தோழர் தியாகு எழுதுகிறார் 49: சீமான் அரசியலுக்குப் பிராபகரன் பொறுப்பா?
(தோழர் தியாகு எழுதுகிறார் 48 தொடர்ச்சி) அன்பர் சத்தியசீலனுக்கு என் மறுமொழி: சீமான் அரசியலுக்குப் பிராபகரன் பொறுப்பா? “எனது நோக்கம் விடுதலைப் புலிகளை- பிரபாகரனை இழிவுபடுத்துவது அல்ல!” என்று நீங்கள் அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. “அவர்கள் மீதான மதிப்பை நான் மாற்றிக் கொண்டதாகவும் நான் எங்கும் குறிப்பிடவில்லை” என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால், சரி. ஆனால் உங்கள் முதல் மடல் எனக்கு மட்டுமல்ல, தாழி அன்பர்கள் சிலருக்கும் கூட அந்த எண்ணத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இருந்தது. உங்கள் இப்போதைய விளக்கத்தை அவர்கள் பார்வைக்கும் முன்வைக்கிறேன். இடதுசாரி அறிஞர்கள் புலிகளைக் குற்றாய்வு செய்கிறார்கள்…
இலக்குவனார் நினைவுநாளில் தமிழர் கோவில்களில், தாய்த்தமிழில் வழிபாடு – சீமான்
இலக்குவனார் நினைவுநாளில் தமிழர் கோவில்களில், தாய்த்தமிழில் வழிபாடு “அன்னைத் தமிழில் அருச்சனை” என்ற பெயரில் தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டு ஒரு திட்டத்தை அறிவித்தது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்துக் கோவில்களிலும் தமிழில் வழிபாடு (அருச்சனை) செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நாம் அறிந்த வரை இந்தத் திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப் பட்டதாகத் தெரியவில்லை. நாடு “தமிழ்”நாடு. ஆனால், தமிழில் வழிபாடு செய்யப் போராட வேண்டிய நிலையில் தான் கடந்த 55-ஆண்டுக் காலத் திராவிட அரசுகள் இயங்கி இருக்கின்றன….
தன்னம்பிக்கை மிகுந்த சீமான், தினகரன், கமல் – இலக்குவனார் திருவள்ளுவன்
தன்னம்பிக்கை மிகுந்த சீமான், தினகரன், கமல் தேர்தல் என்பது கூட்டணி உலகமாக மாறிவிட்டது. எனினும் துணிந்து கூட்டணி இன்றிப் போட்டியிடுவோர் இருக்கின்றனர். அவர்களுள் நாம்தமிழர் கட்சி சீமான், அமமுக தினகரன், மக்கள்நீதி மையத்தின் கமல் பாராட்டிற்குரியவர்கள். தன்னம்பிக்கையுடன் கூட்டணி வைத்துள்ளனர் இவர்கள். நாம் தமிழர் கட்சி வளர்ந்து வரும் அமைப்பு. இதனைக்கண்டு ஆளுங்கட்சி அஞ்சுவதே இதன் வளர்ச்சிக்குச் சான்று. அந்த அச்சத்தின் காரணமாகத்தான் கடந்த தேர்தல் சின்னமான இரட்டை மெழுகினைக் கிடைக்கச் செய்யாமல் கரும்பு உழவர் சின்னம் அளித்துள்ளனர். அப்படியும் அச்சம் போகவில்லை. வாக்குப்…
மத்தியப் பல்கலைக்கழகங்களையும் மாநில அரசின் அதிகாரவரம்பிற்குள் கொண்டுவரவேண்டும். – சீமான்
மத்தியப் பல்கலைக்கழகங்களையும் மாநில அரசின் அதிகாரவரம்பிற்குள் கொண்டுவரவேண்டும். ச.நே.ப. மாணவர் முத்துக்கிருட்டிணன் மரணத்திற்கு உரிய நீதி உசாவல் வேண்டும். – சீமான் வலியுறுத்தல் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ‘தற்போதைய வரலாறு’ பாடத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்த சேலம் மாணவர் முத்துக்கிருட்டிணன் தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினையும், ஆழ்ந்த மனவேதனையினையும் தருகிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்து, அவர்களது குடும்பத் துயரத்தில் நாம் தமிழர் கட்சி…
உணவுப்பாதுகாப்புச் சட்டத்தை ஏற்காததால் தமிழகத்தைப் பழிவாங்குவதா? – சீமான்
உணவுப்பாதுகாப்புச் சட்டத்தை ஏற்காததால் தமிழகத்திற்கு வழங்கும் அரிசியின் விலையை உயர்த்திப் பழிவாங்குவதா? – மத்திய அரசுக்குச் சீமான் கண்டனம்! இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஒட்டுமொத்தத் தமிழகமும் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் சற்றும் சலனமில்லாது தமிழர்களுக்கு இன்னொரு வஞ்சகத்தை இழைக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது மத்தியில் ஆளும் மோடி அரசு. மத்திய அரசின் உணவுப்பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது தமிழகமும், கேரளாவும் மட்டும்தான் அதனை ஏற்க மறுத்தன. இந்தச் சட்டம் கொண்டுவரப்படுவதற்கு…
மரபுவழி உழவு.உணவுத்திருவிழா, ஈரோடு
புரட்டாசி 02, 2047 / செட்டம்பர் 18, 2016
திராவிடம் என்பது ஆரியல்லார் என்பதன் குறியீடு! – குளத்தூர் மணி
திராவிடம் என்பது தமிழ் என்பதன் திரிந்த வடிவம்தான்! ‘நாம் தமிழர் கட்சி’ முன் வைக்கும் கருத்துகள் குறித்துத் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் குளத்தூர் மணியிடம் இணையத்தளம் வழியாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள மறுமொழிகள். பகலவன்: ‘நாம் தமிழர் கட்சி’யின் செயற்பாட்டு வரைவு படித்தீர்களா? படித்திருந்தால் அதைப்பற்றிய நிறை குறையைப் பகிர வேண்டுகிறேன்! குளத்தூர் மணி: ‘நாம் தமிழர் கட்சி’யின் செயற்பாட்டு வரைவு எமக்குக் கிடைக்கவில்லை. கிடைத்ததும் தேவையெனில் எழுதுவோம். பகலவன்: ஆந்திர, கருநாடக, கேரள மாநிலத்தவர்கள் தங்களைத் திராவிடர் என்று அடையாளப்படுத்துவது…
நாம் தமிழர், பிரான்சு – எழுச்சியுடன் கூடிய வித்திகை மங்கல நிகழ்வு
நாம் தமிழர், பிரான்சு – எழுச்சியுடன் கூடிய வித்திகை மங்கல நிகழ்வு இணையம் வாயிலாக வாழ்த்துரை – செந்தமிழன் சீமான் எழுச்சியுரை – பேராசிரியர் கல்யாணசுந்தரம் (தமிழ்நாட்டில் இருந்து செல்கிறார்) நாள்: 06-03-2016 [இடம்: Gandhi 15 rue de la longueral 91270 vigneux sur seine] நேரம்: பிற்பகல் 15 மணி முதல் 19 மணி வரை (போக்குவரத்து: தொடர்வண்டித் RER-D இறங்கும் இடம் VILLENEUV-SAINTGEORGES) தொடர்புக்கு: 0781753203, 0758559417
தமிழர் தேசியத் திருவிழா – சடுகுடு போட்டி, அரணையூர்
தை 02 & 03, 2047 / சனவரி 16 & 17, 2016 பரிசுரை : சீமான்
சிற்றூர்ப் பூசாரிகள் மாநாடு – வீரத்தமிழர் முன்னணி
ஆவணி 13, 2046 / ஆகத்து 30, 2015 திருப்பூர் சீமான்
“எங்கள் தேசம்” இதழின் வெளியீட்டு விழா
மாசி 29, 2046 / 13-03-15 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானை ஆசிரியராகக் கொண்டு இயங்கும் எங்கள் தேசம் மாதமிருமுறை இதழின் வெளியீட்டு விழா, மாசி 29, 2046 / 13-03-15 அன்று சென்னை, வடபழனி, கார்த்திக்குத் தோட்டம் ஆர்.கே.வி.அரங்கத்தில் நடந்தது. முதல் இதழை புரட்சித்தமிழன் சத்யராசு வெளியிட, எழுத்தாளர் ச.இராமகிருட்டிணன் பெற்றுக்கொண்டார்.
பாரதிதாசன் இலக்கிய மன்ற விழா
பங்குனி 27, 2046/ ஏப்பிரல் 10, 2015 கவுந்தப்பாடி