(பூங்கொடி 20 – கவிஞர் முடியரசன்: புற்றரைக் காட்சி – தொடர்ச்சி) பூங்கொடி கோமகன் ஆவல் மானிகர் விழியாள் மலர்வனம் புகுசொல் தேனெனப் பாய்ந்தது திருமகன் செவியில்; ‘ஒண்டொடி அவள்மன ஒப்புதல் பெற்றுத் தண்டமிழ் நிகர்க்கும் தையல் கொழுநன் ஆவேன் யான்’ என ஆவல் துரப்பக் காவிற் புகுந்துள பாவையைக் காண்பான் வில்விடு அம்பென விரைந்தனன் கோமகன்; பூங்கொடி வெருவுதல் புகுவோன் றன்னைப் பூங்கொடி நோக்கி ‘இகுளை! இம்மகன் என்மேற் காதல்      60 மிகுமனத் தானென மேலொரு நாளில் தேன்மொழி அனையிடம் செப்பக் கேட்டுளேன்…