ஊராட்சி ஊழல்கள்! தொடர் நடவடிக்கை தேவை!

குள்ளப்புரம் ஊராட்சியில் பலஇலட்சம் மோசடி! ஊராட்சிச் செயலாளர் பணியிடைவிலக்கம் ஊழலுக்குத் தண்டனை பணியிடைவிலக்கம் மட்டும்தானா?   தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம் ஊராட்சியில் பல இலட்சம் உரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. குள்ளப்புரம் ஊராட்சிமன்றத் தலைவராக இருப்பவர் சோதியம்மாள். இவர் இரண்டாவது முறையாக ஊராட்சிமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பெரியகுளம் ஒன்றியத்திலேயே அதிக வருமானம் உள்ள ஊராட்சி குள்ளப்புரம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் ஊராட்சிசெயலாளராகப் பணிபுரிந்த முத்துவேலன் என்பவர் பதவி உயர்வு பெற்று மாவட்ட ஆட்சியரகத்திற்கு மாற்றப்பட்டார்.   அதன்பின்னர் ஊராட்சிச் செயலாளராக அ.வாடிப்பட்டி ஊராட்சிச் செயலாளர்…

குள்ளப்புரம் ஊராட்சியில் குடிநீர்த் தட்டுப்பாடு

 தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம் ஊராட்சியில் கோடைக் காலத்திற்கு முன்பே குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தும் அவல நிலை உள்ளது.   குள்ளப்புரம் ஊராட்சிக்குற்பட்ட மருகால்பட்டி, புதூர், கோயில்புரம், சங்கரமூர்த்திபட்டி முதலான சிற்றூர்களில் இருபது நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பாத்திரங்களில் குடிநீரைப் பிடித்து வைக்கின்றனர். நீண்ட நாள் தண்ணீரைப் பாத்திரங்களில் வைத்திருப்பதால் புழுக்களும், நோய் பரப்பும் கொசுக்களும் உற்பத்தி ஆகின்றன. மேலும் இத்தண்ணீரை அருந்துவதன் மூலம் நச்சுக் காய்ச்சல், வயிற்றுக்கழிவு, கொசுக்காய்ச்சல்,…