தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார் , 1. தமிழ்க்கலை
(தமிழ்க்கலை (சொற்பொழிவுகள்): முன்னுரை – க. அன்பழகன் – தொடர்ச்சி) 1. தமிழ்க்கலை (சென்னை ஒய்.எம்.சி.ஏ. பட்டி மன்ற முதல் ஆண்டு நிறைவிழாவில் பேசியது) தமிழ் நாட்டில் சில காலமாகப் புத்துணர்ச்சி தோன்றியுள்ளது. அவ்வுணர்ச்சி ஆக்கத்திற்குப் பயன்படுமாக! இத்தகைய பட்டிமன்றங்கள் பல இந்நாட்டில் காணப்படல் வேண்டும். இயற்கைக்கு மாறான கொள்கைகளை அழித்துவிடுங்கள். ஆனால், இயற்கை நெறிப்பட்ட கொள்கைகள் இன்று அழிக்கப்பட்டு வருதலைக்காண வருந்துகிறேன். அது கூடாது. இத்துறையில் சிறப்பாக மகளிர் முயற்சி செய்தல் வேண்டும். ஆடல், பாடல், நகைச்சுவை இவை பெரிய கலைகளாம். என்…
தமிழ்க்கலை (சொற்பொழிவுகள்): முன்னுரை – க. அன்பழகன் + பதிப்புரை
தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார் முன்னுரை – க. அன்பழகன் தண்டமிழ்ப் பெரியார், சாந்தசீலர், ஒழுக்க ஒளி திரு. வி. க. அவர்களின், உயர்வெண்ணும் உள்ளத்தினின்றும் வெளிப்பட்ட ஒப்பற்ற கருத்தோடைகளிற் சில ஈண்டு தொகுக்கப்பெற்றுள்ளன. தமிழ் நாட்டின் மேடைகள் அனைத்தும், கட்சிகள் யாவும், சமயக் குழுக்கள் எல்லாம், அவரது பொன்னுரையால் பொலிவு பெற்றதை மறக்கவியலாது. தமிழும் தமிழரும் அவரது கருத்தோடையில் திளைத்து மறுமலர்ச்சி எய்தியுள்ளதையும் நாமறிவோம். அத்தகு பெரியாரின் உரை ஒவ்வொன்றும். நிகழ்ந்தபின் – தொகுக்கப்பட்டு அச்சியற்றப் பெற்றிருத்தல் வேண்டும். அதனால்,…