கருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா? ]

கருத்துக் கதிர்கள் 16-18 : [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா? ] கருத்துக் கதிர்கள் 16-18 [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா? ]  16. ஒரே தேர்தல் : பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பான கூட்டம் கடந்த வாரம் (19.06.2019)…

குடிநீரில் நச்சுத்தன்மை பரவியதால் சிறுநீரகத்தை இழக்கும் மக்கள்

குடிநீரில் நச்சுத்தன்மை பரவியதால் சிறுநீரகத்தை இழக்கும் மக்கள்   தேவதானப்பட்டி அருகே உள்ள தே.வாடிப்பட்டியில் உள்ள பொதுமக்களுக்கு ஊராட்சி சார்பில் ஆழ்துளைக் கிணறு அமைத்து அதன் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதன்மூலம் இப்பகுதி மக்கள் ஊராட்சியில் வரும் தண்ணீரைப் பிடித்து குடிநீருக்குப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தே.வாடிப்பட்டி ஊராட்சிக்குற்பட்ட பகுதியில் வசிப்பவர்களுக்கு கல்அடைப்பு, சிறுநீரகக் கோளாறு முதலான நோவுகள் அடிக்கடி ஏற்பட்டு அதற்கான மருத்துவமும் பார்த்து வருகின்றனர்.   இந்நிலையில் தே.வாடிப்பட்டி ஊராட்சியில் ஏறத்தாழ 10க்கும் மேற்பட்டவர்களுக்குச் சிறுநீரகக்கோளாறு ஏற்பட்டு மதுரையில் உள்ள அரசு,…

தேனியில் குடிநீர் ஊர்திகள் கழிவு நீர் ஊர்திகளாக மாறிவரும் நிலை

தேனிமாவட்டத்தில் குடிநீர் ஊர்திகள் கழிவு நீர் ஊர்திகளாக மாறிவரும் நிலை   தேனிமாவட்டத்தில் குடிநீர் வழங்கப் பயன்பட்ட ஊர்திகள் தற்பொழுது தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லாததால் கழிவுநீர் எடுத்துக் கொண்டுசெல்லும் ஊர்திகளாக மாற்றப்படுகின்றன.   தேவதானப்பட்டி பகுதியில் கடந்த 3 வருடங்களாகப் போதிய மழையில்லாமல் இருந்தது. இதனால் இப்பகுதியில் ஆறுகள், ஏரிகள், குளங்கள் முதலான பல்வேறு வகையான நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டன. இவற்றைத்தவிர இப்பகுதியில் உள்ள வைகை அணை, மஞ்சள் ஆறு அணை முதலான அனைத்து அணைகளும் வறண்டு காணப்பட்டன. இதனால் இப்பகுதியில் கடுமையான குடிநீர்ப்…

தேனியில் சாக்கடைநீர்க் கலப்பால் தொற்றுநோய்

தேனி மாவட்டத்தில் குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பதால் தொற்று நோய் பரவும் பேரிடர் தேனிமாவட்டத்தில் தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி ஊராட்சியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில்வார்பட்டி ஊராட்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டப்பட்டுள்ளது. மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியில் தண்ணீரைச் சேமித்து ஒவ்வொரு பகுதியாக வழங்கி வருகின்றனர். அவ்வாறு வழங்கும்பொழுது பல இடங்களில் சாக்கடை அண்மையில் குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் குடிநீரின் அழுத்தம் குறையும் போது சாக்கடை நீர் அக்குழாய் வழியாகத் தண்ணீருடன் கலக்கிறது. இதனை அருந்தும்…

குடிநீரைக் காய்ச்சிக் குடிக்க வலியுறுத்தல்

 மக்கள் குடிநீரைக் காய்ச்சிக் குடிக்க, தேவதானப்பட்டி பேரூராட்சி வலியுறுத்தல்   தேவதானப்பட்டிப்பகுதியில் குடிநீரைக் காய்ச்சி குடிக்கவேண்டும் எனப் பேரூராட்சி நிருவாகம் வலியுறுத்தி உள்ளது.   கடந்த 3 ஆண்டுகளாகப் போதிய மழை பெய்யவில்லை. இதனால் இப்பகுதியில் குளம், கண்மாய், ஏரிகள், ஆறுகள் என அனைத்தும் வறண்டு கிடந்தன. இதனால் குடிநீர்ப்பஞ்சம் தலைவிரித்தாடியது. இருப்பினும் தேவதானப்பட்டிப் பேரூராட்சி மஞ்சளாறு அணையில் ஆழ்துளைக்கிணறுகள் அமைத்துச் சீராகக் குடிநீரை வழங்கி வந்தது.   இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாகத் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. இதனால் மஞ்சளாறு…