திருக்குறள் அறுசொல் உரை: 109. தகை அணங்கு உறுத்தல்: வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை 108. கயமை தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல் அதிகாரம் 109. தகை அணங்கு உறுத்தல் தகுதிமிகு தலைமகளது அழகு, தலைமகனது மனத்தை வருத்துதல் (01-10 தலைமகன் சொல்லியவை) அணங்குகொல்…? ஆய்மயில் கொல்லோ…? கணங்குழை மாதர்கொல்….? மாலும்என் நெஞ்சு. தெய்வ மகளோ….? மயிலோ….? மண்மகளோ….? என்மனம் மயங்கும். நோக்கினாள்; நோக்(கு)எதிர் நோக்குதல், தாக்(கு)அணங்கு தானைக்கொண்(டு)…