சட்டச் சொற்கள் விளக்கம் 751-760 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 741-750 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 751-760 751. Address, Special தனிப் பேருரை   ஒரு பொருண்மை குறித்துச் சிறப்பு அழைப்பாளரால் அல்லது சிறப்பு நிலையில் அளிக்கப்பெறும் சொற்பொழிவு. 752. Addressing Evidence ஆதாரங்களை அணுகுதல்   ஒன்றை வெற்றிகரமாக முடிப்பதற்கு, அடிப்படை ஆதாரங்களைத் துணைக் கொள்ளல். 753. Addressing The Court நீதிமன்ற விளி சொல் நீதிமன்றத்தாரை விளிக்கும் மதிப்பிற்குரிய சொல்லாட்சி.   வழக்கினை நீதி மன்றத்தில் எடுத்துரைக்கும் பாங்கு. 754. Adduce Evidence சான்று…

ஊரும் பேரும் 43 : இரா.பி.சேது(ப்பிள்ளை): அட்டானமும் அம்பலமும்

(ஊரும் பேரும் 42 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் தொடர்ச்சி) தென்னார்க்காட்டுக் கடலூர் வட்டத்தில் திருத்தளூர் என வழங்கும் திருத்துறையூரில் உள்ள சிவாலயத்தின் பெயர் தவநெறி என்பது சாசனத்தால் அறியப்படுகின்றது.30 ஊரும் பேரும் 43 அட்டானமும் அம்பலமும்     துறையும் நெறியும் கோயிற் பெயர்களாக அமைந்தவாறே அட்டானம், அம்பலம் என்னும் ஆலயப் பெயர்களும் உண்டு. வீரட்டானம்     தமிழ் நாட்டில் வீரட்டானம் என்று விதந்துரைக்கப்படும் சிவப் பதிகள் எட்டு என்பர். “அட்டானம் என்றோதிய நாலிரண்டும்” என்று திருஞான சம்பந்தர் அவற்றைக் குறித்துப் போந்தார். கெடில…