பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 25 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
(வைகாசி 3, 2015 / மே 17, 2015 தொடர்ச்சி) காட்சி – 25 அங்கம் : ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம் : மரக்கிளை நிலைமை : (காட்சியைக் கண்டு சிட்டுகளோ! நகை ஆட்சியைக் கண்டு வியக்கின்றது) பெண் : பெண்களுக்கென்ன நகையின்மேல் இத்தனை ஆசை உள்ளது சொல்? ஆண் : கண்ணே! பெண்ணுக்கு நகைதானே! என்ன அதில்தான் உள்ளதுவோ? பெண் : மேலைநாட்டுப் பெண்களுக்கு இத்தனை விருப்பம் இதில் உண்டோ? ஆண் …
பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 11– ஆ.வெ.முல்லை நிலவழகன்
காட்சி – 11 அங்கம் : ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம் : மரக்கிளை நிலைமை : (நாடகம் பார்க்கும் ஆவலிலே நவின்றிடும் பேடை எண்ணாது கூடாக் கோபத்தை துணைக்கொண்டு கொட்டுது சொற்களை ஆண்சிட்டு) பெண் : அப்பப்பா! இவர்கள் என்னதான் பேசுகிறார்களோ புரியவில்லை! எப்பவும் இவர்கள் இப்படித்தான் பேசிக் கொண்டிருப்பரோத் தெரியலையே! ஆண் : அவர்கள் ஏதோ! பேசட்டுமே! அதனால் நமக்கு வருவதென்ன? செவனே என்று சில நாழி பேசாதிருவேன் நீ கொஞ்சம்! பெண் : விசிலும் ஊதித் திரை நீக்கி…