திருக்குறள் அறுசொல் உரை: 113. காதல் சிறப்பு உரைத்தல் : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை: 112. நலம் புனைந்து உரைத்தல் – தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல் 113. காதல் சிறப்பு உரைத்தல் தகுதலைவனும், தலைவியும், தம்தம் மிகுகாதல் சிறப்பை உரைத்தல். (01-05 தலைவன் சொல்லியவை) பாலொடு தேன்கலந்(து) அற்றே, பணிமொழி வால்எயி(று) ஊறிய நீர். “பணிவு மொழியாளின் வாய்ஊறல், பால்,தேன் கலவைபோல் இனிக்கும்.” உடம்பொ(டு) உயிர்இடை என்ன, மற்(று) அன்ன, மடந்தையொ(டு) எம்இடை நட்பு. “உடம்புக்கும்,…