திருக்குறள் அறுசொல் உரை – 093. கள் உண்ணாமை: வெ. அரங்கராசன்

(அதிகாரம் 092. வரைவின் மகளிர் தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 093. கள் உண்ணாமை நல்உணர்வு, உடல்நலம், செல்வம் அழிக்கும் கள்ளைக் குடிக்காமை.     உட்கப் படாஅர், ஒளிஇழப்பர், எஞ்ஞான்றும்    கள்காதல் கொண்(டு)ஒழுகு வார்.       கள்ளைக் காதலிப்பார் எப்போதும்        அஞ்சப்படார்; புகழையும் இழப்பார்.   உண்ணற்க கள்ளை; உணில்உண்க, சான்றோரால்      எண்ணப் படவேண்டா தார்.      கள்ளைக் குடிக்காதே; பெரியார்தம்          மதிப்பு வேண்டாம்எனில், குடிக்க.     ஈன்றாள் முகத்தேயும், இன்னா(து)ஆல், என்மற்றுச்…

திருக்குறள் அறுசொல் உரை – 066. வினைத்தூய்மை : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 065. சொல்வன்மை தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 066. வினைத் தூய்மை செயற்பாடுகளில் குற்றம்  குறைகள்  இல்லாமை; தூய்மை உள்ளமை. துணைநலம், ஆக்கம் தரூஉம்; வினைநலம்,      வேண்டிய எல்லாம் தரும்.           நலத்துணை முன்னேற்றத்திற்கு உதவும்;         நலச்செயல் எல்லாமும் தரும்.   என்றும் ஒருவுதல் வேண்டும், புகழொடு      நன்றி பயவா வினை.     புகழோடு, நன்மை தராச்செயலை,         எப்போதும் விலக்கல் வேண்டும்.         ஓஒதல் வேண்டும், ஒளிமாழ்கும் செய்வினை,      ஆஅதும் என்னும் அவர்.   …

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 030. வாய்மை

(அதிகாரம் 029. கள்ளாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 030. வாய்மை       தீமை இல்லாதவற்றைச் சொல்லலும், பொய்த்தல் இல்லாது வாழ்தலும்.   வாய்மை எனப்படுவ(து) யா(து)?எனின், யா(து)ஒன்றும்,      தீமை இலாத சொலல்.            எச்சிறு அளவிலேனும், தீமை          இல்லாதன சொல்லலே வாய்மை.   பொய்ம்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த      நன்மை பயக்கும் எனின்.        யார்க்கும் குற்றம்இலா நன்மையான          பொய்யும், வாய்மையின் இடத்தது.   தன்நெஞ்(சு) அறிவது, பொய்யற்க; பொய்த்தபின்,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 029. கள்ளாமை

(அதிகாரம் 028. கூடா ஒழுக்கம் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03. துறவற இயல் அதிகாரம் 029. கள்ளாமை உள்ளத்தாலும், பிறரது பொருள்களை எள்அளவும் திருட எண்ணாமை.   எள்ளாமை வேண்டுவான் என்பான், எனைத்(து)ஒன்றும்,      கள்ளாமை காக்க,தன் நெஞ்சு.     இகழ்ச்சியை விரும்பாதான், எந்த        ஒன்றையும் திருட எண்ணான்.   உள்ளத்தால் உள்ளலும் தீதே, “பிறன்பொருளைக்,    கள்ளத்தால் கள்வேம்” எனல்.          “பிறரது பொருளைத் திருடுவோம்”        என்று, நினைப்பதும் திருட்டே..   களவினால் ஆகிய…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 028. கூடா ஒழுக்கம்

(அதிகாரம் 027. தவம் தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03.துறவற இயல்      அதிகாரம் 028. கூடா ஒழுக்கம்   அழுக்கான, கடைப்பிடிக்கக் கூடாத ஒழுக்கக் கேட்டோடு கூடாமை.   வஞ்ச மனத்தான் படிற்(று)ஒழுக்கம், பூதங்கள்      ஐந்தும், அகத்தே நகும்.     வஞ்சகன்தன் பொய்ஒழுக்கம் கண்டு,        மெய்வாய்கண் மூக்குசெவி நகும்.   வான்உயர் தோற்றம் எவன்செய்யும்? தன்நெஞ்சம்,    தான்அறி குற்றப் படின்.     மனம்அறிந்த குற்றத்தார்க்[கு] உயர்தவக்        கோலத்தால் என்ன பயன்?   வலியில் நிலைமையான் வல்உருவம்,…