உறவாடும் தீயே நீ வாழ்க! – சுடர் விழி
நெருப்பாகி,நெருப்பாகி, நெருப்பாகி நிமிர்வோம்.. உயிப்போடு,பொறுப்போடு, விருப்போடு நிமிர்வோம்.. நெஞ்சினில் எரியும் தீயே, ஈரம் தருவதும் நீயே.. கண்ணீர் மழையைத் தடுப்போம்.. கல்லறை வேதம் படிப்போம்.. தூங்கும் வீரர் கணவுகளில், தாங்கும் எங்கள் மனசுகளில், தேசத் தாயே நீ வருவாய்! திசைகள் வெடிக்க ஒளி தருவாய்! தலைவன் உரையைக் கேட்ககும் பொழுதே, தலைகள் மெல்ல உயரும் மலழைமுகங்கள் மௌனம் எழுத, மணியும்,ஒலியும் உலவும் தீயின் புதல்வச் சுடராய் மாற, தியாக வேள்வி தொடரும் துயிலும் இல்லப் பாடல் இந்த, தேகம் முழுக்கப் பரவும் பொறுப்புகள்…