புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.31-35

(இராவண காவியம்: 1.2.26-30 தொடர்ச்சி) 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் ஐந்நிலம் – குறிஞ்சி வேறு 31.இவ்வகை நான்குட னியன்று பல்வளந் துவ்விய தமிழகத் துணிந்த மேலவர் செவ்விய முறையினிற் சென்ற வைந்நிலக் குவ்வையின் முதலிய குறிஞ்சி காணுவாம். 32.இடிகுரல் யானைதன் னிளைய வின்னுயிர்ப் பிடிபசி களைந்திடப் பெரிய யாக்கிளை முடியது படியுற முறிக்கு மோசையாற் படிசிறு கிளியினம் பறந்து செல்லுமால். 33.அருவிய முருகிய மார்ப்பப் பைங்கிளி பருகிய தமிழிசை பாடப் பொன்மயில் அருகிய சிறைவிரித் தாடப் பூஞ்சினை மருவிய குரக்கினம்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.26-30

(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 21-25 தொடர்ச்சி) 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் கிழக்கு நாடு   26. மஞ்சுதவழ் தருமேற்கு மலைத்தொடர்கீழ்ப் படமேற்கில் விஞ்சுபுகழ்ப் பெருஞ்சேர வேந்தரிருந் தினிதாண்ட வஞ்சியெனப் பெயர்பூண்ட மலிவளத்த திருநகரைக் கொஞ்சுதலை ஈகராகக் கொண்டதுவா லிதன்கீழ்பால். கிழக்கு நாடு 27. சிங்களஞ்சா வகமுதலாந் தீவுகளும் திரையோவா வங்கவிருங் கடற்பரப்பும் மரஞ்செறிகான் மலையருகச் செங்கரும்புஞ் செந்நெல்லுஞ் செருக்கொடுவான் றொடவிகலும் பொங்குவள வயல்மருதம் புனைநாடாப் பொலிந்ததுவே. 28. அம்மருத வளநாட்டி னணிநாகை யெனுநகரில் மும்மதிலின் கோயிலிடை முறைதிறம்பா…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.21-25

(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 16-20 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் திராவிடம் 21.அந்நகரம் பஃறுளியாற் றங்கரையி லுலகிலுள்ள எந்நகரு மிந்நகருக் கிணையாகா தெனும்படிக்குத் தன்னிகராந் தமிழ்வளர்க்குந் தலைக்கழக மோடுதமிழ் மன்னர்களும் புலவர்களும் வாழ்நிலையா விருந்ததுவே,   திராவிடம் 22.அந்நாட்டின் வடக்காவா னணிவிந்த மதன்றெற்கா நன்னாட்டின் முன்னாட்டு நாடாநன் னலங்காட்டும் பன்னாட்டு முன்னீட்டும் பயன்காட்டும் படியமைந்த தென்னாட்டின் வடகாடாந் திருநாடு திகழ்ந்ததுவால், 23.மலைப்பிறந்து கற்றவழ்ந்து மலைச்சாரல் வழிநடந்தே இலைப்பரந்த நறுமுல்லை எதிர்கானத் திடைவளர்ந்து தலைப்பிறந்த வளமருதந்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.16-20

(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 11-15 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் தென்பாலி 16 இடைநில மைந்துநா றெண்ணரு கல்லிற் படவொளி மேய பவளமு முத்தும் கொடுகுட நாட்டுக் கொழும்பொரு ளோடு கடல்வளங் கண்டு களித்ததந் (நாடே,   பெருவளம் தென்பாலி 17.குணகரை குன்றங் குறும்பனை யோடு மணமிகு தெங்க மதுரைமுன் பாலை இணருபின் பாலையோ டேழ்தலை மேய உணவமல் நாற்பதோ டொன் பது நாடே. 18.கொல்லம் தோடு குமரி முதலா மல்லன் மிகும்பன் மலைவள…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.11-15

(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 6-10 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் பெருவளநாடு 11.அம்மலைத் தெற்கி னணிமுகில் மேயும் செம்மலை வீழ்க்குந் திரடொடர் மேய பன்மலை யோடு பழந்தமிழ் நாட்டு மன்மலை யாத மணிமலை யோங்கும். 12.அத்தொடர்க் குன்றத் தருமக வாகி முத்தமி ழாளர் முதுநெறி போலப் பத்தி யறாதுசெல் பஃறுளி யாறு புத்துண வாக்கிப் புதுவிருந் தாற்றும். 13.மைளம் பட்ட வளக்கும் ரிக்கும் நொய்வளம் பட்டவைந் நூறுகற் றெற்கில் பைவளம் பட்டநீள் பஃறுளி யாறு…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1. தமிழகக் காண்டம், 2. தமிழகப் படலம். 6-10

(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 1-5 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் பெருவளநாடு 6. தன்கடன் குன்றித் தமிழகங் கொண்ட தென்கடல் முன்பு செழுந்தமிழ் நாடா நன்கட னாடு நனிவளந் தேங்கிப் பொன்கட னாடப் பொலிந்தது காணும்.   ++ கடல்நாடும் கடலும் விரும்பும், பொன் கடன்’ நாடக செல்வம் கடன் கேட்க, ++ 7. ஆயிரங் கல்லி னகன்ற பரப்ப தாயய னாட ரவாவுற, நீங்கிப் போயல ரேங்கப் பொலிவுறு செல்வம் தாயது பண்டக…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1. தமிழகக் காண்டம், 2. தமிழகப் படலம்

(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 31-37 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம்   வேறு 1. தெண்டிரை மூன்று திசையுனுங் காப்ப வண்டமிழ் விந்த மலைவடக் கார்ப்பப் பண்டுந முன்னர் பயன்பட வாழ்ந்த தண்டமிழ் வேலித் தமிழகங் காண்பாம்.   2. நனிமிகு பண்டுநர் நற்றமிழ்ச் செல்வி பனிமலை காறு. பகைசிறி தின்றி இனிதுயர் வெண் குடை நீழ லிருந்து தனியர சோச்சித் தமிழகங் காத்தாள்.   3. சீரியல் வாய்ந்த செழுந்தமி ழன்னை மாரி வழங்கும்…