தோழர் தியாகு எழுதுகிறார் 178 : காவல் சித்திரவதை இல்லாத தமிழ்நாடு நோக்கி
(தோழர் தியாகு எழுதுகிறார் 177 : இந்தோனேசியாவிலும் தமிழர் துயரம் தொடர்ச்சி) காவல் சித்திரவதை இல்லாத தமிழ்நாடு நோக்கி… இனிய அன்பர்களே!அமெரிக்காவில் மின்னசோட்டா மாநிலம் மினியாபோலிசு நகரத்தில் 2020 மே 25ஆம் நாள் நடந்த அந்நிகழ்ச்சி அமெரிக்காவைக் குலுக்கி விட்டது, ஏன், உலகையே குலுக்கி விட்டது. தளைப்படுத்தப்பட்ட சியார்சு பிளாயிடு என்ற கறுப்பின இளைஞரை வெள்ளைக் காவல்துறை அதிகாரி ஒருவர் காலால் கழுத்துநெரித்துக் கொலை செய்ததைக் கண்டு மாந்தக் குலமே அதிர்ந்தது. “கறுப்பு உயிர்கள் பொருட்டாகும் (BLACK L LIVES MATTER)” என்ற இயக்கம்…