வள்ளலார் பெருவிழா
மாசி 18 /சனி/மார்ச்சு 2 மாலை 5.00 சந்திரசேகர் மண்டபம், மேற்கு மாம்பலம் , சென்னை அனைவருக்கும் வணக்கம்! சாதி மதவெறியால் மக்களை இரு கூறாகப் பிரிக்கும் ஆரியத்துவ ஆன்மிகத்திற்கு மாற்றாக, சாதி – மத வேறுபாடுகளுக்கு எதிரான வள்ளலாரின் தமிழர் ஆன்மிகத்தை முன்னிறுத்தும் வகையில் தமிழ்நாடெங்கும் ‘வள்ளலார் பெருவிழா’ நிகழ்ச்சிகளைj; தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தி வருகிறது. வரும் மாசி 18 /மார்ச்சு 2 அன்று மாலை சென்னை மேற்கு மாம்பலம் சந்திரசேகர் மண்டபத்தில் நடைபெறும் “வள்ளலார் பெருவிழா” நிகழ்வில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்…
ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்க!
“தமிழ்நாடு அரசு ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற கருத்தரங்கில் கோரிக்கை! தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் எழுதிய “ஏழு தமிழர் விடுதலை – உச்ச நீதிமன்ற மறுப்பு – தமிழ்நாடு அரசு அதிகாரம்” – நூலின் வெளியீட்டு விழா – கருத்தரங்கம், மாசி 16, 2047 / 28.02.2016 மாலை, சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்றது. சென்னை எம்ஞ்சியார் நகர் மகா மகால் அரங்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. தமிழ்த் தேசியப் பேரியக்கத்…
காவிரி உரிமை மீட்புப் போராட்டம் – பனங்குடி
புரட்டாசி 11, 2046 – செப்டம்பர் 28, 2015 அன்பான தோழர்களுக்கு வணக்கம்! தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களுக்குக் குடிநீராகவும், 12 மாவட்டங்களுக்குப் பாசன நீராகவும் பயன்பட்டுத், தமிழர்களின் தேசிய ஆறாக விளங்குவது காவிரி ஆறாகும். அதன் உரிமையை மீட்பதற்கான போராட்டத்தில், சென்னை முதன்மைப் பங்கு வகிக்க வேண்டும். ஏனெனில், வீராணம் ஏரியில் நிரப்பப்படும் காவிரி நீரே, சென்னைக்கு மிகப்பெரும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது என்பதை நாம் மறந்துவிடலாகாது! காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, வரும் புரட்டாசி 11, 2046…
இளைஞர்கள் எதிர்காலமும் தமிழ்த்தேசியமும் – புதுச்சேரி
ஆவணி 11, 2046 / ஆகத்து 28, 2015 வெள்ளி மாலை 6.00
தமிழ்த்தேசச் சூழலியல் மாநாடு
அன்பான தோழருக்கு வணக்கம்! சிதம்பரத்தில் வரும் பங்குனி 24, 2046 / ஏப்பிரல் 7 செவ்வாய் அன்று நடைபெறவுள்ள “தமிழ்த்தேசச் சூழலியல் மாநாட்டில்” கலந்து கொள்ளவும், மாநாட்டு அழைப்பிதழை தங்கள் நண்பர்கள், சுற்றத்தாருடன் பகிர்ந்து கொள்ளவும் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்! தங்கள் முகநூல் பக்கங்களில், மாநாடு குறித்துத் தாங்கள் எழுதினால் மிகவும் சிறப்பாக இருக்கும்! நன்றி! தோழமையுடன், க.அருணபாரதி தலைமைச் செயற்குழு உறுப்பினர், பேசி: 9841949462 தலைமைச் செயலகம், தமிழ்த் தேசியப் பேரியக்கம் பேசி: 7667077075, 9047162164 ஊடகம்: www.kannotam.com இணையம்: tamizhdesiyam.com
செஞ்சீனா சென்றுவந்தேன் 22 – பொறி.க.அருணபாரதி
22. மக்கள் சீனத்தின் எதிர்காலம்? இறுதியாக, நான் தாயகம் திரும்ப வேண்டிய நாள் வந்தது. சீனாவின் இன்றைய நிலை குறித்து அசைபோட்டேன். இன்றைய சீனாவின் நிறைகுறைகள் அனைத்தும், நாளை அமையவிருக்கும் தமிழ்த் தேசத்திற்கு படிப்பினைகாக விளங்கக்கூடியவை. எதிர்காலத்தில், பொதுவுடைமைக் கட்சியின் ஒருகட்சி முற்றதிகாரம் நிலவும் சீனாவில், இப்பொழுது நிலவுவதை விட அதற்கெதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கும். அப்பொழுது, சீனாவின் ஒருகட்சி முற்றதிகாரம் வீழ்ந்து நொறுங்கும். உண்மையில், சீனப் பொருளியலை விழுங்கிவிட்ட (கபளீகரம் செய்துவிட்ட) மேற்குலக முதலாளிய நாடுகள், அந்த ஒருகட்சி…
செஞ்சீனா சென்றுவந்தேன் 21 – பொறி.க.அருணபாரதி
(ஐப்பசி 23, 2045 / நவம்பர் 09, 2014 தொடர்ச்சி) 21. கச்சத்தீவும் சீனர்களின் சப்பானிய எதிர்ப்பும் சீன நண்பர்கள் சிலருடன் பேசும் போது, அவர்கள் தமது நாட்டிற்கு யாரை போட்டியாளர்களாகக் கருதுகின்றனர் எனக் கேட்டேன். வெகு சிலரே வட அமெரிக்கா என்றனர். ஒரு சிலர், இரசியா என்றுகூடச் சொன்னார்கள். ஆனால், இந்தியாவைப் பற்றி கேட்டால், பலருக்கு ஒன்றும் தெரியவில்லை. இங்கே, தமிழகத்தில், வங்க தேசம்தான் நமக்கு சவால் விட்டு வளரும் நாடு என்று சொன்னால் நாம் எப்படி சிரிப்போம்? அதே போலத்தான்,…
செஞ்சீனா சென்றுவந்தேன் 20 – பொறி.க.அருணபாரதி
(ஐப்பசி 6, 2045 / நவ.2, 2014 தொடர்ச்சி) 20. சீன மக்களைக் கொல்லும் உலகமய நுகர்வியம் நுகர்விய வெறிப் பண்பாடு செழித்தோங்கும் வட அமெரிக்காவில் அவ்வப்போது பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு நிகழ்வுகள் நடைபெறுவதை நாம் கண்டும் கேட்டும் வருகிறோம். கைப்பேசி – காணாட்டம்(வீடியோ கேம்) முதலான பல மின்னணுக் கருவிகளிலும், வன்முறை நிறைந்த விளையாட்டுகளைப் பழகும் வடஅமரிக்க இளையோர், சமூகத்தில் அதனைப் பயன்படுத்திப் பார்க்க விழையும் போது, அது பள்ளிகளிலும், பொது இடங்களிலும் நடைபெறும் துப்பாக்கிச்…
செஞ்சீனா சென்றுவந்தேன் 18 – பொறி.க.அருணபாரதி
18. சீனாவில் ‘பயங்கரவாதம்’ அன்றைய ஞாயிற்றுக் கிழமை, சியான் நகரின் முதன்மை வணிகப்பகுதியான மணிக்கோபுரத்தை(பெல் டவரை)ச் சுற்றி கடுமையான காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. சீனப் படைத்துறையினரும் ஆங்காங்கு நின்று கொண்டிருந்தனர். சீன அரசுத் தலைவர்கள் யாரேனும் வந்திருப்பார்கள் போல என நினைத்தேன். பின்னர், அன்றிரவு வீடு திரும்பியதும் இணையத்தளத்தில் செய்தி பார்த்தேன். அன்றைய நாள் (மாசி 17, 2045 / மார்ச்சு1-2014) அன்று, சீனாவின் (உ)யுன்னன் (Yunnan) மாகாணத்தின், குன்மிங்கு(Kunming) நகரின் தொடர்வண்டி நிலையத்தில், கையில் கத்தியுடன் நுழைந்த ஒரு குழுவினர் கண்மூடித்தனமாகத் தாக்கியதில்…
செஞ்சீனா சென்றுவந்தேன் 17 – பொறி.க.அருணபாரதி
(புரட்டாசி 26 , 2045 / அக்.12, 2014 தொடர்ச்சி) 17. பழமையை அழித்துவிட்டுப் ‘பாதுகாக்கும்’ பன்னாட்டு நிறுவனங்கள் வட அமெரிக்கா, ஈரான் – ஈராக் – ஆப்கானித்தான் நாடுகளில் தலையிடுகிறது என்றால், சீனாவோ தன்னுடைய மண்டலத்திலுள்ள இலங்கை, வட கொரியா முதலான நாடுகளின் உள்நாட்டுச் சிக்கல்களில் மூக்கை நுழைத்து அங்கெல்லாம் தமக்காக தளம் அமைத்துக் கொள்கிறது. வட அமெரிக்க மக்கள், பன்னாட்டு நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்ட நுகர்வு வெறி மோகத்தில் அலைகிறார்கள் என்றால், சீனர்கள் அதே போல தம் வாழ்நிலையை மாற்றிக்…
செஞ்சீனா சென்றுவந்தேன் 16 – பொறி.க.அருணபாரதி
(புரட்டாசி 19, 2045 / 05 அக்தோபர் 2014 இன் தொடர்ச்சி) 16. பொறாமைப்படத்தக்க இரு நிகழ்வுகள் அன்றொரு ஞாயிற்றுக்கிழமை, சீன மக்கள் மீது ஆர்வமும் பொறாமையும் ஏற்படும் அளவிற்கு இரண்டு நிகழ்வுகள் கண்டேன். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலையில் சற்றுக் காலத்தாழ்ச்சியாக எழுந்திருந்தேன். என் அறைக்கு ஒரு பெண், கையில் ஒரு பெட்டியுடன், நவநாகரிக உடையணிந்து கொண்டு வந்திருந்தார். பார்ப்பதற்கு, நான் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரின் மகள் போல் இருந்தாள். என்னைப் பார்த்ததும், “நீ ஃகௌ” (NI HAO…
செஞ்சீனா சென்றுவந்தேன் 15 – பொறி.க.அருணபாரதி
(புரட்டாசி 12, 2045 / 28 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி) 15.சீனாவில் “ஊடகங்கள்” சாலையோரம் சில இடங்களில் இதழ்களும், நாளேடுகளும் விற்பனை ஆகிக்கொண்டிருந்ததைப் பார்த்தென். ஊடகச்சுதந்திரம் இல்லாதநாடு சீனா என்கிறார்களே, இங்கு எப்படி ஊடகஇதழ்கள் விற்கின்றன என வியப்போடு பார்த்தேன். நான் பார்த்தவகையில், அவற்றுள் பெரும்பாலானவை திரைப்படம், நவநாகரிகச் சீனப்பெண்களின் உடைகள் குறித்துப் பேசும் புதுப்பாணி வடிவமைப்புகள், கடைவணிகம், செய்திகள் என பரவிக்கிடந்தன. அரசியல் பற்றி பேச, அரசின் ஏடு மட்டுமே! அதிலும் சில விதிவிலக்குகள் உண்டென்றால், அது அரசு…