருக்கும் ஓரிரு வயதுவேறுபாட்டிற் குழவிகளுண்டு. வீட்டுக் கிணற்றுச்சுவரில் உட்கார்ந்த மாற்றாள்குழந்தை தவறிவிழுந்துவிட அதைக்கண்ட ஒரு கிழத்தி “வேண்டுமென்றே திட்டமிட்டுத் தள்ளிவிட்டதாய் மாற்றாளும், பங்காளி, உறவினரும், ஊராரும் சொல்வரோ?” என்று…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 5: இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 106 கார்த்திகை 06, 2046 / நவ. 22, 2015 தொடர்ச்சி) 05 இந்நூற்பா மட்டுமல்ல, மற்றொரு நூற்பா மூலம் தமிழர் உலகிலேயே முதன்முறையாகத்திருமணப் பதிவு முறையைப்பின்பற்றி உள்ளனர் என்பதையும் நாம் அறியலாம். இதனைப் பேராசிரியர் சி.இலக்குவனார் நன்கு விளக்கியுள்ளார். திருமணப் பதிவை இங்கிலாந்து அரசாங்கம் 1653இல் அறிமுகப்படுத்தியது. பிரான்சு நாட்டில் பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக 1791இலும் உருசியப் புரட்சியினால் உருசியாவில் 1917இலும் திருமணப் பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வாறு வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு காலங்களில் திருமணப் பதிவைக் கட்டாயமாக்கினாலும் பல…
‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பதே பழந்தமிழர் பண்பாடு – இலக்குவனார் திருவள்ளுவன்
‘கற்பு என்பது ஆண்களுக்கும் உண்டு’ என்று பாரதி வந்துதான் கற்புநிலையை இருவருக்கும் பொதுவாக வைத்தார் என்று தவறாகக் கூறுபவர்கள் பலர் உள்ளனர். பிறன்மனை விழையாமையை நம் தமிழ் இலக்கியங்கள் வலியுறுத்தியுள்ளன என்றால் ஆடவர் தன் வாழ்க்கைத் துணையன்றி வேறு பெண்ணை விரும்பக் கூடாது என்று ஆடவர் கற்பை வலியுறுத்தியுள்ளார்கள் என்றுதானே பொருள். போர் இறப்புகளால் ஆண்கள் எண்ணிக்கை குறைந்தபொழுது சில வீரர்கள் இருமணம் புரிந்திருக்கலாம். ஆட்சிப் பரப்பைப் பெருக்குவதற்காகச் சில மன்னர்கள் அயல்நாட்டு அரசன் மகளை மணம் புரிந்திருக்கலாம். இலக்கிய மரபிலே…