நாம் தமிழர், பிரான்சு – எழுச்சியுடன் கூடிய வித்திகை மங்கல நிகழ்வு

நாம் தமிழர்,  பிரான்சு – எழுச்சியுடன் கூடிய வித்திகை மங்கல நிகழ்வு   இணையம் வாயிலாக வாழ்த்துரை – செந்தமிழன் சீமான் எழுச்சியுரை – பேராசிரியர் கல்யாணசுந்தரம் (தமிழ்நாட்டில் இருந்து செல்கிறார்) நாள்: 06-03-2016 [இடம்: Gandhi 15 rue de la longueral 91270 vigneux sur seine] நேரம்: பிற்பகல் 15 மணி முதல் 19 மணி வரை (போக்குவரத்து:  தொடர்வண்டித் RER-D இறங்கும் இடம் VILLENEUV-SAINTGEORGES) தொடர்புக்கு: 0781753203, 0758559417  

“எங்கள் தேசம்” இதழின் வெளியீட்டு விழா

மாசி 29, 2046 / 13-03-15  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானை ஆசிரியராகக் கொண்டு இயங்கும் எங்கள் தேசம் மாதமிருமுறை இதழின் வெளியீட்டு விழா,  மாசி 29, 2046 / 13-03-15 அன்று சென்னை, வடபழனி, கார்த்திக்குத் தோட்டம் ஆர்.கே.வி.அரங்கத்தில் நடந்தது. முதல் இதழை புரட்சித்தமிழன் சத்யராசு வெளியிட, எழுத்தாளர் ச.இராமகிருட்டிணன் பெற்றுக்கொண்டார்.

திமுக. காங்.கூட்டணி அமைந்தால் எதிர்த்துப் பரப்புரை: சீமான்

திமுகவுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலைக் காங்கிரசு சந்தித்தால், அக்கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்துப் பரப்புரை மேற்கொள்வோம் என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.   திருச்சியில் 01.02.14 சனிக்கிழமை அவர் அளித்த செவ்வி:   நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்கு எந்தப் பங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. எங்களின் இலக்கு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்தான். 2016 தேர்தலில் போட்டியிடுவோம். அடுத்து 2021 தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவோம்.    இந்தத் தேர்தலில் காங்கிரசு கட்சியை எதிர்த்துப் பரப்புரை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கெனவே தோற்றுப் போன…