தனித்தமிழ்ச்சிறுகதைப்போட்டி

தனித்தமிழ்இயக்கம், புதுச்சேரி   தனித்தமிழியக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி  பரிசு 3000.00 உருவா   கதைகள்வந்துசேரவேண்டியகடைசிநாள்: 31.7.2014 முகவரி : முனைவர்க.தமிழமல்லன், தலைவர், தனித்தமிழ்இயக்கம், 66,மாரியம்மன்கோயில்தெரு,தட்டாஞ்சாவடி,புதுச்சேரி-605009 தொ:0413-2247072   நெறிமுறைகள்:    1. அ4 தாளில் 5 பக்கம்கொண்ட, குமுகாயக்கதைகள், பிறசொற்கள் பிறமொழிப்பெயர்கள்கலவாதநடையில்எழுதப்படல்வேண்டும். 2. கதையின்இரண்டுபடிகளைஅனுப்பவேண்டும். ஒருபடியில்மட்டும்பெயர், முகவரிகளைத்தனித்தாளில்இணைத்துஅனுப்புக. கதையின்ஏந்தப்பக்கத்திலும் எழுதியவர்பெயர்இருக்கக்கூடாது. 3. மொழிபெயர்ப்பு, முன்னரேவெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா 4. தேர்தெடுக்கப்பட்டகதைகள்‘வெல்லும்தூயதமிழ்’மாதஇதழில்வெளியிடப்படும். விருப்பம்உள்ளவர்கள்அதற்கானவிலைஉருவா 20.00 இணைத்துஅனுப்பவேண்டும் 5. நடுவர்தீர்ப்பேஇறுதியானது . 6. சிறுகதைப்படைப்பாளர்உறுதிமொழிஇணைக்கவேண்டும் பொறிஞர்இரா.தேவதாசுஇவ்வாண்டு  பரிசுகள்வழங்குகிறார். இரண்டுமுதற்பரிசுகள் 750.00=1500 இரண்டுஇரண்டாம் பரிசுகள் 500.00=1000 இரண்டுமூன்றாம்பரிசுகள்…

தனித்தமிழ் இயக்கம் – சிலப்பதிகார விழா

  தனித்தமிழ் இயக்கம் ஆனி 16, 2045 – 30.6.2014 அன்று மாலை சிலப்பதிகார விழா ஒன்றை அதன் தலைவர் தனித்தமிழறிஞர் முனைவர் க.தமிழமல்லன் தலைமையில் நடத்தியது. தமிழ்த்தென்றல் வரவேற்புரை வழங்கினார். திருவாட்டி த.தமிழ்இசைவாணி செயல்அறிக்கை படித்தார்.   தூ.சடகோபன், நா.அப்பாத்துரை, முதலியோர் முன்னிலையில் அவ்விழா புதுவை வேல்.சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடைபெற்றது.   திருவள்ளுவர் படத்தையும் மறைமலையடிகள் படத்தையும் கடலூர் மாவட்ட நூலகஅலுவலர் திருவாட்டி பெ.விசயலட்சுமி அவர்கள் திறந்துவைத்துப் பேசினார்.   சட்டமன்ற உறுப்பினர் ஆ.அசோக்ஆனந்து, வாழ்த்துரை வழங்கினார்.   ‘கற்பைப் போற்றிய…

தனித்தமிழ் இயக்கம் நடத்திய இலக்கிய விருந்தரங்கம்

ஆனி 17, 2045 / 1.7.2014 செவ்வாய் மாலை 6.30 மணிக்குப் புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் இலக்கிய விருந்தரங்கம் நடைபெற்றது. தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த அவ்விழாவுக்கு ஆசிரியர் சோ.இராமச்சந்திரன் தலைமை தாங்கினார். த. தமிழ்த்தென்றல் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறுமி சா.கலைமதி நடன மாடினார். த.தமிழ்நேயன் சிறுவர் பாடல்கள் பாடினார். புலவர் சிவ.இளங்கோவன்,புலவர் இ.பட்டாபிராமன் ஆகியோர் இலக்கியச்சுவைபற்றிப் பேசினர். சட்டமன்ற உறுப்பினர் க.இலட்சுமிநாராயணன் தனித்தமிழ் அறிஞர் க.தமிழமல்லன் அவர்களைப் பொன்னாடை போர்த்திப் பாராட்டினார். நிகழ்ச்சியில் இடம்பெற்ற பாவரங்கில் பாவலர்கள் தேவகிஆனந்து,…