பாராட்டு பெறும் காவல்துறை தமிழுக்குக் காவலாக இல்லையே! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 8. காவல்துறை தமிழுக்குக் காவலாக இல்லையே! பழந்தமிழ்நாட்டில் காவலுக்கு முதன்மை அளித்தனர். எனவே, நாடு காவலில் சிறந்து இருந்தது. நாட்டு மன்னனையே காவலன் என்று மக்களும் புலவர்களும் கூறினர். மன்னர்கள் தாங்களும் மாறுவேடமிட்டும் இரவுக் காவல் புரிந்தும் காவலில் பங்கேற்றனர். இல்லற வாழ்க்கையிலும் காவலுக்கு முதன்மை அளித்தனர். தலைவன் தலைவியைவிட்டுப் பிரிவதை ஆறுவகையாகக் கூறியுள்ளனர். அவற்றுள் ஒன்று காவலின் பொருட்டுப் பிரிவதாகும். எனவே, இதனைக் காவற் பிரிவு என்கின்றனர். பதிற்றுப்பத்து முதலான சங்க இலக்கியங்களிலிருந்து காலந்தோறும் இலக்கியங்கள் தமிழ்நாட்டுக் காவல் சிறப்பைக் கூறுகின்றன….
“தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி” தொடரலாமா? -இலக்குவனார் திருவள்ளுவன்
“தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி” தொடரலாமா? இக்கட்டுரை பிராமணர்க்கு எதிரானதல்ல. அவ்வகுப்பிலும் பிற வகுப்பார்போல் நல்லாரும் உள்ளனர்; பொல்லாரும் உள்ளனர். மாந்தர் இயற்கை இது. சிலர் செய்யும் தவறுகளுக்காக அவர்கள் சேர்ந்த வகுப்பையோ பிற பிரிவையோ நாம் பொதுவில் குற்றமாகச் சொல்ல இயலாது. அதேபோல் அவ்வகுப்பைச்சேர்ந்த நண்பர்களும் எனக்குண்டு. சாதிவேறுபாடு பார்க்காத மனித நேயர்களும் அவர்களுள் உள்ளனர். ஆனால் மத்திய அரசும் அதன் நிழலரசும் சாதிவேறுபாட்டில் குற்றவாளிகளைப் பாகுபடுத்திப் பார்ப்பதால் இதை எழுதவேண்டி உள்ளது. சூத்திரனுக்கொரு நீதி – தண்டச் சோறுண்ணும்…
ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் மீது தாக்குதல் நடத்துவதா? – சீமான் கண்டனம்!
ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் மீது தாக்குதல் நடத்துவதா? அகதிகள் என்று சொல்லி அத்துமீறுவதா? : சீமான் கண்டனம்! மண்டபம் முகாமிலுள்ள ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் தாக்கப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இராமேசுவரம், மண்டபம் முகாமில் வாழும் ஈழ உறவுகள் காவல்துறையினரால் தாக்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மனவேதனையையும், அளவிட முடியா பெருங்கோபத்தையும் தருகிறது. போரில் உறவுகளை இழந்து, உடைமைகளை இழந்து, தாய்நிலத்தைப் பிரிந்து நிராதரவற்றவர்களாய் தமிழகத்திற்கு வந்திருக்கும் ஈழ உறவுகள் மீதான தாக்குதலை மனச்சான்றுள்ள எவராலும்…
காவல்துறையில் 2500-க்கும் மேல் காலிப் பணியிடங்கள்!
காவல்துறைப் பணிச்சேர்க்கை 2017 காவல்துறையில் 2500-க்கும் மேல் காலிப் பணியிடங்கள்! காவல்துறையில் சேர்ந்து நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய விரும்புவோர் காவல்துறையில் உள்ள புதிய காலிப் பணியிடங்களைப் பற்றிய முழுமையான பட்டியலை இங்கு காணலாம். இந்திய அரசுப் பணிகள் வலைப்பூ காவல்துறையிலுள்ள எல்லாக் காலிப் பணியிடங்களையும் பற்றிய முழுப் பட்டியலை அண்மையில் வெளியிட்டுள்ளது. ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்தத் தகவலை ’அகரமுதல’ இதோ உங்களுக்கெனத் தமிழில் வழங்குகிறது. துறை மொத்தப் பணியிடங்கள் பணி நிலை கடைசி நாள் முழு விவரம் சார்க்கண்டு காவல்துறை 1500 உதவிக்…
நாகப்பட்டினத்தில் சீரழிந்த நிலையில் சட்டம்-ஒழுங்கு!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீரழிந்த நிலையில் சட்டம்-ஒழுங்கு! தனிமனிதனுக்குப் பாதுகாப்பற்ற நிலை நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவல்துறையின் போதிய நடவடிக்கையின்மையால் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. இதனால் தனிமனிதனுக்குப் பாதுகாப்பாற்ற நிலை ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வேதாரண்யத்தில் பணிபுரிந்த பெண்நீதிபதி நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்திற்குக் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இதனால் வாரத்தில் இரண்டு நாள் நாகப்பட்டினத்திற்கும், மற்ற நாட்களில் வேதாரண்யத்திலும் பணியாற்றினார். வேதாரண்யத்தில் இருந்து நாகப்பட்டினம் வரும்போது வழக்கு ஒன்றில் தொடர்புடையவர் சார்பில் வெடிகுண்டை பெண்நீதிபதி மீது ஒரு மருமக்கும்பல்…
என்று மடியும் இந்தக் கையூட்டு வேட்கை? – வைகை அனிசு
ஊழலின் கோரப்பிடியில் அரசு அலுவலகங்கள் “பருப்பு இல்லாமல் சாம்பாரும் இல்லை. ஊழல் இல்லாத அரசுத்துறை அலுலவகங்களும் இல்லை” என்பது புதுமொழியாகக்கொண்டு ஊழலின் பிடியில் அலுவலகங்கள் சிக்கித்தவிக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களோ ‘லோ,லோ’ என அலையும் நிலையில் உள்ளனர். இவற்றை எல்லாம் களஆய்வு மேற்கொண்டு இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. இவற்றில் அதிகமாக முன்னிலை வகிப்பது வட்டாட்சியர் அலுவலகம், சார்-பதிவாளர் அலுவலகம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தரகர்களின் பிடியில் வத்தலக்குண்டு சார்பதிவாளர் அலுவலகம் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் மனைவணிகம் கொடிகட்டிப்பறக்கிறது….
ஊடகர் மீது கை வைக்காதீர்! ஊடகங்கள் மீது கண் வையுங்கள்!
தினமலர் நாளிதழ்ச் செய்தியாளர் அருள்செல்வனைத் தாக்கியது அருளற்ற செயல்! கிளர்ச்சிகள் என்பன மக்கள் குறைகளைத் தெரிவிக்கும் வாயில்கள் எனவும் அரசு அவற்றை அடக்கித் துன்புறுத்தாமல் மென்மையாகக் கையாண்டு குறைகளைப் போக்க வேண்டும் என்றும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் குறிப்பிடுவார். ஆனால், கிளர்ச்சிகள் என்றாலே அரசை அழிக்கும் ஆயுதமாகவும் கிளர்ச்சியாளர்கள் என்றாலே நாட்டின் பகைவர்கள் என்றும் கருதும் போக்கு எல்லா நாட்டிலும் உள்ளது வருந்தத்தக்கதே! இதனால், மக்களின் உற்ற தோழனாக இருக்க வேண்டிய காவல்துறை ஆளும்கட்சியின் அடிவருடிபோல் நடந்துகொண்டு மக்களுக்குத் தீங்கிழைத்து, அரசிற்கும்…