காரைக்குடியில் வினைதீர்த்தானின் தன் முன்னேற்றப் பயிலரங்கம்

ஆனி 25 , 2045 / சூலை 9, 2014 அன்று காரைக்குடி இராம.சு.இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 80 மாணவ மாணவியருக்குத் தன்முன்னேற்றப் பயிலரங்கம் நடைபெற்றது. தன்னார்வத் தொண்டு ஆர்வலர் திரு சொ.வினைதீர்த்தான் இதனைச் சிறப்பாக நடத்தினார். பரம்பரைச்சிறப்புடைய இந்நகராட்சிப்பள்ளி 1938 இல் தொடங்கப்பட்டு நடுநிலைப்பள்ளியாகச் செயல்பட்டு வந்தது. சென்ற ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டு ஆற்றல்மிகு தலைமை ஆசிரியர் திரு ஆ.பீட்டர் இராசா வழிநடத்தலில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. திரு பீட்டர் இராசா பயிலரங்கு நடத்த…

காரைக்குடியில் வண்ணக் கோலப்போட்டி- சொ. வினைதீர்த்தான்

அண்மையில் அழகப்பா பல்கலைக் கழகத்தின் நுண்கலை- பண்பாட்டு மையத்தின் சார்பில் அதன் கல்லூரிகளின் மாணவ மாணவிரிடையே  நாட்டுப்புறப்பாடல்கள், தனிப்பாடல்கள், கோலப்போட்டி முதலானவை   போட்டிக்கான ஓவியங்கள் கண்ணைக் கவர்ந்தன. உள்ளத்தைக் கொள்ளைகொண்டன. பல கோல ஓவியங்களில் எழுதியிருந்ததைக்கொண்டு போட்டிக்கான தலைப்பு “எண்ணங்களின் வண்ணங்கள்’ என அறிந்தேன். கண்டு களித்த வண்ணக் கோலங்கள் சில : – சொ. வினைதீர்த்தான் [கோல மாவில் ஓவியங்கள் வரைவதே வண்ணக் கோலம் என்றாகிவிட்டது. அவ்வாறில்லாமல், புள்ளிகள் மூலம் ஓவியங்கள் அமையும் வண்ணக்கோலம் பெருக வேண்டும். தமிழக நாகரிக, பண்பாட்டு, வரலாற்று…

முனைவர் பட்டம் பெற்ற 80 அகவை இளைஞர் சித்தர் அ.பாண்டியன்

  18.02.2014 அன்று  நடைபெற்ற அழகப்பா கல்லூரியின் 26 ஆவது பட்டமளிப்பு விழாவில்  வேந்தர் ஆளுநர் உரோசையா அவர்கள் தலைமையில் நீதியரசர் இராமசுப்பிரமணியன் பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். நேர்த்தியான அரங்கில் 157  முனைவர் பட்டதாரிகளும், 112 முதன்மை விருது பெற்ற பல்வேறு புலங்களைச் சேர்ந்த பட்டதாரிகளும் நேரில் பட்டம் பெற்றனர். இளைஞர் பட்டாளத்தையும் அவர்களுடைய பெற்றோரின் பெருமைமிகு பாச முகங்களையும் கண்டது மகிழ்ச்சிக்குரியது. முனைவர் பட்டம் பெற்றவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் ஒளிவீசும் கண்களும், அன்பு ததும்பும் சொற்களும்கொண்ட 80  அகவை இளைஞர் முனைவர் சித்தர் அ.பாண்டியன்….

“துறைதோறும் கம்பன்” பன்னாட்டுக் கருத்தரங்கம்: மார்ச்சு15-இல் காரைக்குடியில் தொடக்கம்

   கம்பன் தமிழ் ஆய்வு மையம் சார்பில் “துறைதோறும் கம்பன்” என்ற தலைப்பில் வரும் மார்ச்சு 15-ஆம்  நாள் பன்னாட்டு ஆராய்ச்சிக் கருத்தரங்கம் காரைக்குடியில் தொடங்குகிறது.   கம்பர் திருநாளை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள கம்பன் தமிழ் மையம் சார்பில் 2 நாள்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், பேராசிரியர்கள் கலந்துகொள்கிறார்கள்.   “கம்பன் துறைகள்” என்ற பொதுத் தலைப்பில் மூன்று பிரிவுகளில் மார்ச்சு 15,   16 ஆகிய நாள்களில் காலை 9.30 மணி…

திருக்குறள் திலீபனின் நூறாவது கவனகக் கலை நிகழ்வு

  கவனகக் கலையைத் தானும் கற்றுப் பிறருக்கும்  கற்பித்து வரும் தமிழ்ஆர்வ இளைஞர் திருக்குறள் திலீபன்.  இவரது நூறாவது நிகழ்வு காரைக்குடியில் 08.12.13 ஞாயிறு காலை நடத்தப் பெற்றது.   தமிழக மக்களின் பழங்கலைகளில்,  கவனகக் கலை நுண்ணாற்றலை வெளிப்படுத்தும் சிறந்த கலையாகும். ஒரே நேரத்தில் தன்னைச் சுற்றி நடக்கக் கூடிய பல்வேறு நிகழ்வுகளை, நினைவில் நிறுத்தித் தொகுத்து வழங்கல் நினைவாற்றலின் உயர்ந்த நிலையாகும். நினைவாற்றலுடன் படைப்பாற்றலும் இணைந்ததே கவனகக்கலை.   திலீபன் காரைக்குடியைச் சேர்ந்த, தங்கசாமி – சுமதி  இணையரின் மகனாவார்; சென்னை…

ஒட்டோவியத்தில் திருவள்ளுவர் – காரைக்குடிப் பள்ளியின் அருந்திறல்

காரைக்குடியில் உள்ள பள்ளி ஒன்றின் மாணாக்கர்கள் திருவள்ளுவர் உருவத்தைத் துண்டுத்தாள்கள் மூலம் உருவாக்கி அருவினை  ஆற்றியுள்ளனர். புகழ்மிகு இச்செயல் பற்றிய விவரம் வருமாறு : காரைக்குடி தி லீடர்சு பள்ளிக்குழுமம் 2004 ஆம் ஆண்டு  பொறியாளர் இராசமாணிக்கம் அவர்களால் தொடங்கப்பட்டது. 27 குழந்தைகளோடு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் இன்று 1800 குழந்தைகள் பயில்கின்றனர். மத்தியக் கல்வித்திட்டம், பதின்மமுறை, மழலையர் நிலை  என மூன்று பள்ளிகள் உள்ளடங்கியது இப்பள்ளிக்குழுமம். மாணாக்கர்களிடம் தமிழ் உணர்வை வளர்க்கவும் திருவள்ளுவரைப் போற்றும் உணர்வை ஏற்படுத்தவும், இலிம்கா (Limca) அருந்திறலுக்காக மாணாக்கர்கள் துண்டுத்…