தமிழகத்தின் தலைநகராகத் திருச்சிராப்பள்ளி ! தமிழே கல்வி மொழி!: தங்கர்பச்சன்
திருச்சிராப்பள்ளியில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சன் 15.02.14 அன்று வந்தார். அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது– இந்தியாவின் வடக்கு எல்லையில் உள்ள சென்னை தமிழகத்தின் தலைநகரமாக இருப்பதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்குச் செல்லும் அனைவரும் 10 மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் பயணம் செய்து மிக அல்லல்பட்டுச் சென்னை செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பணச்செலவு, கால இழப்பு, ஊர்திப் புகையினால் மாசு எனப் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. சென்னை போன்ற பெருநகரங்கள் மேலும் விரிவடைவதால் வேளாண் நிலங்கள்…