‘புலம்பெயர் மணற்துகள்கள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா – சார்சா

சார்சாவில் மலையாள எழுத்தாளர் இசுமாயில் மேலடி ஆங்கிலத்தில் எழுதித் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘புலம்பெயர் மணற்துகள்கள்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நாள் : ஆனி 16, 2053 03 / சூலை 2022 ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 9.30 மணி முதல் 12 மணி வரை இடம் : சார்சா அரண்மனை(பேலசு)உறைவகம், சார்சா தலைமை: முகிப்புல் உலமா அல்காசு ஏ. முகம்மது மஃகரூபுப் பங்குதாரர், சங்கீதா உணவகம், துபாய் முன்னிலை: முனைவர் ஆ. முகம்மது முகைதீன் நிறுவனத் தலைவர், கல்லிடைக்குறிச்சி தேசியக்…

11ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, சார்சா, சூலை 2023

உலகத்தமிழராய்ச்சி மன்றம்(IATR) இலிங்கன் தொழில் மேலாண்மைப் பல்கலைக்கழகம் சார்சா, ஐக்கிய அரபு அமீரகம் 11ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆய்வுச் சுருக்கம் சேர வேண்டிய நாள்:  புரட்டாசி 13, 2053 / 30.09.2022 ஆய்வுக் கட்டுரை மின்னஞ்சல்வழிச் சேர வேண்டிய நாள்: பங்குனி 17, 2054 / 31.03.2023 மின்வரி: abstract2023@gmail.com தொடர்பு முகவரி : 9, சாரங்கபாணி தெரு, தியாகராய நகர், சென்னை 600 017 பேசி 28340488, 96770 37474, 98422 81957, 96000 07819 www.iatrinternational.org  / 11worldtamilconf@gmail.com ஆன்றோர்(தான்சிரீ)…

சார்சாவில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி

சார்சாவில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி   சார்சா இனிய திசைகள் வாசகர் வட்டத்தின் சார்பில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் திருச்சி சாதிக்கு அலி தலைமை வகித்தார். ’என்னைத் தேடி’ என்ற சிறுகதை நூலை இனிய திசைகள் ஆசிரியர் பேராசிரியர் சே.மு.முகமதலி வெளியிட முதல் படியைச் சாதிக்கு அலி பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் இந்த நூலை நசீமா இரசாக்கு திறம்பட வடிவமைத்துள்ளார். அவர், “தியான வாழ்வின் மூலம் வாழ்வில் வசந்தத்தைக்…

துபாயில் சோபியாவின் கனலி நூல் வெளியீட்டு விழா

துபாயில்  சோபியாவின் கனலி நூல் வெளியீட்டு விழா துபாய் : துபாயில் பணிபுரிந்து வரும் திருமதி.  சோபியாவின் கவிதை நூல் தொகுப்பு ‘ கனலி’ ஆனி 15, 2048 /  29.06.2017 வியாழக்கிழமை மாலை துபாய் வசந்த பவன் உணவகத்தில் வெளியிடப்பட்டது. ஓசூரைச் சேர்ந்த இவர்  சார்சாவில் தமிழ்  ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். துபாய் அல்நாதா வசந்தபவனில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக காப்பியக்கோ.திரு சின்னா சர்ப்புதீன் கலந்து கொண்டார். அபுதாபியைச் சேர்ந்த எழுத்தாளர்  (இ)யூசுப்பு தலைமையேற்றார். திருமதி. செசிலாபானு, ஆசிப் மீரான் ,…

சார்சாவில் இரத்தத் தான முகாம்

சார்சாவில் இரத்தத் தான முகாம் சார்சா நகர் மையம்  பின்புறம் உள்ள  நகர் வாடகைஊர்தி(City-Taxi)  அலுவலகத்தில் மாசி 07, 2048 – திங்கட்கிழமை  –  20.03.2017 காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணி வரை குருதிக்கொடை முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் முதுவை  இதாயத்து 050 51 96 433 கீழை ஏ  அமீது  யாசின் 052 777 8341 ஆகியோரைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

சார்சாவில் பல் மருத்துவ இலவச முகாம்

சார்சா (உ)ரோலா பகுதியில் தமிழர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ள பல் மருத்துவமனையான அல் சுரூக்கு பல்துறை மருத்துவக்கூடத்தில் இலவச பல் மருத்துவ முகாம் சனவரி இறுதி வரை நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த   மருத்துவர் சிராசுதீன்  பற்களுக்குத் தேவையான அனைத்து விதமான  மருத்துவம்  குறித்து இலவச ஆலோசனை வழங்குவார். முகாமில் பங்கேற்க விரும்புவோர் 06 – 5685 022 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   – முதுவை இதாயத்து

மறக்க இயலாத சார்சா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி – இராபியா குமாரன்

மறக்க இயலாத சார்சா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி        சென்னை புத்தகக் கண்காட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கலந்து கொண்டு பெற்ற துய்ப்பறிவும், மகிழ்ச்சியும் என்றைக்கும் மறக்க இயலாதது. பொருளீட்ட வேண்டிய கட்டாயத்தின் காரணமாக விமானம் ஏறித் துபாய் வந்தபோது, இனி வரும் காலங்களில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ள இயலாமல் போய்விடுமே என்ற கவலைதான் மற்ற எல்லாக் கவலைகளையும் விட பெரும் கவலையாக மனத்தை ஆட்கொண்டிருந்தது.    அந்தக் கவலைக்கு அருமருந்தாக அமைந்தது சார்சா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி தந்த…

தாய்மை – காரைக்குடி பாத்திமா அமீது

தாய்மை  இறைவனைக் காண நினைத்தேன் உன்திருமுகம் காணும் முன்பாக உணரத் துடித்தேன் சொர்க்கமதை உன்னிரு  பாதங்களில் பணியும் முன்பாக. எழுத சொற்கள் இல்லையம்மா வளர்த்த விதம் சொல்வதற்கு பாடிடச் சொற்கள் கிடைக்கவில்லை பாடுபட்டு படிக்க வைத்ததற்கு! விறகடுப்பின் புகையில்நீ வெந்துஎம் பசிபோக்கினாய்! வியர்வை நீரூற்றி எங்களை வளர்த்து ஆளாக்கினாய்! பட்டங்கள் பெறவைத்துப் பார்த்துப் பூரித்துப்போனாய்! வெற்றிகள் பலகொடுத்து வேதனைகளை விரட்டினாய்! கவிதைகளால் தாலாட்டி கண்ணுறங்கச் செய்தாய்! வருணனைகள் பலதந்து என்னுள் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறாய்! பாரங்களை இறக்கிட உன் பாதங்கள் வேண்டும் இனிதே தூங்கியெழ உன் மடிவேண்டும் ஒரு…