செஞ்சீனா சென்றுவந்தேன் 5 – பொறி.க.அருணபாரதி

(ஆனி 29, 2045 / சூலை 13, 2014 இதழின் தொடர்ச்சி) 5.   சீனப் பொருளியலின் “வளர்ச்சி”    ஏற்றுமதிசார்ந்த உற்பத்தியைமட்டும் அதிகரிக்கும்நாடுதான், ‘வளர்ச்சி’ பெறும்நாடு என உலகமயப்பொருளியல் உருவாக்கியிருக்கும் கருத்து நிலையை, அப்படியே உள் வாங்கிக்கொண்டுவிட்டதுசீனப் பொதுவுடைமைக் கட்சி. இதன் விளைவாக, உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கி அதன் உபரியைக் கொண்டு மக்கள்நலத் திட்டங்களைச் செயல்படுத்தவேண்டிய சீனப் “பொதுவுடைமை” அரசு, ஏற்றுமதிசார்ந்த உற்பத்தியிலும், அதன் ‘வளர்ச்சி’ விகிதத்திலும்தான் அதிகம் கவனம் செலுத்துகின்றது.     உலகமயமாக்கலின் ஒரு பகுதியாக, 1991ஆம்ஆண்டு, நான் வந்திறங்கியுள்ள சியான்நகரில்…

செஞ்சீனா சென்றுவந்தேன் 4 – பொறி.க.அருணபாரதி

(ஆனி 22 , 2045 /சூலை 06, 2014 இதழின் தொடர்ச்சி) சீன வரலாற்றுக் குறிப்புகள்   தமிழர்களைப் போலவே நாகரிகத்தில் சிறந்து விளங்கியசீனர்கள். தமக்கென தனித்த பல அரச மரபினரால் ஆளப்பட்டு வந்தவர்கள். சீனாவில், 1912ஆம் ஆண்டு மக்களாட்சி அரசு வேண்டி, கலகம் நடைபெற்றது. சன் யாட் சென் என்ற குடியரசுவாதியின் தலைமையில் நடைபெற்ற அக்கலகம், சீன மக்கள் குடியரசை நிறுவியது. இதே காலக்கட்டத்தில் இரசியாவில் புரட்சியாளர் இலெனின் தலைமையில் நடைபெற்ற சமவுடைமை(சோசலிச)ப் புரட்சி உலகையே உலுக்கிபோட்டது போல சீனாவையும் உலுக்கியது. சீனாவில்,…

செஞ்சீனா சென்றுவந்தேன் 3 – – பொறி.க.அருணபாரதி

(ஆனி 15, 2045 / சூன் 29, 2014 இதழின் தொடர்ச்சி) 3. இந்தியப்பணத்தாளில் காந்தி … சீனப் பணத்தாளில் மாவோ!   சீனாவுக்குள் நுழைந்தவுடன் சிகப்பு நிறத்தில் மாவோ – இலெனின் படங்கள் என்னை வரவேற்கும் என நினைத்திருந்தேன். ஆனால், நுழைந்தவுடன் சிவப்பு நிறப்பின்னணியுடன் வட அமெரிக்க நிறுவனமான கே.எப்.சி. நிறுவன முதலாளி சாண்டர்சு படத்துடன்கூடிய வணிகச்சின்னம்தான் என்னை வரவேற்றது! ஒரு சில இடங்களில் டெங் சியோ பிங்கின் படங்களைக் கொண்ட பதாகைகளில் சீன எழுத்துகள் எழுதப்பட்டிருந்தன. நம்மூரில், எப்படி மகிழுந்துகளின் முன்புற…

செஞ்சீனா சென்றுவந்தேன் 2– பொறி.க.அருணபாரதி

(ஆனி 8, 2045 / சூன் 22, 2014 இதழின் தொடர்ச்சி) 2. சியான் நகரம் பண்டைத் தமிழகத்தில், மதுரை, தஞ்சாவூர் முதலானஉள்ளிட்ட நகரங்கள் எப்படி முதன்மைத் தலைநகரங்களாக விளங்கினவோ, அதே போல சீனாவிற்கு 4 பண்டையத் தலைநகரங்கள் இருந்தன. அவை, பெய்சிங்(கு), நான்சிங்(கு), (தெற்கு சீனா), (உ)லோயங்(கு), சங்கன் ஆகிய நகரங்களாகும். மேலுள்ள நான்கு நகரங்களில் சங்கன் என வழங்கப்பட்ட அவ்விடம்தான் இன்று சியான் என அழைக்கப்படுகிறது. இன்றைக்கும் சீனத் தலைநகரமாக உள்ள பெய்சிங்(கு)/(பீகிங்கு) நகரம், நவீன சீனாவின் அடையாளமாக உள்ளதைப் போல்,…