மாசிலாக்கருவூலம் – காவிரிமைந்தன்

மானுடம் முழுமைக்கான மாசிலாக்கருவூலம் இட்டது ஈரடிகூட இல்லை! இருப்பினும் தொட்டது வான்புகழ் என்றார்! சொற்களில் சுருக்கம் வைத்து பொருள்தனின் பரப்பை நீட்டும் வையத்தின் பொதுமறை தந்த – திரு வள்ளுவன் புகழ்தான் என்ன? பாலென மூன்றைப் பிரித்து – அதி காரங்கள் நூற்று முப்பத்து மூன்றெனக்கண்டு உலகம் வழக்கத்தில் கொண்டு உள்ள தலைப்புகள்தனிலே குறள்கள் பத்து வாழைதான் குலைதான் தள்ளி வைத்ததைப் போல அழகு வழிவழி வந்தவரெல்லாம் வாசித்து மகிழமட்டுமின்றி.. வழியாய் பூசித்து ஏற்கவைத்தார் வாசுகி கணவர் அன்றோ? ஆக்கமும் ஊக்கமும் அங்கே பாக்களாய்…

கண்ணதாசன் 88ஆவது பிறந்தநாள் பெருமங்கல விழா

 கவியரசு கண்ணதாசன் 88ஆம் பிறந்த நாள் விழாவும் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தின் (பம்மல்) – 24ஆம் ஆண்டு விழாவும் தி.நகர் – வாணிஅரங்கத்தில்(மஃகாலில்) ஆனி 06, 2046 / சூன் 21,2015 ஞாயிறன்று நடைபெற்றன. திருவாட்டி வாணி செயராமிற்குக் கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது.  இயக்குநர்கள் சுப.(எசு.பி.)முத்துராமன், பி.வாசு, ஆர்.வி. உதயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினர்.  விழா ஏற்பாடு – எம்.கே.மணி,   காவிரிமைந்தன்,   அ.நாகப்பன்,   ஏ கே.நாகராசன்,   மன்னார்குடி மலர்வேந்தன் மற்றும் பலர். (படங்களைப் பெரிய அளவில் பார்க்கப் படங்கள் மேல்…

துபாயில் கோடையில் ஒரு தமிழ்ச்சாரல்

கோடையில் ஒரு தமிழ்ச்சாரல்: துபாயில் கண்ணதாசன் விழா- திருவாட்டி சுவேதா          கலைமானிற்காக ஆராரோ பாடிவிட்டு அத்தாலாட்டிலேயே கண்ணயர்ந்துவிட்ட நம் கவியரசரின் 89வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் வானலை வளர்தமிழின் சூன் மாத நிகழ்ச்சி(ஆனி 01, 2046 / சூன் 12, 2015) “காலத்தை வென்ற கண்ணதாசன் பாடல்கள்” என்ற தலைப்பில் கவிஞர் காவிரிமைந்தன் தலைமையில் ஒன்பான்மணிகளால் (மாணிக்கங்களால்) தொடுக்கப்பட்ட மாலையாக அமைந்தது.         முதலாவது மணி,   இளம் அகவையிலேயே கவிதைகள் புனையும் ஆற்றல் நிறைந்த செல்வி ஆனிசாவின் தமிழ்த்தாய் வாழ்த்து- நம் தமிழன்னைக்கிட்ட…

வானலை வளர்தமிழ், தமிழ்த்தேர் சார்பிலான முப்பெரு விழாக்கள்

    துபாயில் வானலை வளர்தமிழ், தமிழ்த்தேர் ஆகியன சார்பில் தமிழ்ச்சான்றோருக்குப் பாராட்டும்.. கவிதையும் கற்பனையும் தலைப்பில் கவியரங்கமும் கவிஞர் காவிரிமைந்தன் எழுதிய நேரம்+நிருவாகம்=வெற்றி நூல் வெளியீடும் துபாய் கராமா சிவஃச்டார் பவனில் தை 17, 2046 / 30.01.2015 வெள்ளிக்கிழமை காலை 11.00மணிக்கு நடைபெற்றது.   செல்வி ஆனிசாவின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. கவிஞர் சியாவுத்தீன் இயக்குநர் சிகரம் அமரர் கே. பாலச்சந்தர் அவர்களுக்கும் கவிஞர் அதிரை கலாம் கல்வியாளர், தொழிலதிபர் துபாய் ஈடிஏ அசுகான் ஃச்டார் குழும நிறுவனர் அமரர்…

இலக்கு – காவிரிமைந்தன்

இலக்கு   இதயத்தின் மையப்புள்ளி எதைநோக்கிப் பார்க்கிறதோ அதுதான் இலக்கு! முறையான செயல்செய்யும் அறிவான பெருமக்கள் தேர்ந்தெடுப்பது இலக்கு! நடைபோடும் வாழ்க்கையிலே நாம்விரும்பும் பயணங்கள் அமைப்பதற்கு இலக்கு.. வெற்றிக்கும் தோல்விக்கும் விடைசொல்லிப் பார்த்தாலே மத்தியிலே அமர்ந்திருக்கும் இலக்கு! திட்டங்கள் இடுவோரின் திண்மையாவும் தீர்க்கமாய்த் தெரிவதிந்த இலக்கு! தட்டுத்தடுமாறிக் கால்பதித்து நடக்கத் தொடங்கிய நாள்முதலாய் குட்டிக்குட்டியாய் இலக்குகள்! நமக்குள் நாமே கூர்மைகொள்ள அமைத்திடும் இலக்குகள் ஆயுதமாகும்! சிந்தனையொன்றிச் சிறப்பாய்ச் செயல்பட வகுத்திடும் இலக்குகள் வழிவகுக்கும்! வாழ்வின் பொருளை வகையாய் அறிந்தோர் வசப்படுத்துவது இலக்கு! வாகைசூடிட நினைப்போரெல்லாம் வாரியணைப்பது…

கவியரசர் கண்ணதாசன் விழா, சென்னை

கவியரசர் கண்ணதாசன் விழா ஐப்பசி 1, 2045 / அக்.18, 2014 சனிக்கிழமை மாலை 6.00   குத்துவிளக்கேற்றல் : முனைவர் குமாரராணி மீனா முத்தையா   தலைமையும் கவியரசர் கண்ணதாசன் விருதுகள் வழங்கலும் : திரு ப.இலட்சுமணன்   குமாரராசா முத்தையா அரங்கம், செட்டிநாடு வித்யாலயா, எம்.ஆர்.சி.நகர் (இராசா அண்ணாமலைபுரம்), சென்னை 600 028   சிறப்புப் பாடலுரை : எசு.பி.பாலசுப்பிரமணியன் : “கவியரசு கண்ணதாசன் பாடல்களும் நான் பாடிய பாமாலைகளும்” தொகுப்புரை : கவிஞர் காவிரி மைந்தன்     அன்புடன்…

இந்த வார வல்லமையாளர் – திரு. பாலமுருகன்

 வல்லமை வளர்தமிழ் மையம் சார்பிலான வல்லமை மின்னிதழ் சித்திரை 2043 / ஏப்பிரல் 2012 இலிருந்து கிழமைதோறும்-அக்கிழமையில் சிறந்த ஆற்றலாளரைத் தேர்ந்தெடுத்து – வல்லமையாளர் விருது வழங்கி வருகின்றது. ஏதேனும் ஒரு புள்ளியில் தம் ஆற்றலைச் சிறந்த முறையில் வெளிப்படுத்தும் யாராயினும் அடையாளங் காணப்பட்டு வல்லமையாளர் விருதால் சிறப்பிக்கப்படுகின்றனர். அந்த வகையில், இந்த வார (ஆவணி 23, 2045 / செப்.8,2014) வல்லமையாளர் விருது அகரமுதல படைப்பாளர்களில் ஒருவரும் திருவண்ணாமலைத் துணை வட்டாட்சியருமான திரு ச.பாலமுருகனுக்கு வழங்கப்பெற்றுள்ளது. விருதாளர் பாலமுருகனுக்கு வாழ்த்துகளையும் விருது வழங்கும்…

இதயத்தில் எரியும்தழல் என்றைக்கும் அணைவதில்லை!

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளை கண்ணுற்றோர் எல்லாம் கதறி அழுவாரே.. குப்பைத்தொட்டிகளில் வாரியிறைத்தாற்போல் பிணங்களைக் குவித்துக் காட்டினாரே! ஒரு நாட்டைக் காப்பாற்றுகிறேன் என்றுசொல்லி, சொந்தநாட்டு மக்களையே நயன்மையின்றிக் கொன்று குவித்தனரே! மனசாட்சி ஒருசிறிதும் இல்லாத கயவர்கள் இன்றும் மனித உருவில் வாழ்கிறார்கள் என்று மெய்ப்பித்தார்களே! பாலுக்கு அழுகின்ற பச்சிளம்குழந்தை முதல் பாவையர் யாவரையும் கொடுமையின் உச்சம் கொண்டு சென்றனரே! இலட்சத்து எழுபதாயிரம் என்கிற உயிர்கள் அவர்களுக்குக் கிள்ளுக்கீரையானதே! எந்த உயிரையும் அவர்கள் கணக்கில் கொள்ளவில்லையே.. முதிய பெரியவர்களும் ஊனமுற்றவர்களும்கூட இவர்கள் பார்வைக்குத் தப்பவில்லையே! வழிபடும்தளங்கள்கூட இவர்களின்…