அகல் விளக்கு – மு.வரதராசனார்: 59
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 58. தொடர்ச்சி) “நீ ஒரு பைத்தியம்’டா. அவள் என்ன செய்வாள்? கையோடு அழைத்துக்கொண்டு வந்து விட்டு விட்டான். சொத்தோடு வந்தால் வா, இல்லாவிட்டால் வரவேண்டா என்று சொல்லி விட்டுவிட்டுப் போனால் அந்தப் பெண் என்ன செய்யமுடியும்?” “மறுபடியும் புறப்பட்டுக் கணவன் வீட்டுக்கே போகவேண்டும்?” “அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளினால்? – அவன் அப்படிப்பட்ட முரடனாகத் தெரிகிறதே” என்னால் நம்பவே முடியவில்லை. “அப்படிச் சொல்லாதே அம்மா! தப்பு, தப்பு” என்றேன். “உன் கண்ணுக்கு எல்லாரும் நல்லவர்களாகத் தெரியும். கற்பகத்தின் திருமணத்துக்கு…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 58
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 57. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 24 ஏதாவது ஒரு வேலை வேண்டும் வேண்டும் என்று மாலன் அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருந்தான். நண்பராகிய நகர்மன்றத் தலைவரிடம் அவனுடைய நிலையை எடுத்துரைத்தேன். உள்ளூரிலே ஒன்றும் இல்லையே என்று அவர் வருந்தினார். அவருடைய பொதுத் தொண்டு காரணமாகச் சென்னையில் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்த காரணத்தால் அங்காவது ஒரு வேலை தேடித் தருமாறு வேண்டிக் கொண்டேன். அவ்வாறே அவர் அடுத்த முறை சென்னைக்குச் சென்றபோது இதே கூட்டுறவுத் துறையில் நூறு…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 57
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 56. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 23 தொடர்ச்சி இருந்தாலும், புத்தகப் படிப்பில் அவளுக்கு, ஆர்வம் இல்லை. போகப் போக அதை நன்றாக உணர்ந்தேன். புத்தகப் படிப்பில் அக்கறை இல்லாவிட்டாலும், அறிவுப் பசி மட்டும் இருந்தது. செய்தித்தாள் படித்து ஏதாவது சொன்னால், ஆர்வத்தோடு கேட்பாள். வார இதழிலிருந்து ஏதாவது கதை படித்துச் சொன்னால் கேட்பாள். நாளடைவில் அவளே அந்த இதழ்களில் இருந்த கதைகளைப் படித்துப் பழகினாள். பழக்கம் விடவில்லை. வார இதழ்கள் எப்போது வரும் என்று காத்திருந்தாள். சிறு…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 56
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 55. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 23 கோவைக்குச் சென்றதும் மாலனுடைய கடிதம் பார்த்தேன். வேலை எங்கும் கிடைக்கவில்லை என்பதைக் குறித்து வருந்தி எழுதியிருந்தான். நான் இருக்கும் கூட்டுறவுத் துறையிலேயே தனக்கும் வேலை தேடித் தருமாறு கோரி இருந்தான். ஒரு வேளை சோதிடர் சொன்னதைக்கேட்டே இந்த முடிவுக்கு வந்தானோ என எண்ணினேன். இயன்ற முயற்சி செய்து கேட்டும் பார்த்தேன். பி.ஏ. ஆனர்சு, எம்.ஏ. படித்தவர்கள் போட்டியிட்டுக்கொண்டு வருவதால் பி.ஏ.வில் ஒருமுறை தவறியவர்களுக்கோ, மூன்றாம் வகுப்பில் தேறியவர்களுக்கோ இடமே இருக்காது…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 55
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 54. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 22 தொடர்ச்சி “நாம் வீடுகளுக்கு வலுவான கதவும் சன்னலும் வைத்து, உறுதியான தாழ்ப்பாளும் போட்டு இரவில் படுத்துக் கொள்கிறோம். வாசலுள் யாரும் இறங்கி வராதபடி வாசலிலும் கம்பிகள் போட்டுவிடுகிறோம். எல்லோரும் இப்படிச் செய்தால் திருடர்கள் எப்படிப் பிழைப்பார்கள்? அவர்களுடைய மனைவி மக்கள் என்ன ஆவார்கள்?” என்றார் பாக்கியம். இப்போது என் மனைவியும் சேர்ந்து ஒரே ஆரவாரமாகச் சிரித்தது கேட்டது. “பட்டுத் தொழிலும் வீட்டில் திருடுவதும் ஒன்றுதானா?” என்று சிரித்தபடியே மனைவி கேட்டாள்….
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 54
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 53. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 22 தொடர்ச்சி ஆனாலும் இவ்வளவு தெளிவு ஏற்படவில்லையே என்று உணர்ந்தேன். சிலர் நூல்களைப் படிப்பதால் மூளையில் இன்னும் கொஞ்சம் சரக்குச் சேர்த்துக் கொள்கிறார்கள். என் நிலைமை அப்படித்தான் இருந்தது. என் நிலை மட்டும் அல்ல. பெரும்பாலும் நிலை அதுதான். அதனால்தான் படிப்பு என்பது ஒரு சுமையாகத் தோன்றுகிறது. பாக்கிய அம்மையார் படித்த புத்தகங்களின் கருத்துகளை உணர்ந்தார்; தெளிவு பெற்றார். எங்கள் கல்விச் சுமை, உடம்பில் தோன்றும் தொந்தியும் வீண் தசைகளும்…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 53
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 52. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 22 தொடர்ச்சி முதலில் தங்கை தன் கணவரைப் பற்றிக் குறை சொன்னபோது எனக்கு அவர்மேல் வெறுப்புத் தோன்றியது. அன்பும் இரக்கமும் இல்லாத கல் நெஞ்சராக இருக்கிறாரே. கதர் உடுத்தும் காந்தி நெறியராக இருந்தும் இப்படி நடக்கக் காரணம் என்ன என்று வருந்தினேன். அடிப்படைக் காரணத்தை நான் உணரவில்லை. ஆனால் பாக்கிய அம்மையார் எவ்வாறோ உணர்ந்து கொண்டார். அதனால்தான் அந்தப் போக்கில் பேசி அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். அந்த அம்மையாரின் நுட்பமான…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 52
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 51. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 22 அங்கங்கே வேலைகளுக்கு முயன்றேன். சில இடங்களுக்கு எழுதினேன். சில இடங்களில் நேரில் சென்றும் முயன்றேன். பணியாளர் தேர்வாணையத்துக்கு விண்ணப்பம் எழுதினேன். அதற்கு உரிய தேர்வும் எழுதினேன். தொழிலும் இன்றிக் கல்வியும் இன்றி வாலாசாவில் பொழுது போக்குவது ஒரு துன்பமாக இருந்தது. பெரிய குடும்பத்தில் ஒரு சின்னக் குடும்பமாக எங்கள் இல்வாழ்க்கை நடந்தது. ஆகையால் குடும்பச் சுமை உணரவில்லை. மனைவி கயற்கண்ணிக்கு எங்கள் வீடு புதிது அல்ல; எனக்கும் அவள் புதியவள்…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 51
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 50. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 21 தொடர்ச்சி “உனக்கும் அப்படித்தான். இனிமேல் படிப்பதாக இருந்தால் நீ சொல்வது சரி. படிப்பு இனிமேல் இல்லை என்று முடிவாகிவிட்ட பிறகு, திருமணம் செய்துகொள்வது நல்லது. பணக்காரக் குடும்பத்தினர் உன்னைத் தேடி வருவார்கள். விருப்பமாக இருந்தால் சொல். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் விருப்பம் இல்லை. அவர்களுக்குச் சமமாகப் பணம் இல்லாவிட்டால், நம்மை மதிக்கமாட்டார்களே என்று அம்மாவும் அப்பாவும் அஞ்சுகிறார்கள். ஆகவே பொருளாதாரக் கவலை தான் இதற்கும் காரணம். அத்தை மகள், அக்கா மகள்…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 50
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 49. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 21 பி.ஏ. தேர்வு நன்றாகவே எழுதி முடித்தேன். நல்ல வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. மாலன் அவ்வளவு நம்பிக்கையோடு பேசவில்லை. மூன்றாம் பகுதியைப் பற்றிக் கவலைப்பட்டான். “நீ எப்போதும் இப்படித்தான். உனக்கு எத்தனையோ நம்பிக்கைகள் உண்டு. உள்ளதைச் சொல்ல மாட்டாய்” என்றேன். “உனக்கு ஒரு நம்பிக்கையும் இல்லையா?” என்றான். “உழைப்பில் நம்பிக்கை உண்டு. அறத்தில் நம்பிக்கை உண்டு.” “கூடிய வரையில் உழைக்கிறோம். எதிர்பார்த்த பயன் கிடைக்கவில்லை. அதற்கு என்ன காரணம்…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 49
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 48. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 20 தொடர்ச்சி பிறகு வேறு பேச்சில் ஈடுபட்டவர்போல், “இந்த ஊர் போல் நீர்வளம் உடைய ஊர் வேறு ஒன்றும் இல்லை. ஆனால், ஏரி வறண்டால் ஒரு பயனும் இல்லை” என்று பேசத் தொடங்கினார். வந்த சந்திரன் ஆசிரியரோடு பேசாமலே நின்றான். “மேளக்காரர் இன்னும் வரவில்லையா? எத்தனை முறை சொல்லி வைத்தாலும் நாய்களுக்கு உறைப்பதே இல்லை” என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய மனைவி அஞ்சி ஒடுங்கி அந்தப் பக்கமாக வந்து…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 48
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 47. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 20 மாலனுடைய திருமணம் ஆவணி இறுதியில் அமைந்தது. கால் ஆண்டுத் தேர்வு முடிந்துவிட்ட பிறகே திருமணம் நடைபெறுவதால், ஒருவகை இடையூறும் இல்லாமல் திருமணத்திற்கு வந்து போகுமாறு மாலன் கூறிச் சென்றான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பெருங்காஞ்சிக்கு ஒருமுறை போய்வரலாம் என்று முடிவு செய்தேன். மாலன் தந்த அழைப்பு அல்லாமல், சந்திரன் அனுப்பிய அழைப்பும் வந்தது. சந்திரன் தனியே கடிதமும் எழுதியிருந்தான். நல்ல காலம், அவனுடைய மனம் மாறியிருக்கிறது என மகிழ்ந்தேன்….