தோழர் தியாகு எழுதுகிறார் 157 : திராவிடம் – வி.இ. குகநாதன் கட்டுரை
(தோழர் தியாகு எழுதுகிறார் 156 : “மக்கார்த்தியம்” தொடர்ச்சி) திராவிடம் – வி.இ. குகநாதன் கட்டுரை அன்பர் சிபி கேட்கிறார்… திராவிடம் என்பற்கு முதல் அல்லது அடிப்படை என்ன? அச்சொல் எங்கிருந்து வந்தது அல்லது எடுத்தாளப்பட்டது? அதற்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு? தாழி விடை: “திராவிடம் என்றால் என்ன?” என்பதனை விளக்கித் திரு வி.இ. குகநாதன் எழுதிய ஒரு கட்டுரையினைத் தருகின்றேன். ’திராவிடம்` என்ற சொல் குறிப்பது என்ன? இது பற்றிய பல்வேறு தவறான விளக்கங்கள் மக்களிடையே பரவிக் கொண்டிருக்கும் காலமிது. `திராவிடம்` என்பது ஒரு சமற்கிரதச் சொல், `திராவிடம்` என்பது தெலுங்கர்களைக் குறிப்பது,…
தோழர் தியாகு எழுதுகிறார் 116 : ஆர்எசுஎசு கும்பலின் காவித் திகிலியம் (2)
(தோழர் தியாகு எழுதுகிறார் 115 : ஆர்எசுஎசு கும்பலின் காவித் திகிலியம் (1) தொடர்ச்சி ) ஆர்எசுஎசு கும்பலின் காவித் திகிலியம் (2) பன்வார் மேகவன்சி என்ற பெயரைக் கேள்விப்பட்டுள்ளீர்களா? இவர் ஒடுக்கப்பட்டவராக இருந்தும் ஆர்எசுஎசு அமைப்பில் சேர்ந்து பற்றார்வத்துடன் பணி செய்தவர். 1991 மே முதல் 1992 திசம்பர் வரை ஆர்எசுஎசு-இல் இருந்தவர். இது ஆர்எசுஎசு வரலாற்றில் முனைப்புமிகுந்த காலம். பாபர் மசூதியை இடித்த காலம். கரசேவைக் காலம். பாபர் மசூதி இந்து தேசத்துக்கு அவமானச் சின்னம் என்றும், அதை இடித்து அந்த இடத்தில் இராமர் கோயில்…
தோழர் தியாகு எழுதுகிறார் 93 : இறையூர் இழிவு
(தோழர் தியாகு எழுதுகிறார் 92 :மறதிச் சேற்றில் புதைந்து போகாமல் – தொடர்ச்சி) இறையூர் இழிவு இனிய அன்பர்களே! சிபி வினவுகிறார்: இறையூர் பட்டியலினத்தவர் பகுதியிலுள்ள தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்த நிகழ்வினைக் குறித்துத் தங்களின் கருத்தென்ன தோழர்? கண்டிக்கிறேன், வேதனைப்படுகிறேன், இந்த இழிசெயல் புரிந்த தமிழ்க் குமுகத்தில் நானும் இருப்பதற்காக வெட்கப்படுகிறேன். இதெல்லாம் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. திண்ணியம் கொடுமை பற்றியும் அது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு பற்றியும் அந்த நேரத்தில் தமிழ்த் தேசம் திங்களேட்டில் நான் எழுதிய கட்டுரையை விரைவில் தாழியில்…
தோழர் தியாகு எழுதுகிறார் 59
(தோழர் தியாகு எழுதுகிறார் 58 தொடர்ச்சி) தருக்க முறையும் கொள்கை அறிவிப்பும் அன்பர் சிபி பெரியார்-பிரபாகரன் தொடர்பாக அன்பர் சத்தியசீலன் தொடங்கி வைத்த உரையாடலைத் தொடரும் வகையில் பின்னவரின் மடலிலிருந்து ஒரு சொல்லியத்தைத் திரையடி எடுத்து அனுப்பியுள்ளார். இதுதான் அது: ___புலிகள் எவ்விடத்திலும் திராவிட இயக்கத்தைச் சாடியதாக நான் குறிப்பிடவில்லை – மாறாக அவர்களின் புகழ் பாடிக் கொண்டே அவர்கள் செய்யாத செயலை இவர்கள் ஏன் செய்ய வேண்டும்?___ “இனவாதிகள்” பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் சாடுவதாகச் சொல்லி, அதற்கான பழியைப் புலிகள் மீதும்…
தோழர் தியாகு எழுதுகிறார் 46: சொல்லடிப்போம் வாங்க! (6)
(தோழர் தியாகு எழுதுகிறார் 45 தொடர்ச்சி) சொல்லடிப்போம் வாங்க! (6) பொன்முருகு கவிமுருகு எழுதுகிறார்: இயம், இசம், இயல் எல்லாமே கொள்கை அல்லது தத்துவம் என்பதற்கான சொல்லாட்சிதானே தோழர்? தாராளியம் என்பது எப்படி அமைப்பையும், தத்துவத்தையும் குறிக்கிறது? என்பதை விளக்கப்படுத்துங்கள். இசம் என்று எழுதுவது ism என்று ஆங்கிலத்தில் சொல்வதன் ஒலிப்பெயர்ப்பு. இயல் என்பது அமைப்பாகவும் இருக்கலாம், கொள்கையாகவும் இருக்கலாம். அரசியல் (politics), பொருளியல் (economics), புவியியல் (geography) என்னும் சொற்கள் இடம் பொருள் ஏவலைப் பொறுத்து வாழ்க்கைத் துறைகளையோ அறிவுத் துறைகளையோ குறிக்கும். இசம் என்பதற்கு மாற்றாகச் சிலர் இயலைப் பயன்படுத்துகின்றனர். காட்டாகப், பெரியாரியல் என்பது…
இலக்கு வழங்கும் அறிவுநிதி விருது & முத்திரைத் தொடர்
ஆனி 2, 2046 – சூன் 17, 2015 வணக்கம். நலம். வளம் சூழ வேண்டுகிறோம். இளைய தலைமுறையின் நலனில் அக்கரை கொண்ட ‘இலக்கு’ , ஏற்றுமதி – இறக்குமதித் துறையில் ஏற்றம் காண அன்புடன் அழைக்கிறது.. என்றென்றும் அன்புடன் சிபி நாராயண் யாழினி j;
இலக்கு -அறிவுநிதி விருது
வைகாசி 06, 2046 / மே 20, 2015
மூளையே மூலதனம் :இலக்கின் செப்தம்பர் நிகழ்ச்சி
வணக்கம்.. நலம் வளம் சூழ வேண்டுகிறோம்.. இலக்கு நிகழ்வுக்குத் தொடர் ஆதரவு அளித்து, இளைய தலைமுறையை ஊக்கப் படுத்தி வரும் தங்கள் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றி.. இந்த மாத நிகழ்வு : ஆவணி 27, 2045 /12.09.2014. வெள்ளியன்று, மாலை 6.30. மயிலாப்பூர் பாரதிய வித்யாபவன் சிற்றரங்கில், தங்கள் ஒத்துழைப்போடு, ஆக்கப்பூர்வமாக செயல்பட விழைகிறோம்.. நேரிடையாய் வந்திருந்து நெஞ்சார வாழ்த்துவதோடு, தங்கள் கருத்துகளையும் பகிர்ந்துதவ வேண்டுகிறோம்.. என்றென்றும் அன்புடன்.. இலக்கியவீதி இனியவன் (நெறியாளர் : இலக்கு) ப.சிபி…
மூளையே மூலதனம் – அறிவுநிதி விருது
– தன்னம்பிக்கைத் தொடர் நிகழ்ச்சி “2009 இல் ‘இலக்கு ‘ என்னும் பல்கலைப் பயிலரங்கம் நிறுவி ஓவியம், கையெழுத்து எனக் குழந்தைகளுக்கான வழக்கமான பயிற்சிகளுடன் நினைவாற்றல், தன்னம்பிக்கை ஆளுமைத் திறன், குமுகாயச் சிந்தனை ஆகிய பிரிவுகளிலும் கோடைக்கால முகாம்களை நடத்தினோம், தற்போது இதன் விரிவாக்கமாக வறுமை, இயலாமை, வழிகாட்டுதல் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் தடம் மாறும் இளைஞர்களுக்காக ‘மூளையே மூலதனம்‘ என்னும் பெயரில் ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு தலைப்புகளில் அறிவுசாரர் பெருமக்களின் எழுச்சியூட்டும் தன்னம்பிக்கை உரைவீச்சுகளுக்கு…