அகதியம்மா இந்த மண்ணில்! – கவிஞர் அம்பாளடியாள்

அகதியம்மா இந்த மண்ணில்!   இத்தரையில் வாழ்ந்தாலும் தமிழை இன்றும் இன்னுயிராய்ப் போற்றுகின்றோம் அதுவே போதும்! நித்தமெமை வாட்டுகின்ற துயரும் பொய்க்கும்! நின்கருணை யாலெம்மின் கடமை ஓங்கும்! அத்தனவன் அருள்பெற்றும் இயற்றும் பாக்கள் அம்புவியில் எம்புகழை ஏந்திச் செல்லும்! பெற்றவளை யாமிழந்தோம் கண்ணீர் விட்டோம்! பேறுபெற்றோம் இன்றமிழைப் போற்றிப் பாட!   சித்தத்துள் பேராசை தானும் இல்லை! சிங்காரத் தமிழ்மீதே காதல் கொள்ளை! அத்தனையும் தேனாறாய் ஓட வேண்டும்! அகத்தூய்மை பெற்றுலகில் வாழ வேண்டும்! மொத்தத்தில் அகதியம்மா இந்த மண்ணில்! மொழிகாக்கத் துடிக்கின்றோம் தமிழே!…

கம்பன் புகழைப் பாடு மனமே ! – அம்பாளடியாள்

கம்பன் புகழைப் பாடு மனமே !   கம்பன் வடித்தநற் காவியம் கேட்டாலே வம்பன் எனினும் வசப்படுவர் ! -செம்பொன் நிகர்த்த கவிதைகள் நெஞ்சுள்  இனிக்க விகர்ப்பம் தணியும் விரைந்து! விஞ்சும் தமிழால் வியந்திடச் செய்தவர் ! நெஞ்சும் உரைக்கும் நினைவாளர்!- அஞ்சாதே கம்பன் இருக்கக் கவலைகள் தாம்எதற்கு?! செம்பட்டுப் போன்றே செழிப்பு! அஞ்சும் மனத்தின் அவலம் குறைக்கவே கொஞ்சும் தமிழைக் குவித்தவர்! -நெஞ்சும் சுவைக்கும்  பொருளைச்  சுரந்தவர் கம்பர் ! அவைக்கும் அவரே அழகு ! பாட்டால்  உயிர்கொடுத்த பாவலர் !கம்பரே வாட்டம் தணிக்கவல்ல வாழ்வுமாவார்!- கேட்டாலே…

கொன்றவர் எவரும் வென்றதில்லை! – அம்பாளடியாள்

கொன்றவர் எவரும் வென்றதில்லை! மரண ஓலம் கேட்கிறதே! – எங்கள் மனத்தை அதுதான் தாக்கிறதே இரண்டுங் கெட்ட நிலையினிலே – எங்கள் இதயம் இங்கே துடிக்கிறதே! வெடி குண்டு வைத்துத் தாக்காதே விடியலை எங்கும் போக்காதே தீவிரவாதம் ஒழிக ஒழிகவென தீட்டிய பாக்களை வெறுக்காதே! குழந்தைகள் செல்லும் வண்டியில்  கூடக் குண்டுகள் வைப்பதில் நியாயமென்ன? எதிரியைக் கொல்லும் கொலைவெறியதனால் எவரையும் அழிப்பதில் நீதி என்ன? மனித மனங்களில் வன்மங்கள்- இதை மாற்றிட வேண்டும் வாருங்கள்! உலகம் அழிவதைப் பாருங்கள்- இதை ஒவ்வொருவருமே உணருங்கள்! சங்கடம்…

வாழ்ந்து காட்ட வேண்டும்! – அம்பாளடியாள்

வாழ்ந்து காட்ட வேண்டும்! வலிமையுள்ள மனிதனாக வாழ்ந்து காட்ட வேண்டும் ! எளிமையான வாழ்வுக்கே இடமளிக்க வேண்டும்! தனிமையிலும் இனிமை காண தன்னடக்கம் வேண்டும் ! தரணியெல்லாம் போற்றும் வகை தயவு நெஞ்சில் வேண்டும்! கலியுகத்தின் போக்கை மாற்ற கருணை தம்முள் வேண்டும் ! கடவுள் என்றும் கொண்டாட கடமை உணர்தல் வேண்டும் ! பழியுணர்வை போக்க வல்ல பாசம் இங்கே வேண்டும் ! பகைவரையும் மன்னிக்கும் பக்குவமும் வேண்டும் ! மனித குலம் உயிரினத்தை மதித்து வாழ வேண்டும்! மரணம் வரும் என்ற…

இன்னும் உறங்கிடும் ஞாபகமோ! – கவிஞர் அம்பாளடியாள்

  முல்லைப்பூ வாடுமுன் வாரா யோ! செந்தமிழ் போற்றிடும்  சேவக னே -உன்னைச் சேர்ந்த வர்க்கேது துன்பமிங் கே அந்தியில் பூத்திடும் தாமரை யோ -இவள் அன்பைப் பொழிந்திடும் தேவதை யோ! கட்டிக் கரும்பென வந்தவ னே -சிறு கைவிர லாலெனை வென்றவ னே கொட்டிக் கொடுத்திடு கோமக னே -இன்பா கோடிச்சு கம்தரும்  மோகன மே! என்னை ஈர்த்தவன்  நெஞ்சினி லே  – பொங்கும் இன்தமிழ்க்  கற்பனைக் காவிய மே தன்னில் சரிபாதி என்றவ னே -உள்ளம் தஞ்சமென் றுன்னடி தேடுதிங் கே! தென்னை…

பாடு மனமே பாடு ! – கவிஞர் அம்பாளடியாள்

பாடு மனமே பாடு !   எங்கள் கவியரசர் இயற்றித்  தந்தபொருள் ஏந்தும் இசையளிக்கும் இன்பம்! பொங்கும் மனத்துயரைப்  பொசுக்கி வாழ்வளிக்கும் போதும் இனியெதற்குத் துன்பம் ! இன்னல் வரும்பொழுதும்  இனிய கானமழை என்றும் மனச்சுமையைப் போக்கும் ! அன்னை மொழியழகும் அரும்பும் அசையழகும் அமுதச் சுவையழகைத் தேக்கும் ! பாடும் குயிலுடனே பருவ மங்கையவள் ஆடிக் கழித்திடுவாள் தினமே ! நாடி வரும்துயரும்  நகரும் இன்னிசையால் நல்ல மருந்திதுதான் மனமே ! காதல் உணர்வுகளைக் கலந்து வந்தஇசை ஆளும் எமதுயிரை  இதமாய் ! பாழும்…

அடையா ளத்தை இழப்பதற்கா பாடுபட்டோம்! – கவிஞர் அம்பாளடியாள்

அடையா ளத்தை  இழப்பதற்கா பாடுபட்டோம்!   என்னுயிரே! பொன்மொழியே! உப்பில்லாப் பண்டமென ஒதுக்கி வைக்கும் ஊராரின் கண்களுக்கு விருந்து வைக்க இக்கணமே நீவருவாய் என்றன் நாவில் இன்றமிழின் ஆட்சியோங்கத் தடைகள் நீங்கும்! எப்பொழும் உன்னையன்றி என்றன் கண்கள் ஏறெடுத்துப் பார்த்ததில்லை எதையும் இங்கே! தப்பான பாடலுக்கோர் பரிசு தந்தால் தமிழ்மீதே ஆணையதை வாங்க மாட்டேன்! நக்கீரன் பரம்பரையில் உதித்த என்றன் நரம்பறுந்து போனாலும் உறங்க மாட்டேன்! திக்குமுக்காய் ஆடவைக்கும் கேள்விக் கெல்லாம் திமிராகப் பதிலளிக்கும் திறனைத் தந்து பக்கத்தில் நீயிருந்து காக்கும் போது பைந்தமிழே…