தனித்தமிழ் நூற்றாண்டில் தமிழுக்குச் செய்யவேண்டுவன! – மா. பூங்குன்றன்
தனித்தமிழ் நூற்றாண்டில் தமிழுக்குச் செய்யவேண்டுவன! உலகில் மொழிகள் பல பெருவாரியாக வழங்கி, ஆட்சி அதிகாரம் பெற்றுப், பேரரசுகளை அமைத்துப் பெருவரலாறு படைத்திருந்தாலும் இன்று அம்மொழிகள் மக்கள் வழக்கிழந்து, இருந்த இடம் தெரியாமல் போயுள்ளன. அவற்றிடை நெடுங்காலத்திற்கு முன்பே தோன்றியிருந்தும் பல இயற்கைப் பேரிடர்கள் கடல்கோள்களால் இனப்பேரிழப்பை எதிர்கொண்டு தன் வளத்தையும் மக்கள் வழக்கையும் இழக்காது அறிவியல் வளர்ச்சிப் போக்கில் வளர்ந்தும் வாழ்ந்து கொண்டுமுள்ள மொழி தமிழ்மொழி. கழகம் அமைத்துத் தமிழ் வளர்த்தும், ஒரு மொழி வைத்து உலகாண்டும் இருந்த மன்னர்கள்…
காலந்தோறும் தமிழ் வரிவடிவம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
காலந்தோறும் தமிழ் வரிவடிவம்! எந்த மொழியாக இருந்தாலும் காலந்தோறும் வளர்ச்சிநிலையை அடைவதே இயற்கை. தமிழ்மொழியும் அத்தகைய வளர்ச்சி நிலையை அடைந்ததே. இருப்பினும் தொல்காப்பியத்திற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவ்வளர்ச்சி நிலையைத் தமிழ் எட்டிவிட்டது. மக்களினம் தோன்றிய இடம், கடல்கொண்ட பகுதியும் சேர்ந்த தமிழ்நிலம். மக்கள் தோன்றிய பொழுது கருத்துப் பரிமாற்றத்திற்காகச் செய்கையைப் பயன்படுத்தி, அதன் பின்னர், ஓவிய உருக்களைப் பயன்படுத்தியுள்ளனர். பல்வேறு வளர்ச்சிகளுக்குப் பின்னர், நெடுங்கணக்கு என்பதை முறைப்படுத்திய காலத்தில் தமிழ்வரிவடிவம் அறிவியல் முறையில் அமைந்து விட்டது. எனவே, தமிழின்…
காலந்தோறும் தமிழ் – பன்னாட்டுக் கருத்தரங்கம், சென்னை
தை 30, 2048 ஞாயிற்றுக்கிழமை பிப்பி்ரவரி 12, 2017 காலை 9.15 மணி முதல் மாலை 5.30 மணி வரை சல்லடியன் பேட்டை, பள்ளிக்கரணை 600 100 ஆதிரை பதிப்பகம் ஈகரைத் தமிழ்ச்சங்கம் ஈப்போ முத்தமிழ்ப்பபாவலர் மன்றம் ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி
காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 276 – 300 : இலக்குவனார் திருவள்ளுவன்
(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 251 – 275 தொடர்ச்சி) காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 276 – 300 மிக்க தமிழ்த் தொடை மாலை சாத்தி மேவிய ஏழ் இசை பாடிப் போந்து – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 490.3 பாங்கு உடை வண்தமிழ் பாடி நாளும் பரமர் தம் பாதம் பணிந்து இருந்தார் – பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 491.4 செப்பிய…
காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 251 – 275 : இலக்குவனார் திருவள்ளுவன்
(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 226-250 தொடர்ச்சி) காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 251 – 275 251. சிந்தை இன்பு உறப் பாடினார் செழும் தமிழ்ப் பதிகம். – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 372.4 252. மதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்று உள் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 373.3 253. தணிவு இல் காதலினால்…
காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 201-225: இலக்குவனார் திருவள்ளுவன்
(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 176-200: தொடர்ச்சி) காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 201-225 201. மறை முழங்கின; தழங்கின வண்தமிழ் வயிரின் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 233.1 புனையும் வண் தமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 235.3 செந்தமிழ் மாலையில் சிறப்பித்து ஏத்தினார். – பெரியபுராணம்:…