திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 24 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)  24 ‘கல்வி ‘ அதிகாரத்தின் சிறப்பு அடுத்து வருவது ‘கல்வி’ என்னும் அதிகாரம். கல்விக்கு மிகுதியாகச் செலவழிக்கும் அரசே நல்லரசு என்பது அரசறிவியலாளர்கள் கூற்று. கல்வியில்லா நாட்டில்தான் கடுங்கோன்மை தழைக்கும். எனவேதான் அரசறிவியலாளர்கள் அரசியலில் கல்விக்கும் முதன்மை அளிக்கின்றனர். எனவேதான் திருவள்ளுவர் பொருட்பாலில் அரசியலில் அரசின் தலைமையைக் கூறும் இறைமாட்சிக்கு அடுத்துக்…

புதிய பாடத்திட்டம்:  இந்தியச்சார்புத் திட்டம் வேண்டவே வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்

புதிய பாடத்திட்டம்  : இந்தியச்சார்புத் திட்டம் வேண்டவே வேண்டா!  தமிழக அரசு புதிய பாடத்திட்ட வரைவை வெளியிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு முடிய உள்ள நிலையில் 2017 ஆம் ஆண்டிற்கான வரைவாக அறிமுகப்படுத்துவது ஏன்? மத்திய அரசின் பொதுத்தேர்விற்காக இவ்வாண்டுத் திட்டமாகக் குறித்துள்ளனர் எனில், கல்வியாண்டு முடிந்த சூழலில்  எவ்வாறு புகுத்துவர் என்று தெரியவில்லை.  பாடத்திட்ட வரைவை 22.05.2017 அன்று வெளியிட்டிருந்தாலும் இணையத்தளத்தில் தொடக்கத்தில் முகப்புப்பக்கம் மட்டும் வந்து உரிய எதைச் சொடுக்கினாலும் முகப்புப் பக்கமே மீண்டும் வந்த நிலைதான் இருந்தது. பள்ளித் தலைமையாசிரியர்கள் சிலரிடம்…

பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 5/6

(பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 4/6 தொடர்ச்சி)   பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 5/6 ‘கல்வி’ க்கான விளக்கம் ‘கல்வி’ என்னும் அதிகாரத்தை விளக்கும் பொழுது தாய்மொழிவாயிலான கல்வியையே பெரும்பேராசிரியர் விளக்குவது வேறு யாரும் தெரிவிக்காத ஒன்றாகும். அவரின் விளக்கம் வருமாறு: “கற்றற்குரிய நூல்களைக் கற்றல் கல்வியாம். இங்குக் கல்வியென்பது தாய்மொழி வாயிலாகக் கற்பதுதான். மக்கள் ஆட்சி நன்கு நடைபெற மக்கள் எல்லாரும் கல்வி கற்றவர் ஆக வேண்டுமென்றால் அவர்கள் தம் தாய்மொழியில் கற்றலைத்தான் குறிக்குமேயன்றி வேற்று…

கல்வியில் ஏற்படும் முன்னேற்றமே நாட்டில் வளர்ச்சியை உண்டாக்கும் -ச.ம.உ. அம்பேத்குமார்

கல்வியில் ஏற்படும் முன்னேற்றமே நாட்டில் வளர்ச்சியை உண்டாக்கும்       – ஊர்ப்புற ஆசிரியர்களுக்கு இலவச மடிகணிணி  வழங்கும் விழாவில்                                வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் உரை –   வந்தவாசி.அக்.12.வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டுஊரில் உரேகா கல்வி இயக்கமும் இலயா அறக்கட்டளையும் இணைந்து  ஊர்ப்புற ஆசிரியர்களுக்கு இலவச மடிகணிணி  வழங்கும் விழாவை நடத்தின.   மன்பதையில் கல்வியினால் ஏற்படும் முன்னேற்றமே ஒரு நாட்டில்…

நமக்குத் தேவை மனிதநேயக்கல்வியே! – இலக்குவனார் திருவள்ளுவன்

நமக்குத் தேவை மனிதநேயக்கல்வியே!   சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு. (திருவள்ளுவர், திருக்குறள் 422)   மனம்போன போக்கில் செல்லாமல் நன்மை தீமைகளை ஆராய்ந்து தீயனவற்றை விலக்கி, நல்லனவற்றின்பால் கருத்து செலுத்தச் செய்வதே அறிவு என்கிறார் திருவள்ளுவர். பழியும் பாவமும் பொருள்கேடும் வராமல்  நன்மைப்பக்கம் செலுத்துவதே அறிவு என மணக்குடவர் விளக்குகிறார். எனவேதான், மனம்போன போக்கெல்லாம் போக வேண்டா (உலகநாதர் : உலகநீதி  3.1) என்று உலகநாதர் கூறியுள்ளார். இத்தகைய அறிவை நமக்குத் தருவதுதான் கல்வி.   “கற்றது கைம்மண்…

கல்வியை ஆட்சியின் கடமையாக்கியவர் திருவள்ளுவர் – குன்றக்குடி அடிகளார்

கல்வியை ஆட்சியின் கடமையாக்கியவர் திருவள்ளுவர்   திருவள்ளுவர்தான் முதன்முதலாக ஆட்சியின் கடமைகளில் கல்வி வழங்குவதையும் ஓர் அரசியல் கடமையாகச் சேர்த்துக் கூறியவர். ஆட்சியின் திறனுக்கும் ஒழுக்க நெறி நிற்பதற்கும், வளமான வாழ்க்கை அமைவதற்கும், ஆன்மீக வாழ்க்கைக்கும் கல்வியே அடிப்படை! தவத்திரு குன்றக்குடி அடிகளார்: அடிகளார் அருள்மொழி 500 : தொகுப்பு: குன்றக்குடி பெரிய பெருமாள் பக்கம்.66

வாகைச்செல்விக்கு வாழ்த்துகள் வரையில! – இலக்குவனார் திருவள்ளுவன்

வாகைச்செல்விக்கு வாழ்த்துகள் வரையில!  இப்போதைய – தி.பி.2047 / கி.பி. 2016 ஆம்  ஆண்டுச் – சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் முதல்வர் புரட்சித்தலைவி  செயலலிதாவிற்கு வாழ்த்துகள்!   ‘பள்ளிக்கணக்கு புள்ளிக்கு உதவாது’ என்பர். அதுபோல் புள்ளிவிவரங்களை அடுக்கி, உண்மையான வெற்றியல்ல இது எனச் சில தரப்பால் கூறப்பட்டாலும் நம் அரசியலமைப்பின்படி இதுதான் வெற்றி.   ஒரு வாக்கு கூடுதலாகப் பெற்றாலும் மக்களாட்சியில் இதுதான் வெற்றி.   மொத்தத்தில் மிகுதியான வாக்குகள் பெற்றுச் சில இடங்களில் வெற்றி பெற்ற கட்சியைவிட…

கற்றால் தீரும் இழிதகைமை

கற்றால் தீரும் இழிதகைமை எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான் மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும் மொழித்திறன் முட்டறுத்த நல்லோன் முதல்நூல் பொருள் உணர்ந்து கட்டறுத்து வீடு பெறும். பரிமேலழகர் மேற்கோள் பாடல்

யாவினும் புண்ணியம் கல்வியறிவித்தலே!

யாவினும் புண்ணியம் கல்வியறிவித்தலே! வீதிதோறும் இரண்டொரு பள்ளி நாடு முற்றிலும் உள்ளனவூர்கள் நகர்க ளெங்கும் பலபல பள்ளி தேடு கல்வியி லாதொ ரூரைத் தீயி னுக்கிரை யாக மடுத்தல் கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை கேண்மை கொள்ள வழியிவை கண்டீர் … …. … இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல் இனிய நீர்த்தண் சுனைக ளியற்றல் அன்ன சத்திர மாயிரம் வைத்தல் ஆல யம்பதி னாயிர நாட்டல் … …. அன்ன யாவினும் புண்ணியங் கோடி ஆங்கோ ரேழைக் கெழுத்தறி வித்தல். பைந்தமிழ்த் தேர்ப்பாகன்…

கல்வி கேள்வியில் வல்லவர்களை மதித்த பழந்தமிழகம் – முனைவர் ப.கிருட்டிணன்

கல்வி கேள்வியில் வல்லவர்களை மதித்த பழந்தமிழகம் கல்வியாளர்கள் ‘நல்லிசைப் புலவர்’      ( தொல்.பொருள் 313.14) ‘புலன் நன்குணர்ந்த புலமையோர்’   (தொல்.பொருள் 12:3) ‘வாய்மொழிப் புலவர்’  (தொல்.பொருள்.387:2) ‘நூல் நவில் புலவர்’   (தொல்.பொருள்.467:2) ‘உயர்மொழிப் புலவர்’  (தொல்.பொருள்.482:3) ‘தொன்மொழிப் புலவர்’  (தொல்.பொருள்.550:3) ‘நுணங்கு மொழிப் புலவர்’   (தொல்.பொருள்.653:5) என இனம் குலம் சுட்டாமல் பொதுப்படையாகப் பாராட்டப் பெற்றனர். மிக எளிய குலத்தில் பிறந்த பாணர்கள் கூடத் தம் கலைச் சிறப்பால், ‘முதுவாய் இரவலர்’     (சிறுபாண். 40; புறம் 48:7)…

குல வேறுபாடில்லை; கற்றவர்க்கே சிறப்பு

பழந்தமிழ் நாட்டில் குல வேறுபாடில்லை; கற்றவர்க்கே சிறப்பு   நாடு தழுவிய ஒரே பண்பாடு. ஓரினப் பான்மை உருவாவதற்குக் காரணமாக இருந்தவற்றில் முதலானது பரந்து விரிந்துபட்ட கல்வியாகும். தமிழ்நாட்டில் நிலையான வருண வேறுபாடு அதன் காரணமாக ஏற்படும் உயர்வு தாழ்வு ஆகியன சங்கக் காலத்தில் வலுவாக இருந்ததில்லை. ஏன்? தமிழ்நாட்டு வரலாற்றில் எந்தக் காலத்திலுமே இருந்ததில்லை. காரணம், அப்பண்பு தமிழ்நாட்டுக்குரிய பண்பே அன்று. எக்குலத்தவராயினும் ஒருவர் கல்வியில் உயர்வு பெற்றிருந்தால் அவருக்குச் சமுதாயத்தில் மிகுந்த மதிப்பு இருந்தது. எந்த மன்னனின் அவைக்கு வேண்டுமாயினும் சென்று…