மாணவ மாணவியர்க்கு இருபதாயிரம் உரூபாய்க்கான பரிசுப் போட்டிகள்
மாணவ மாணவியர்க்கு இருபதாயிரம் உரூபாய்க்கான பரிசுப் போட்டிகள் காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பராமாயணப் போட்டிகள்: கம்பராமயண ஒப்பித்தல் போட்டி –1 பேரா. மு.பழனியப்பன் தன் தந்தையார் பெயரால் நிறுவியுள்ள தமிழாகரர் பழ. முத்தப்பனார் பரிசு. பிரிவு -9,10,11,12 மாணாக்க மாணக்கியர்களுக்கானது. நாள்- தை 15, 2048 / 28.1.2017 நேரம் 0 9.30 மணி இடம்- கிருட்டிணா கல்யாணமண்டபம், கல்லுக்கட்டி மேற்கு, காரைக்குடி எதிர்பார்க்கும் தகுதிகள்: உச்சரிப்பு, ஒலிநயம், மெய்ப்பாடு இவற்றோடு பொருள் அறிந்து வருதலும்…
காரைக்குடி தாய்க் கம்பன் கழக மாதக் கூட்டங்களின் ஏழாம் ஆண்டுதொடக்கவிழா
அன்புடையீர் வணக்கம். கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய்க் கம்பன் கழக மாதக் கூட்டங்களின் ஏழாம் ஆண்டுதொடக்கவிழா ஆனி 19, 2047 / 2.7.2016 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்குக் கல்லுக்கட்டி மேற்கு கிருட்டிணா கல்யாணமண்டபத்தில் நடைபெறுகிறது. 6.00மணி – இறைவணக்கம் 6.05. வரவேற்புரை – பேராசிரியர் மு.பழனியப்பன் 6.10 உரை : முதல் கூட்டத்தில் முதல் பொழிவாற்றிய திரு. . இரா. மாது, திருச்சிராப்பள்ளி கம்பன் கழகச் செயலாளர். 6.50 பாராட்டு அறிமுகம்: திரு. கம்பன் அடிசூடி 6.55 –…
கவியரசர் முடியரசர் அவைக்களம் நடத்தும் சிறப்புப் பட்டிமன்றம், காரைக்குடி
ஆனி 04, 20147 / 18.06.2016 மாலை 5.30
தேவகோட்டையில் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு
ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு! தனியார்/ பன்னாட்டுப் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு வெற்றி தேவகோட்டை :- தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தனியார்-பன்னாட்டுப் பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றுச் சார் ஆட்சியரிடம் பரிசு பெற்றதற்குப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தோரை மாணவர் (இ)யோகேசுவரன் வரவேற்றார். பள்ளித்தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். காரைக்குடியில் உள்ள தனியார் -பன்னாட்டுப் பள்ளியில் நடைபெற்ற அனைவருக்குமான ஓவியப்போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் திவ்யசிரீ,…
குறுஞ்செயலி உருவாக்கப் பயிலரங்கம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி
சித்திரை 26 – வைகாசி 02, 2047 / மே 09- மே15, 2016 கணித்தமிழ்ப்பேரவை தமிழ் இணையக்கல்விக்கழகம்
கம்பன் கழகம், காரைக்குடி : மே மாதக் கூட்டம், 2016
67 ஆம் கூட்டம் அன்புடையீர் வணக்கம் கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் மே மாதக் கூட்டம் கல்லுக்கட்டி மேற்கு கிருட்டிணா திருமண மண்டபத்தில் சித்திரை 24, 2047 / மே 07, 2016 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது. நிகழ்நிரல் இறைவணக்கம் – செல்வி எம். கவிதா வரவேற்புரை- திரு. கம்பன் அடிசூடி கம்பராமாயணத்தில் இயற்கை- பொழிவு. திரு. தி.கி. வேதராசா அந்தமானில் நடைபெற்ற கம்பராமாயண மூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கு பற்றியும் காரைக்குடி தாய் கம்பன் கழகச் சீராட்டு…
2016 ஆம் ஆண்டு கம்பன் திருவிழா (4 நாள்), காரைக்குடி
காரைக்குடி கம்பன் கழகத்தின் 2016 ஆம் ஆண்டு கம்பன் திருவிழா காரைக்குடி, கல்லுக்கட்டி கிருட்டிணா திருமண மண்டபத்தில் வரும் பங்குனி 08, 2047 / 21.3.2016 முதல் பங்குனி 10, 2047 / 23.3.2016 வரை நடை பெற உள்ளது. பங்குனி 11, 2047 / 24.03.2016 அன்று கம்பன் அருட்கோயில் (கம்பர் சமாதி) உள்ள ஊரான நாட்டரசன் கோட்டையில் நடைபெற உள்ளது. அனைவரும் வருக. அழைப்பிதழ் விபரம் பின்வருமாறு காரைக்குடி கம்பன் கழக நிகழ்ச்சி நிரல் (2016) பங்குனி 08, 2047…
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா,காரைக்குடி
மாசி 25, 2047 / மார்ச்சு 08, 2016 தமிழ்த்தேச மக்கள் கட்சி
கம்பன் கழகம், காரைக்குடி போட்டி முடிவு விவரம்
கம்பன் கழகம், காரைக்குடி தை 17, 2047 / 31-1-2016 ஆம் நாள் காரைக்குடி கம்பன் கழகத்தின்அனைத்துக் கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டிகளும், பள்ளிகளுக்கான ஒப்பித்தல் போட்டிகளும் காரைக்குடி கிருட்டிணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றன. 28 கல்லூரி மாணாக்கர்களும், 60 பள்ளி மாணாக்கர்களும் பங்கேற்றுக், கீழ்க் குறிப்பிடுவோர் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி மு.சாசகான் கம்பராமாயணத்தில் முதற் பரிசினையும் (உரூ 3.500), திருக்குறளில் இரண்டாம் பரிசினையும் (உரூ 1,000) வென்றார். அமராவதிபுதூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி…
மூளைச் சலவைக்கு உள்ளாகும் இந்தியர்கள்- மின்னஞ்சல் சிவா ஐயாத்துரை
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள அரங்கத்தில்’சுவாசம் சாப்ட்’ விருதுகள் தொழிற்துறை சார்ந்த வல்லுநர்கள் 75 பேர்களுக்கு வழங்கப்பட்டன. வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ‘சுவாசம் சாப்ட்டு’ தலைவர் கிருட்டிணன், செயல் அதிகாரி கார்த்திகேயன், நிதி அதிகாரி கணேசு, கோவிலுார் ஆதினம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமி, மரு. சுரேந்திரன், வித்யாகிரி பள்ளி முதல்வர் சுவாமிநாதன் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினாராகப் பங்கேற்ற மின்னஞ்சலை(‘இ மெயிலை’)க் கண்டுபித்த சிவா ஐயாத்துரை, “வெளிநாட்டவரால் நாம் மூளைச் சலவை செய்யப்படுகிறோம்” என்றார். அவர் உரை வருமாறு:- …
குமுக வளர்ச்சி 4 – முனைவர் இராம.கி.
இதுவரை கூறிய இந்த உள்கட்டுமானங்களை எல்லாம் நாம் சரிசெய்யவில்லையென்றால், நிலத்தடி நீர் கிடைப்பதிற் சிக்கல் ஏற்படுமென்றால், நம் ஊர்ப்பக்கங்களில் ஏற்படும் வீட்டுமனைத் தேவைகள் வெடித்துச் சிதறும் குமிழ்போல ஆவது வெகுதொலைவில் இல்லை. இப்பொழுது நம் ஊர்கள் சற்று தகைவோடு(stress)தான் உள்ளன. நம் ஊர்ப்பக்கங்களில் பொதுவாகவுள்ள பொருளியல் உந்துகளைச் சற்று எண்ணிப்பார்ப்போமா? இவற்றில் நிறைகளும் இருக்கின்றன; குறைகளும் இருக்கின்றன. முதலில் நிறைகள்: சுற்றுவட்டாரத்திலுள்ளோர் தேடிவந்து வாங்கும் நிலைவெள்ளிப் பாத்திரங்களின் கணிசமான உருவாக்கமும் விற்பனையும் அதே போல வைர, தங்க நகைகளின் உருவாக்கமும், விற்பனையும், செட்டிநாட்டுப் பருத்திச்…
பள்ளுபாடலுக்குத் துள்ளியாடுவோம்! – சொ.வினைதீர்த்தான்
சிற்றிலக்கிய வகைகளில் குறிப்பிடத்தக்க சிறப்பு கொண்டது பள்ளு இலக்கியம். 18 ஆம் நூற்றாண்டு மக்கள் வாழ்க்கையைக் கம்பனின் கவிநயம்போல் இனிய கூறும் இலக்கியம் முக்கூடற்பள்ளு. இதன் சிறப்பு குறித்துத் திரு சொ.வினைதீர்த்தான் “பள்ளு இலக்கியம்-முக்கூடற்பள்ளு” என்னும் தலைப்பில், ஆனி 28, 2045 / 12.07.2014 சனிக்கிழமையன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க இலக்கியக் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். காரைக்குடியில் ஒவ்வொரு திங்களும் இரண்டாவது சனிக்கிழமையன்று மாலை, சங்கத்தின் சார்ப்பாக இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 2004 தொடங்கி நடக்கிற நிகழ்வில் எழுபத்து நான்காவது…