புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.21-1.6.2

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.16-20  தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் தாய்மொழிப் படலம்        21.   காதல்முதிர்ந் தில்லறஞ்செய் காதலர்தா மவரோடு                  சாதலிலை யேற்றனியாந் தபுதார நிலைவாழ்தல்                  ஈதலது பலரைமணந் திடர்விளைக்கு மிழிசெயலைக்                  காதினுங்கேட் டறியார்கைக் களிறிளைக்கு மலைநாடர்.            22.    அறப்போர்செய் குவதன்றி யரசிழக்க நேரினுமே                  மறப்போர்செய் தறியாது மறஞ்செறிந்த மனத்தினராய்ப்                  புறப்பொருளின் றுறையறிந்து பொருதுபுகழ் பூண்டிருந்தார்                  திறப்பாடெல் லாம்பொருந்தித் திருவளருந் தென்னாடர்.            23.   ஆன்றவிந்த தமிழ்ப்பெரியா ரந்தணரா மையரெனுஞ்                 …

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.16- 20

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.11-15  தொடர்ச்சி)            16.    இல்லாமை வறுமையவர்க் கியலாமை தீச்செயலே                 சொல்லாமை பொய்குறளை சோராமை பிறர்பயனே                 செல்லாமை தீநெறியே தீண்டாமை பிறர்பொருளே                 கல்லாமை களவிவறே கருதாமை யறங்கடையே.            17.    பொன்மான மானாலும் பொருண்மான மானாலும்                 மன்மான நிலைதீர்ந்து மதிமான மானாலும்                 கன்மான வயலார்முன் கையேந்திப் பல்லிளியார்                 தன்மான மாறாத தகுமானத் தனித்தமிழர்.            18.    சிறந்தானும் பெருமையினிற் றீர்ந்தானு முரிமையெலாந்                 துறந்தானும் பொருவுநிலைத் துறைபோந்து முறைவாழ்ந்தார்                 இறந்தேனும் பொதுவாழ்வுக் கியன்றனசெய் குவதல்லான்                 மறந்தேனும் பிறன்கேடு சூழாத மணித்தமிழர்….

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.11-15

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.6-10  தொடர்ச்சி)            11.    தன்னலமென் னும்பொருளைத் தான்காணா ராய்ச்செய்யும்                 இன்னலமே யந்நலமா யெந்நலமும் பொதுநலமா                 நன்னலஞ்செய் தெண்ணியவை நண்ணிநல மன்னினரால்                 பன்னலமும் பொருந்தியதன் பயன்றுய்க்கும் பழந்தமிழர்.  12.    முட்டாற்றுப் படவெவரு முயலாமை யெனுங்குறையை                 விட்டோட்டித் தாளாண்மை வேளாண்மைப் படவாழ்ந்தார்                 நட்டாற்றுக் கிடைப்படினு நலியாது தமிழ்வளர்க்குங்                 கொட்டாட்டுப் பாட்டுடைய குலமோங்குங் குணநாடர்.            13.    அவ்வவர்தம் பிறப்புரிமை யவரெய்தி யவ்வவருக்                 கவ்வவரே யரசர்களா யவரரசுக் கவரரசாய்                 அவ்வவர்தம் முதற்கடமை யவ்வவர்செய் தேவாழ்ந்தார்                 எவ்வளவு மிறைமுறையி னியனெறிமா றாத்தமிழர்.           …

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.6-10

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.5.1-5  தொடர்ச்சி) 6.      இன்னாத வெவ்வுயிர்க்குஞ் செய்யாதே யெவ்வுயிரும்                 பொன்னேபோ லருள்பூத்துப் புறந்தந்து புகழ்பூத்தார்                 கொன்னாளுங் கலஞ்செலுத்திக் குடயவனப் பெருவணிகர்                 பொன்னாடிப் பொருணாடிப் புகலாகும் புகழ்நாடர்.            7.     நலக்குறையே வலக்குறையா நற்குணநற் செய்கைதமக்                 கிலக்கியமாய் வழிவருவோர்க் கிலக்கணமா யெனைத்தொன்றும்                 சொலக்குறையா மனைவாழ்க்கைத் துறைநின்று முறைவாழ்ந்தார்                 இலைக்குறையென் றெனைவளமு மினிதமைந்த வியனாடர்.            8.     பொருவிலே மெனப்போந்த பொருளிலரை யெள்ளுதலும்                 திருவிலே மெனக்குறைவு சிந்தையிடைக் கொள்ளுதலும்                 வெருவிலே யகன்றோட வேற்றுமையற் றேவாழ்ந்தார்                 கருவிலே திருவுடைய கவல்காணாக் கலைநாடார்.           …

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.4.23-28

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.21-22  தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 4.தலைமக்கட் படலம்            23.    மாரி போற்பொரு ளீந்துமே தாய்மொழி வளர்த்த                  சேர சோழபாண் டியரெனத் தமிழர்கள் செப்ப                  வீர ராகவும் புலவர்க ளாகவும் வெருவாச்                  சூர ராகவும் விளங்கினா ரிவர்வழித் தோன்றல்.            24.   அன்ன மூவருந் தன்னின்கீ ழன்னசிற் றரசர்                  தன்னை யேற்படுத் தியல்பொடு தமிழகந் தன்னைப்                  பன்னு நூற்றுறை பழுத்தநற் பழந்தமிழ்ப் புலவர்                  சொன்ன சொற்படி…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.4.17-22

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3. 11-16  தொடர்ச்சி)    இராவண காவியம் தமிழகக் காண்டம் 4. தலைமக்கட் படலம் 17.    இன்ன போலவே கிழக்குநா டென்னுமவ் விடத்திற்                  கன்னை போவோ ரின்புடைத் தமிழ்மகன் தன்னை                  மன்ன னாக்கினன் அன்னனும் வண்டமிழ் வளர்த்தான்                  இன்ன வன்மர பெழுந்தரே யிசையுடைச் சோழர்.            18.    ஓகை யோடவர் வானினுங் கொடுமுடி யுயர்ந்த                  நாகை மாநகர் தனிலினி திருந்துநா ணாளும்                  ஈகை யோடுசெங் கோலற முதலிய வெவற்றும்                  வாகை…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.4.11-16

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.6-10 தொடர்ச்சி) இராவண காவியம்1. தமிழகக் காண்டம் 4. தலைமக்கட் படலம்        11.    ஈங்குபல் லாண்டு செல்ல விருந்தமி ழகத்தில் வாழும்                  ஓங்குநல் லறிவு வாய்ந்த யுயர்தமிழ் மக்க ளெல்லாம்                  தாங்குநா னிலத்த ராகித் தனித்தனி வாழ்தல் நீத்துத்                  தேங்குமோர் குடையி னீழற் றிகழ்ந்திட மனக்கொண் டாரே. மாபெருந் தலைவன்            12.    தண்டமி ழகத்தை முற்றுந் தனியர சோச்சத் தாழ்வில்                  திண்டிற லொழுக்க மேன்மை திறம்பிடா நீர்மை மேய                 …

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.4. 6-10

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3. 1-5 தொடர்ச்சி) இராவண காவியம்1. தமிழகக் காண்டம் 4. தலைமக்கட் படலம் 6.     ஏந்திய செல்வ மோங்கு மிரும்புனல் மருதந் தன்னில்                  வாழ்ந்தவே ருழவ ரோங்க வருமுதற் றலைவர் முன்பு                  போந்தவ னரணந் தங்கிப் பொருள்வளம் பொலியக் காத்து                  வேந்தனென் றானா னப்பேர் மேவினார் வழிவந் தோரும்.            7.     கடல்கடந் தயனா டேகிக் கலனிறை பொருள ராகி                  மடலுடைத் தாழைச் சேர்ப்பின் மணலுடை நெய்தல் வாழும்                  மிடலுடை நுளையர்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.4.1-5

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.21-26  தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 4. தலைமக்கட் படலம் அறுசீர் விருத்தம்            1.     குறிஞ்சியி லிருந்து முல்லை குறுகிப்பின் மருத நண்ணித்                  திறஞ்செறி வடைந்த பின்னர்த் திரைகடல் நெய்தல் மேவி                  மறஞ்சிறந் தயனா டேகி வணிகத்தாற் பொருணன் கீட்டி                  அறம்பொரு ளின்ப முற்றி யழகொடு வாழுங் காலை;            2.     தங்களுக் குள்ளே தங்கள் தலைவரைத் தேர்ந்தெ டுத்தாங்                  கங்கவ ராணைக் குட்பட் டச்சமொன் றின்றி யன்னார்                 …

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.21-26

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.16-20  தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் மக்கட் படலம் அழுக்கற வெளுத்து வண்ண மாக்குவோர் வண்ணார் பின்னர்                  மழுக்குற மயிரை நொய்தின் மழிப்பவர் மழிப்பர் வாய்மை                  ஒழுக்குற வரிதி னோவந் தீட்டுவோ ரோவர் மற்றும்                  வழக்குறு தொழில்க ளெல்லாம் வகைப்படுத் தப்பேர் பெற்றார். பல்வகைப் பறையின் யாழின் பாகுசெய் குழலின் வாயிற்                  சொல்வகை யமையத் தாளத் தொகையுட னராகம் வாய்ப்ப                  நல்வகை யிசையுங் கூத்தும் நலம்பட விசைக்க மேலோர்                 …

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.16-20

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.11-15 தொடர்ச்சி) 16. முல்லை யேமுத லாகிய நல்லி யல்புறு நானிலத் தெல்லை மேவிய யாவரும் இல்லை வேறிவ ரின்றியே. 17. முல்லை யாயர் குறிஞ்சியின் எல்லை காணி னிறவுளர் செல்லி னெய்தல் தமிலரே ஒல்லி வாழி அழவரே. வேறு 18. தூ யகைத் தொழிலி னோடேர்த் தொழிலொடு வணிகந் துன் னி ஆயமுத் தொழிலி னோடாங் கமைகுடித் தொழில்க உ ளெல்லாம் ஏயவ ருயர்வு தாழ்வ தின்றியே புரிந்து நாளும் தாயவுத் தொழிலுக் கேற்பத் தனித்தனிப் பெயர்பெற்…