குறள் சொல்லுங்கள் ! …. பரிசு வெல்லுங்கள் !
குறள் சொல்லுங்கள் !…. பரிசு வெல்லுங்கள்! வளைகுடா வானம்பாடிக் கவிஞர் சங்கம், குவைத்து வாழ் தமிழ்க் குழந்தைகளுக்கு 2016 ஆம் ஆண்டு கோடை இன்பத்தை குதூகலிப்பாகக் கொண்டாடிட ஆயத்தமாகிறது. திருக்குறள் ஆர்வலர் தஞ்சை முருகானந்தம் மேற்பார்வையில் நடக்க இருக்கும் இந்த மாபெரும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பள்ளிக்குழந்தைகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு, உலகப் பொதுமறையாம் நமது திருக்குறளின் பெருமையை மேலும் உலகிற்குப் பறைசாற்றிட, வளரும் தளிர்களான உங்களின் கரமும் சேர்ந்திட, குவைத்து பாலைமண்ணிலிருந்து சோலைவனக் குறளை உலகிற்கு எடுத்துச்சென்றிட, அணி அணியாக வாருங்கள்! …
110 அகவை குவைத்து முதியவர் அல்அசுமில் இல்லம் ஓர் அருங்காட்சியகம்
குவைத்து நாட்டைச் சேர்ந்த முதியவர் அல் அசுமில் 110 அகவை கடந்தவர். பல நூறு ஆண்டுகள் தொன்மையான பல அரிய பொருட்களை சேகரித்து வைத்திருக்கின்றார். இவரின் இல்லம் ஓர் அருங்காடசியகம் போல் காட்சி அளிக்கிறது. அவரை அவரது இல்லத்தில் கவிஞர் செங்கை நிலவன் நண்பர்களுடன் சென்று சந்தித்துள்ளார். அவர், மிகத் தெளிவாக ஆங்கிலம் பேசுகின்றார் எனவும் இச்சந்திப்பு இனம்புரியாத மகிழ்ச்சியாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
செங்கை நிலவனுக்கு வளைகுடா வானம்பாடியினர் பாராட்டு!
வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா! படஉருவாக்குநர்க்குப் பாராட்டு! குவைத்து வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா, ஆடி 23, 2045 / ஆக.8, 2014 வெள்ளி மாலை 5.30 மணிக்கு மங்காப்பு விழா அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா,குவைத்து தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த “இருக்கு ஆன இல்ல” படஉருவாக்குநர்களைப் போற்றும் வகையிலும், அவர்களுள் ஒருவரான திரு செல்லத்துரை, பாடலாசிரியராக அறிமுகமான செங்கை நிலவன் ஆகியோரைப் பாராட்டும் வகையிலும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி நடந்தது. விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் நிறுவனர்…
வளைகுடா வானம்பாடியின் சித்திரைக் கூட்டம்
குவைத்து வளைகுடா வானம்பாடியின் திங்கள் கூட்டம், அன்னையர் நாள் சிறப்பு நிகழ்வாக சித்திரை 27, தி.பி.2045 10-05-2014 அன்று காலை 10 மணிக்கு, பஃகாகில் சரவணபவன் உணவகத்தில் மிகச் சிறப்பாக நடந்தது. வழக்கம்போல் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. செல்வி அனுசுரேசு திருக்குறள் கதை சொல்ல, கூட்டத்திற்கு, பொறியாளர் நடராசன், பொறியாளர் முனைவர் பால் மனுவேல், பொறியாளர் திரு சேகர் அவர்கள் முன்னிலையேற்றார்கள். விழாவில் கவிஞர்கள், பாடகர்கள், அன்னையர் நாளைச் சிறப்பித்து, கவிதை, சிறப்புச் சொற்பொழிவு, பாடல் எனத் தங்களின் படைப்புகளை வழங்கினார்கள். விழாவில்…
குவைத்து வளைகுடா வானம்பாடிகளின் திங்கள் கூட்டம்
குவைத்து வளைகுடா வானம்பாடிகளின் திங்கள் கூட்டம் 14-03-2014 வெள்ளி அன்று மிகச் சிறப்பாக, தோழர் செங்கொடி அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை வானம்பாடி நிறுவனர் திரு சேது அவர்கள் தொடங்கி வைக்க, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. செல்வி அனு, திருக்குறள்களைத் தன் மழலை மொழியால் வழங்க, நிகழ்ச்சி இனிதே களைகட்டியது. நிகழ்ச்சிக்கு ”அரவணைப்பு” திரு இளங்கோவன், தொழிலதிபர் திரு சாமி, வானம்பாடிகள் உதவித் தலைவர் திரு அலெக்சு ஆகியோர் தலைமை வகித்தனர். நிகழ்ச்சியில் மண்ணிசைப் பாடல்களை, திரு பாண்டி, செந்தில்,இராமகிருட்டினன் ஆகியோரும் மெல்லிசைப்…