கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -3: அன்றே சொன்னார்கள்43 – இலக்குவனார் திருவள்ளுவன்

(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -2 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -3       பழந்தமிழர்கள், மாடம் என்று பலமாடிக் கட்டடங்களையே குறித்துள்ளனர். மிகுதியாக மாடிகளைக் கொண்ட கட்டடங்கள் நெடுநிலை மாடங்கள் எனப்பட்டன. பொதுவாக 7 மாடிக்கட்டங்கள் இருந்துள்ளன.  இவற்றுள் தரைத்தளம் பொதுவாகவும் பிற பருவச் சூழல்களுக்கேற்ப வெம்மை தாங்குவன, தென்றல் வீசுவன, என்பன போன்றும் இருந்திருக்கின்றன.   இளங்கோ அடிகள் அவர்கள் கோவலன், கண்ணகி ஆகிய இருவரும் நெடுநிலை மாடத்து இடைநிலத்து  இருந்துழி (இருந்த பொழுது) எவ்வாறு மகிழ்ச்சியாக இருந்துள்ளனர் எனக் குறிப்பிடுகிறார் (சிலப்பதிகாரம் : 1:2:…

கதிரவன் தன்மைகளைக் கணித்த கன்னித்தமிழர், அன்றே சொன்னார்கள்35, இலக்குவனார் திருவள்ளுவன்

(வெள்ளி குறித்து வெகுவாக அறிந்திருந்தனர் – தொடர்ச்சி) கதிரவன் தன்மைகளைக் கணித்த கன்னித்தமிழர்  சூரியன் அல்லது ஞாயிறு ஒரு விண்மீனே! சூரியனின் கிரேக்கப் பெயர் அப்பல்லோ என்பதாகும். கிரேக்கத் தொன்மக் கதையின்படி லெட்டோ (Leto)வின் உறவால் சீயசு (Zeus) தாய் ஆகிக் குழந்தையைப் பெற்றுக் கொள்ள இடம் தேடி அலைந்து இறுதியில் கிரேக்கத்தில் உள்ள தீவில் (தெலோசு : Delos) அப்பல்லோவைப் பெற்றெடுக்கிறாள். சப்பான், சிரியன் முதலான  சில நாடுகளில் சூரியன் பெண் கடவுளாகக் கருதப்படுகிறது. சூரியக் கடவுளின் பெயர் சப்பானில் அமத்தெரசு (Amaterasu)…

வெள்ளி குறித்து வெகுவாக அறிந்திருந்தனர் – அன்றே சொன்னார்கள் 34 – இலக்குவனார் திருவள்ளுவன்

(புதன் இயல்பைப் புரிந்து இருந்தனர்! – தொடர்ச்சி) வெள்ளி குறித்து வெகுவாக அறிந்திருந்தனர்   கதிரவனிலிருந்து இரண்டாவதாக உள்ள கோள். எனினும் பூமியின் மிக அருகில் உள்ள கோள். வெள்ளிக்கோளின் ஆங்கிலப் பெயர் வீனசு (Venus) என்பதாகும். வீனசு உரோமப் பெண்கடவுள் ஆகும். இலத்தீன் மொழியில் வீனசு என்றால் காதல் என்றும் காமவிருப்பம் என்றும் பெயர். இதற்கு இணையான கிரேக்கப் பெண்கடவுள் பெயர் அபிரடைடி (Aphrodite). எனவே, வீனசு காதல் கடவுள் ஆகும். உரோமானியர்கள், கிரேக்கர்கள் முதலானோர்போல், பிறப்பு, உடன் பிறப்பு கதைகள் அடிப்படையில் இல்லாமல்…

திங்கள் மீது தீராக் காதல் கொண்டவர்கள் – அன்றே சொன்னார்கள் 32 : இலக்குவனார் திருவள்ளுவன்

(மணிப்பொறிகளை மாண்புடன் அமைத்தனர் –-தொடர்ச்சி) திங்கள் மீது தீராக் காதல் கொண்டவர்கள் கடலலைகள் நிலவினால் உருவாவதாகக் கி.மு.2ஆம் நூற்றாண்டில் செலியூகசு (Seleucus) என்னும் அறிஞர் குறிப்பிட்டார். பின்னர் உரோமன் அறிஞர் செனெக்கா (Seneca) நிலவொளிக்கும் கடலலைகளுக்கும் உள்ள தொடர்பைக் குறிப்பிட்டார். கி.பி. 499 இல் ஆரியபட்டரும் இதைக் குறிப்பிட்டுள்ளார். கி.பி.1687 இல் அறிஞர் ஐசக்கு நியூட்டன் புவி ஈர்ப்பு விதியைத் தெரிவித்த பின்பு இக் கருத்து மேலும் வலுப்பட்டது. ஆனால், சங்கக்  காலத்திலேயே நிலவொளிக்கும் கடல் அலைகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அதன் வழி…

மணிப்பொறிகளை மாண்புடன் அமைத்தனர் – அன்றே சொன்னார்கள் 31: இலக்குவனார் திருவள்ளுவன்

( எழுத்தைக் காப்போம் !    – தொடர்ச்சி) மணிப்பொறிகளை மாண்புடன் அமைத்தனர் கடிகாரத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான கிளாக்கு (clock) மணி என்னும் பொருளைத் தரும் கிளோக்கா என்னும் செல்திக்கு (Celtic Language) சொல்லில் இருந்து உருவானது. மணி என்பது முதலில் ஒலிக்கும் மணியைக் குறித்தது. மணி அடித்து நேரத்தை அறிவித்ததன் அடிப்படையில் இச் சொல் பின்னர் மணியைக் குறிப்பதாக மாறியது. பீட்டர் என்கின் என்னும் பூட்டுத் தொழிலாளி கி.பி.1510இல் நிலைக் கடிகாரம் ஒன்றை உருவாக்கினார். கி.பி.1656இல் இயூயன்சு என்னும் ஆலந்து நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர் ஊசல்…

வால் நட்சத்திரம் என்பது நட்சத்திரம் அல்ல! அன்றே சொன்னார்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனியின் நிறம், தன்மை, இயல்பு அறிந்த விந்தை மனிதர்கள்! – தொடர்ச்சி) வால் நட்சத்திரம் என்பது நட்சத்திரம் அல்ல!  இன்றைக்கு நாம் வால்நட்சத்திரம் என்று சொல்லப்படுவதன் கிரேக்கப் பெயர் கோமெட்(kometes) என்பதாகும். இதிலிருந்தே காமெட் (comet) என்னும் ஆங்கிலப் பெயர் தோன்றியது. நீண்ட முடி என்பது இதன் பொருள். கிரேக்க அறிவியலாளர் அரிசுடாடில் (Aristotle) தலைமுடி போல் தெரிவதாகக் கூறி இதனை அப்பொருளில் முதலில் குறிப்பிட்டார். வால் போல் நீண்டுள்ள விண்பொருள் என்னும் பொருளிலேயே  பலர் குறிப்பிடுகின்றனர். உலகில் பஞ்சம், கொள்ளை நோய், ஆட்சி வீழ்ச்சி, தலைவர்…

இலக்கியத்தின் எதிரிகள்  2/2: ம.பொ. சிவஞானம்

(இலக்கியத்தின் எதிரிகள்  1/2 தொடர்ச்சி) இலக்கியத்தின் எதிரிகள்  2/2 இராமாயணத்தில் தயரதனுடன் கூடி வாழ்ந்த மனைவியர் மூவர்தான். அறுபதினாயிரம் மனைவியர் என்பது பலதார மணத்தின் கொடுமையை மிகைப் படுத்திக்காட்ட கவிஞன் செய்த கற்பனை. ஆம். ‘பலதார மணம்’ என்ற தவற்றின் சிகரத்தில் தயரதனை ஏற்றி விடுகின்றான் கவிஞன். காப்பிய அமைப்பின் இலக்கணங்களை அறிந்தவர்கள் இந்தக் கற்பனையை அனுபவிப்பார்களே யன்றி ஆத்திரப்படமாட்டார்கள். ஆனால், ஈ.வெ.ராவோ, கற்பனையை உண்மையாக்கிக்கொண்டு ஆத்திரப்படுகின்றார்.அவருடைய இரசிகத்தன்மையை என்னென்பது! இராமன் அவனுடைய ஒழுக்கத்திற்காகவும் உயர் குணங்களுக்காகவும் தெய்வமாக்கப்பட்டிருப்பினும், வடநாட்டானாதலால் தமிழ் நாட்டார் அவனை…

இலக்கியத்தின் எதிரிகள்  1/2: ம.பொ. சிவஞானம்

இலக்கியத்தின் எதிரிகள்  1/2 ஏதேனும் ஒரு எதிர்ப்பு இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பது பெரியார் ஈ.வெ.ராவுக்கு வழக்கமாகி விட்டது. காரண காரியத்தோடு எதிர்ப்பு நடத்தப்பட்டால் அதைப்பற்றிக் குறை கூறுவதற்கில்லை. ஆனால், காரண காரியம் இல்லாமலே சுய விளம்பரத்திற்காக எதிர்ப்பு இயக்கம் நடத்துவது குறைமட்டுமல்ல குற்றமுமாகும். பெரியார் ஈ.வெ.ரா, அரசியலில் நல்ல அனுபவமுடையவர். சமூக சீர்கேடுகளைப் பற்றியும் வெகுவாக ஆராய்ந்திருக்கிறார். இந்த இரண்டு துறைகளிலும் அவருடைய திறமைக்கு இன்னொருவரை ஈடாகச் சொல்லமுடியாது. ஆம், அந்த திறமையை வேண்டுமென்றே தீய வழியில் பயன்படுத்துகிறார் என்று குற்றம் சொல்லலாம். ஆனால்…

தந்தை பெரியாரின் தமிழ்மொழியாராய்ச்சி பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 37 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 38 8. இலக்கியம் ‘இலக்கியம்’ என்ற பெயருக்குத் தகுதியான நூல்களை அறிஞர்கள்தாம் இயற்ற முடியும். பண்டைக்காலம் முதல் இலக்கிய ஆசிரியர்கள் பலவகையான சிறப்புகளையும் அறிவாற்றலையும் உடையவர்களாகத் திகழ்ந்தனர். எவரும் நூலியற்றல் என்பது இயலாத செயல். அறிவால் நிரம்பியவர் மிகச் சிறு தொகையினரேயாவர்.  ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன்றாம்புலவர்வார்த்தைபதி னாயிரத் தொருவர் (குறிப்பு 1 )  என்ற வெண்பாப் பகுதியால் அறியலாம். எந்த நூலைப் படித்த பிறகு மீண்டும் மீண்டும் படிக்கவேண்டும் என்ற வேட்கை எழுகின்றதோ…

சிலப்பதிகாரம் – தொடர் சொற்பொழிவு கி.இ.க. – ஒய்எம்சிஏ பட்டிமன்றம்

பங்குனி 12, 2050 செவ்வாய் 26.03.2019 மாலை 6.00 சிலப்பதிகாரம் – தொடர் சொற்பொழிவு தலைமை: கவிஞர் கா.வேழவேந்தன் சிறப்புரை:  பேரா.மா.வயித்தியலிங்கன்

1 2 4