அரசமைப்பு உறுப்பு 161இன்படி ஏழு தமிழர்களை விடுதலை செய்க! – கி. வெங்கட்ராமன்
அரசமைப்பு உறுப்பு 161இன்படி ஏழு தமிழர்களை விடுதலை செய்க! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை! உச்ச நீதிமன்றக் கெடு முடியும் தறுவாயில், இந்திய அரசு – குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்து வழியாக பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலையை நிராகரித்துள்ளது. 2014இல், குற்றவியல் நடைமுறைச் சட்ட விதி 435 (1)இன்படி, தனது ஏழு தமிழர் விடுதலை முடிவு குறித்து இந்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கருத்துக் கேட்டது. இந்திய அரசின் வழக்கைத் தொடர்ந்து, அது அரசமைப்புச் சட்ட ஆயத்திற்குச்…
‘தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே!’ – சென்னையில் நடந்த எழுச்சிமிகு மாநாடு!
‘தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே!’ – சென்னையில் நடந்த எழுச்சிமிகு மாநாடு! “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல!” என்ற தலைப்பில், தை 21,2049 சனி பிப்ரவரி 3, 2018 அன்று சென்னையில்தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் எழுச்சிமிகு சிறப்பு மாநாடு நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையிலுள்ள அண்ணா அரங்கில் காலை 9.30 மணியளவில் தொடங்கிய மாநாட்டின் முதல் நிகழ்வாக, பெண்ணாடம் இளநிலா கலைக் குழுவினரின் பறையாட்டம் நடைபெற்றது. ‘தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்’ என்ற தலைப்பில் நடந்த ஒளிப்படக் கண்காட்சியைத் தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர்…
கருப்புப் பண மீட்பா? கருப்புப் பணக் காப்பா?- கி. வெங்கடராமன்
கருப்புப் பண மீட்பா? கருப்புப் பணக் காப்பா? தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கடராமன் அறிக்கை! இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஐப்பசி 23, 2047 / 08.11.2016 நள்ளிரவு முதல் 500 உரூபாய், 1000 உரூபாய்த்தாள்கள் செல்லா என்று திடீர் அறிவிப்பு வெளியிட்டார். கருப்புப் பணத்தையும், கள்ள உரூபாய்த்தாள்களையும் செயல்படாமல் முடக்குவதற்கே இந்த அறிவிப்பு என்று அவர் காரணம் கூறினார். பாக்கித்தானிலிருந்து பயங்கரவாதிகள் எல்லை கடந்து கள்ள உரூபாய்த்தாள்களைப் புழக்கத்தில்விட்டு, இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களுக்கு…
ஏழுதமிழர் விடுதலை : நூல் வெளியீடு- கருத்தரங்கம்- ஆவணப்படத் திரையிடல், சிதம்பரம்
கைது செய்தவர் சொல்கிறார்…உசாவல்(விசாரணை) அதிகாரிகள் சொல்கிறார்கள்.. தீர்ப்பளித்த நீதிபதி சொல்கிறார்.. உண்மை அறியும் குழு, நீதிமன்றம் நியமித்த செயின்ஆணையம் சொல்கின்றன, இவர்கள் ‘ குற்றமற்றவர்கள்(நிரபராதிகள்)’என்று! மனித உரிமை ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.. ஊடகவியலாளர்கள் சொல்கிறார்கள்… நீதிபதிகள் சொல்கிறார்கள்.. மக்கள்நாயக ஆற்றல்கள், அரசியல் கட்சிகள், முற்போக்கு இயக்கங்கள் எல்லாரும் ஒரே குரலில் சொல்கிறார்கள், இவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று! எதுவும் எங்களுக்குத் தேவையில்லை.. என்று திமிர்த்தனமாக இவர்களின் உயிர்பறிக்க துடிக்கிறது இந்தியா! காங்கிரசோ, பா.ச.க.வோ கெசுரிவாலோ யாராயினும் ஏழுதமிழர் விடுதலை செய்யக்கூடாது என்னும் அவர்கள் நிலையில்…
“மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?” 2/3 – கி. வெங்கட்ராமன்
“மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?” 2/3 இந்திய அரசமைப்புச் சட்டம் வரையப்பட்டு, 1950-இல் செயலுக்கு வந்தபோது, “இறையாண்மையுள்ள சனநாயகக் குடியரசு’’ என்பதாகத்தான் இந்தியா வரையறுக்கப்பட்டது. இந்திரா காந்தியின் அவசர நிலை ஆட்சிக் காலத்தில், 1976 இறுதியில்தான் 42ஆவது திருத்தத்தின் மூலம் “இறையாண்மையுள்ள மதச்சார்பற்ற சோசலிச சனநாயகக் குடியரசு’’ என மாற்றப்பட்டது. ஆனால், இதே காலப்பகுதியில்தான் முசுலிம்கள் தில்லியில் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைப்பண்டவத்திற்கு(சிகிச்சைக்கு) ஆளாக்கப்பட்டார்கள். துர்க்மான்வாயிலில்(கேட்டில்) அவர்களது வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. தன்னை நிலைநிறுத்திக் கொள்ள போலியாக இதுபோன்ற பல்வேறு சட்டங்களை இந்திரா காந்தி பிறப்பித்தார். அவசரகால ஆட்சிக் காலத்தில் “கல்வி’’யும், “வனம்’’தொடர்பான…
கி.வெங்கடராமனின் எழுவர் விடுதலை – நூலரங்கம்
[படத்தை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்க!
“தமிழ்நாடு அரசு ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற கருத்தரங்கில் கோரிக்கை! தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் எழுதிய “ஏழு தமிழர் விடுதலை – உச்ச நீதிமன்ற மறுப்பு – தமிழ்நாடு அரசு அதிகாரம்” – நூலின் வெளியீட்டு விழா – கருத்தரங்கம், மாசி 16, 2047 / 28.02.2016 மாலை, சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்றது. சென்னை எம்ஞ்சியார் நகர் மகா மகால் அரங்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. தமிழ்த் தேசியப் பேரியக்கத்…
ஏழுதமிழர் விடுதலை – நூல் வெளியீடு – கருத்தரங்கம்!
“ஏழுதமிழர் விடுதலை – உச்சநீதிமன்ற மறுப்பு – தமிழ்நாடு அரசு அதிகாரம்” – நூல் வெளியீடு மற்றும் கருத்தரங்கம்! தமிழீழத்திற்கு இந்திய அமைதிப்படையை அனுப்பி, ஆயிரக்கணக்கானத் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான முன்னாள் இந்தியத் தலைமையமைச்சர் இராசீவு காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி முதலான ஏழு தமிழர்களின் விடுதலை குறித்தும், அதற்கு மறுப்புத் தெரிவித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்தும், தமிழ்நாடு அரசின் அதிகாரங்கள் குறித்தும் சட்ட விளக்கங்களோடு பேசுகின்ற, “ஏழு தமிழர் விடுதலை – உச்ச நீதிமன்ற மறுப்பு – தமிழ்நாடு அரசு அதிகாரம்” – நூலின் வெளியீட்டு…
தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் திட்டத்தை நிறைவேற்றுக! – கி. வெங்கட்ராமன்
தென்பெண்ணை கிளைவாய்க்கால் திட்டத்தை இடைக்கால நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கி – நிறைவேற்றுக! தமிழக உழவர் முன்னணி அறிவுரைஞர் தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை! கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூரில், மாசி02, 2047/12.02.2016 காலை, செய்தியாளர்களைச் சந்தித்த, தமிழக உழவர் முன்னணி அறிவுரைஞர்தோழர் கி. வெங்கட்ராமன், வரும் பிப்பிரவரி இறுதியில் தமிழ்நாடுஅரசுஅளிக்கவுள்ள இடைக்கால நிதிநிலை அறிக்கையில், தென்பெண்ணைக்கிளைவாய்க்கால் திட்டத்திற்கான நிதியை ஒதுக்கி, அத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் வெளியிட்ட அறிக்கை:…
முத்துக்குமார் நினைவேந்தல், மன்னார்குடி
‘ஈழம் அமையும்’ – நூலறிமுகக் கூட்டம் தை 16, 2047 / சனவரி 30, 2016
தமிழ்த்தேசச் சூழலியல் மாநாடு, திருவெறும்பூர்
ஆவணி 12, 2046 / ஆக. 29, 2015 மாலை 5.30 கி.வெங்கட்ராமன் பெ.மணியரசன் தமிழ்த்தேசியப் பேரியக்கம் திருச்சிராப்பள்ளி
இளைஞர்கள் எதிர்காலமும் தமிழ்த்தேசியமும் – புதுச்சேரி
ஆவணி 11, 2046 / ஆகத்து 28, 2015 வெள்ளி மாலை 6.00