(தோழர் தியாகு எழுதுகிறார் 215 : காலுடுவெல் கலைவண்ணம்-தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார்கலைமகள் எனும் தொன்மம் இனிய அன்பர்களே! தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் கொள்கை அறிக்கையில் தமிழ்த் தேசியத்துக்கும் சமூக நீதிக்குமான இடையுறவை விளக்கப்படுத்தப் பாவலர் பாரதிதாசனிடமிருந்து நான் எடுத்துக்காட்டிய கவிதை வரிகள் –“சாதி ஒழித்தல் ஒன்று – நல்லதமிழ் வளர்த்தல் மற்றொன்றுபாதியை நாடு மறந்தால் – மற்றப்பாதி துலங்குவதில்லை.” பாரதிதாசனின் இந்த வரிகள் “பாரதி உள்ளம்” என்ற கவிதையில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க செய்தி. இந்த வரிகளின் அடிப்படையில் பாரதியைச் சாதி…