க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 4/5 – ஆறு.செல்வனின் ஆய்வுரை

(க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 3/5 தொடர்ச்சி)   தனித்தமிழைப் பேணச்சொல்லும் அண்ணலின் அறிவுரைக்கு ஈனர்கள் எதிருரை பகர்கின்றார்கள். தனித்தமிழ் நமக்குத் தேவையில்லை, அதனால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்ற தங்களது மறுப்பை முரட்டுத்தனமாக எடுத்துவைக்கின்றார்கள். சீற்றத்தில் கொந்தளிக்கின்றார் அண்ணல். அவரின் சொற்கள் ஒவ்வொன்றும் எறியப்பட்ட ஈட்டிகளாகப் பாய்கின்றன. நெஞ்சம் திறக்கின்றது. சொற்களின் வன்மையைப் பாருங்கள்:         எண்ணங்கள் ஏதுமின்றி எதிர்ப்புக் கொள்கை            ஏந்திமட்டும் முருட்டாகப் பேசி விட்டாய்.        கண்மூடித் தனமாகச் சொல்லி விட்டால்            கால்முளைத்து நடந்திடுமா உன்றன்…

க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 3/5 – ஆறு.செல்வனின் ஆய்வுரை

(க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 2/5 தொடர்ச்சி) 3 க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம்:    மற்றோர் இடத்தில், காவலர்களை நையாண்டி செய்கின்றார் பாவலர். நாட்டில் நடக்கும் பெரும்பெரும் கொள்ளைகளையும், கொலைகளையும் அரசியல்வாதிகளுக்கு அடிவருடிக்கொண்டு கண்டுங் காணாமல் போகும் காவல்துறை, இரவு நேரத்தில் வேலை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும்  ஏழைகளை ஐயப்பட்டு உசாவல் என்ற பெயரில் அழைத்துச் சென்று கடுமையாக அடித்துத் துன்புறுத்துவதையும் இரண்டு சக்கர வண்டிகளின் ஆய்வு என்ற பெயரால் தேவையற்ற கேள்விகள் கேட்டு வண்டி உரிமையாளர்களிடம் கையூட்டுபெற்றுக்கொண்டு அனுப்புவதையும் மனத்தில் கொண்டு…

க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 2/5 – ஆறு.செல்வனின் ஆய்வுரை

(க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 1/5  தொடர்ச்சி)   2/5 க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம்:    வயல் வேலைக்குச் செல்பவள் முல்லை. காலை விடிவதற்கு முன்பே வேலைக்குச் சென்று விடுகிறாள். இதையும் பாவலர் விட்டுவைக்கவில்லை தன் உவமைத்திறத்தால். பாருங்கள், ‘காய்க்குலையில் பழவண்ணம் வாரா முன்னம்   கனிகொறித்துச் சுவைபார்க்கும் அணிலைப் போல’ விடிவதற்கு முன்பேயே வேலைக்கு வந்துவிட்டாள் முல்லை என்கிறார் பாவலர்.   ஒரு காட்சியில், முல்லையையும் மாறனையும் ஐயப்பட்டுக் காவலர்கள் பிடித்துவிடுகிறார்கள். முல்லைக்கும், மாறனுக்கும் தப்பான உறவிருப்பதாக முடிவுசெய்கிறார்கள். முல்லையோ எவ்வளவோ…

த.தமிழ்ச்செல்வி – க.தமிழமல்லன் மணிவிழா

‘வெல்லும் துாயதமிழ்’ மாத இதழ் ஆசிரியர் த.தமிழ்ச்செல்வி – தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் மணிவிழாவைக் க.ப.அறவாணர் நடத்தி வைத்தார். முனைவர் தாயம்மாள் அறவாணர் வாழ்த்துரை வழங்கினார். இசைஞர் முருகேச கந்தசாமி வாழ்த்துப்பா பாடினார். த.தமிழ்நேயன், ச.கலைமதி ,செனித் இனியா ஆகியோர் தமிழ் உணர்வுப் பாடல்களைப் பாடினர். முன்னதாக அனைவரையும் ஆசிரியை த.தமிழ்க் கொடி வரவேற்றுப் பேசினார். இம்மணிவிழா குயவர்பாளையம் மகிழ்ச்சி(போன்சிழார்) உணவகத்தில் நடைபெற்றது. மாண்புமிகு முதல்வர் ந.அரங்கசாமி அவர்கள் தமிழ்ச்செல்வி முனைவர் க.தமிழமல்லன் இணையரை வாழ்த்தினார்.

புதுச்சேரியில் வீடுதோறும் திருக்குறள் இயக்கம்

  தனித்தமிழ் இயக்கமும் புதுவைத் திருக்குறள்மன்றமும் இணைந்து வீடுதோறும் திருக்குறள் அன்பளிப்பாகத் தரும் முயற்சியில் 2047 மாசி / கும்பத்திங்கள் 11ஆம் (23.2.2016) நாளில் ஈடுபட்டன.   தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன், புதுவைத் திருக்குறள் மன்றத்துணைத்தலைவர் கலைமாமணி சுந்தர.இலட்சுமி நாராயணன், வெல்லும் தூயதமிழ் ஆசிரியர் திருவாட்டி த.தமிழ்ச்செல்வி, தனித்தமிழ் இயக்கப் புரவலர் கி.கலியபெருமாள், தூ.சடகோபன் முதலியோர் அப்பணியில் ஈடுபட்டனர்.   புதுச்சேரிச் சிவாசி நகரில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இப்பணியை வரவேற்றனர்.

தனித்தமிழ்இயக்க நூற்றாண்டு விழா – கருத்துரைக் கூட்டம்

  2047, தைத்திங்கள் / சுறவத்திங்கள் 24ஆம் நாள் / பிப்.07, 2016/ முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தனித்தமிழ்இயக்க நூற்றாண்டு விழா- கருத்துரைக் கூட்டம் நடைபெற்றது.   அக்கூட்டத்தை ஏற்பாடு செய்த உலகத்தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையுரை ஆற்றினார்.   திருவாவடுதுறை இளையபட்டத்தார், முனைவர் க.தமிழமல்லன் முதலியோர் கருத்துரை வழங்கினர். [படத்தை அழுத்தின் பெரிதாகக் காணலாம்]

மீதிநாள் மீட்சிநாள் ஆவதே சிறப்பு! – க.தமிழமல்லன்

மீதிநாள் மீட்சிநாள் ஆவதே சிறப்பு!   அடிமையில் வீழ்ந்து நிலை தடுமாறி அழிவினை விரும்பிடும் தமிழ்நாடே! – நீ மிடிமையில் உழன்றே மீள்நினை வின்றி மிகநலிந் தால்எவர் மீட்பாரே? உரிமையை இழந்தாய் உயர்வுகள் துறந்தாய்! நரிமையின் காலடி வீழ்ந்தாய் – உன் சரிவுகள் நீக்கும் சான்றவர் உளரோ சடுதியில் சேர்ந்தெழுந் தார்க்கு? கட்சியில் புகுந்தாய் காட்சியில் நெளிந்தாய் களம்காணும் மறத்தினை இழந்தாய் – நீ காசுக்குப் பறந்தாய் கவர்ச்சிக்குக் குனிந்தாய்! கடைத்தேற்றும் காவலைத் துறந்தாய்! சாதியில் புரண்டாய் மதங்களை மறைத்தாய் பாதியில் உன்போக் கொழிந்தாய்!…

தனித்தமிழ் இயக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுவர் பாடல் போட்டி

தனித்தமிழ் இயக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுவர் பாடல் போட்டி  மொத்தப் பரிசு உருவா 1050.00 கடைசிநாள்  மாசி 08, 2047 / 20.2.2016 சிறுவர் பாடிமகிழ்வதற்கேற்ற 12வரிப்பாடல்கள் 5 எழுதி அனுப்ப வேண்டும்! முதற்பரிசு உருவா 300.00 இரண்டாம் பரிசு உருவா200.00 மூன்றாம் பரிசு உருவா150 ஆறுதல் பரிசுகள் உருவா100.00 நான்கு பேர்களுக்கு. நெறிமுறைகள்: 1.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. 2.பிறமொழிச்சொற்கள் கலவாத தனித்தமிழ்ப் பாடல்கள் இயற்றப்பட வேண்டும் 3.பாடல்கள் மதநம்பிக்கை தவிர்த்த எப்பொருளிலும் இயற்றப்படலாம். 4.பாடல்களின் 2 படிகள் கட்டாயம் அனுப்பப்பெற வேண்டும். ஒருபடியில்…

தனித்தமிழ் இயக்கவிழா, மயிலாடுதுறை

   மயிலாடுதுறையில் இயங்கும் ‘செந்தமிழ் நாடு’ என்னும் அமைப்பு தனித்தமிழ் இயக்கவிழாவை முனைவர் செம்பியன் தலைமையில் நடத்தியது. தங்க.முருகதாசன் வரவேற்புரை நிகழ்த்தினார். புதுச்சேரித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் ‘தனித்தமிழ் இயக்கத்தின் தேவை’ என்னும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். முனைவர் கலைவாணி பெற்ற நுாற்பரிசுக்காக அவர் பாராட்டப்பெற்றார். முனைவர் க.தமிழமல்லன் அவர்க்குக் கேடயம் பரிசளித்தார்.  இறுதியில் சுரேசுக்குமார் நன்றி கூறினார். செயலர் முனைவர் தமிழ்வேலு, முனைவர் சீ. இளையராசா, முனைவர் ச.அருள், புரவலர் கி.கலியபெருமாள் முதலியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தனித்தமிழ்ச்சிறுகதைப்போட்டி

தனித்தமிழியக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி  பரிசு 3000.00  உரூ.   கதைகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்:  ஆவணி 03, 2046 – 20.8.2015 முகவரி : முனைவர் க. தமிழ மல்லன், தலைவர், தனித்தமிழ் இயக்கம், 66,மாரியம்மன்கோயில்தெரு, தட்டாஞ்சாவடி,புதுச்சேரி-605009          தொ:0413-2247072;  பேசி 9791629979 நெறிமுறைகள்: அ4 தாளில் 5 பக்கம்கொண்ட, குமுகாயக்கதைகள், பிறசொற்கள் பிறமொழிப்பெயர்கள் கலவாத நடையில்எழுதப்படல்வேண்டும். கதையின்இரண்டுபடிகளைஅனுப்பவேண்டும். ஒருபடியில்மட்டும் பெயர், முகவரிகளைத் தனித்தாளில் இணைத்து அனுப்புக. கதையின்ஏந்தப்பக்கத்திலும் எழுதியவர்பெயர் இருக்கக்கூடாது. மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா தேர்தெடுக்கப்பட்டகதைகள் ‘வெல்லும்தூயதமிழ்’ மாதஇதழில் வெளியிடப்படும். நடுவர் தீர்ப்பே இறுதியானது . சிறுகதைப்படைப்பாளர் உறுதிமொழி இணைக்க வேண்டும் பொறிஞர் இரா.தேவதாசு இவ்வாண்டு  பரிசுகள் வழங்குகிறார். இரண்டுமுதற்பரிசுகள் 750.00=1500 உரூ. இரண்டுஇரண்டாம் பரிசுகள் 500.00=1000 உரூ. இரண்டுமூன்றாம்பரிசுகள் 250.00= 500 உரூ.   க.தமிழமல்லன் தலைவர், தனித்தமிழ்இயக்கம்

புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் சிலப்பதிகார விழா

  தி.பி.2046 வைகாசித்திங்கள் 16ஆம் நாளன்று (30.5.2015) புதுவைத் தமிழ்ச்சங்கம் அதன் தலைவர் வெ.முத்து தலைமையில் சிலப்பதிகார விழாவை நடத்தியது.   செயலர் மு.பா. வரவேற்றார். து.த.கோ.பாரதி முன்னிலையுரை நிகழ்த்தினார்.   தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் சிலப்பதிகாரம் பற்றிய சிறப்புரை நிகழ்த்தினார்.   கலைமாமணி கல்லாடன் தலைமையில் பாட்டரங்கமும் தமிழ்மாமணி கோ. சாரங்கபாணி தலைமையில் வழக்காடு மன்றமும் நடைபெற்றது.   நிறைவாக விசாலாட்சி நன்றி கூறினார்