வள்ளுவர் சொல்லமுதம் 12 : அ. க. நவநீத கிருட்டிணன் : கொடைநலமும் படைவலமும் பிற்பகுதி
(வள்ளுவர் சொல்லமுதம் 11 : அ. க. நவநீத கிருட்டிணன் : அ. கொடைநலமும் படைவலமும் – தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம்கொடைநலமும் படைவலமும் பிற்பகுதி என்றும் முகமன் இயம்பா தவர்கண்ணும்சென்று பொருள்கொடுப்பர் தீதற்றோர்’என்பர் சிவப்பிரகாசர். ஒப்புரவு செய்யும் உயர்ந்த உள்ளமுடையார் பிறர்க்கு உதவுவதைத் தமது கடப் பாடு என்று கருதினர். அவர்கள் கைம்மாறு கருதிப் பிறர்க்கு உதவுபவர் அல்லர். மாநிலத்து உயிர்கட்கு மழைவளம் சுரக்கும் மேகம் அவ்வுயிர்கள்பால் எந்தப் பயனையும் எதிர்நோக்குவது இல்லே. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்(டு) என்னாற்றும் கொல்லோ உலகு” என்பது…
வள்ளுவர் சொல்லமுதம் 11 : அ. க. நவநீத கிருட்டிணன் : அ. கொடைநலமும் படைவலமும்
(வள்ளுவர் சொல்லமுதம் 10 : அ. க. நவநீத கிருட்டிணன் : சொல்லும் செயலும் 2- தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம்அ. கொடைநலமும் படைவலமும் ஈகையும் வீரமும் தமிழரின் இணையற்ற பண்புகள் ஆகும். பழந்தமிழ்நாட்டு மன்னர் பலரும் கொடை கலத்திலும் படை வலத்தினும் சிறந்து விளங்கினர். இவ் உண்மையைச் சங்க இலக்கியங்கள் பல பாடல்களில் இனிது விளக்கும். பண்டைப் புலவரெல்லாம் மன்னர் கொடைநலத்தையும் படை வீரத்தையுமே கொண்டாடித் தண்டமிழ்ப்பாக்கள் பாடினர். திருவள்ளுவரும் தம் நூலுள் இத்திறங்களை நயம்பட உரைக்கிறார், தமிழ்நாட்டுக் கொடையின் பெருமையைக் குறிக்கத் திருவள்ளுவர்…