அகல் விளக்கு – மு.வரதராசனார்: 30
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 29 . தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 12 (தொடர்ச்சி) சந்திரன் தொடர்ந்து பேசினான். “நான் அப்படிக் கோபத்தோடு சொல்லவில்லை. அது என்னுடைய கடமை அல்ல என்று சொன்னது உண்மைதான். சிறுநீர் கழித்த பிறகு ஒவ்வொருவரும் தண்ணீர் பிடித்துக் கொட்டிக் கொண்டிருக்க முடியாது. அதனால் என் கடமை அல்ல என்றேன். அதற்கு இந்த ஆள் என்னைப் பார்த்து ஒரு பெரிய சொற்பொழிவு செய்யத் தொடங்கினார். நீங்கள் எல்லாம் பெரிய காந்தி பக்தர்களா? காந்தி சொன்ன வழியில் நடக்கத் தெரியாமல் வீண்…
கீழடி ஆய்வுக் கருத்தரங்கம், சென்னை: செய்தியும் காணுரையும்
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் கீழடி ஆய்வுக் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது இதனில் மேனாள் தொல்லியல்துறையாளர் சாந்தலிங்கம், தொல்லியல் வரலாற்று ஆர்வலர் வெங்கடேசன் ஆகியோர் தம் கருத்துரைகள் வைத்தனர் சாந்தலிங்கம் முன்பு நடந்த அகழாய்வுகள் கீழடியைவிடப் பெரும் அளவில் முதன்மை வாய்ந்தன. அவற்றின் அறிக்கைகள் வெளியிடப்படவில்லை எனினும் தமிழகம்தான் வட இந்தியாவைவிட முந்தியது மட்டுமல்ல எழுத்தறிவுடன்கூடிய நாகரிகத்தில் மூத்தது அசோகர் காலத்தைவிடச் சில நூற்றாண்டு முந்தைய கல்லெழுத்துகள் தமிழகத்தில்தான் கிட்டியுள்னள. மூன்று அடுக்குகள் உள்ள கால வெளியில்…