வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 9
(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 8 தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் – 9 தகையணங்குறுத்தல் தலைமகன் தலைவியைக் காணுங்கால் அவள் அழகால் உந்தப்பட்டு அதனால் உளம் வேறுபடுதல். அமைதியாக இருந்த ஆடவனின் உள்ளம் பெண்ணின் தோற்றத்தால் வருந்தத் தொடங்குதல். “தகை அணங்குறுத்தல்’ என்றால் “அழகு வருத்தத்தை அடைவித்தல்’ என்பதாகும். தலைவியைக் கண்ட தலைவன் கூறுகின்றான்: அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு (1081) அணங்குகொல்=வருத்தும் அழகுத் தெய்வமோ?; ஆய்மயில் கொல்லோ= ஆராய்ந்தெடுக்கப்பட்ட…