வடக்கை வாழ வைக்கும் தெற்கைப் புறக்கணிப்பது ஏன்? – கார்க்கோடன்
வடக்கை வாழ வைக்கும் தெற்கைப் புறக்கணிப்பது ஏன்? தமிழுக்காகவும் திருக்குறளுக்காகவும் தமிழ் அரசியல்வாதிகளைவிட அதிகம் குரல் கொடுத்து வரும், தன்னைத் தமிழ்த்தாயின் தத்துபிள்ளை என்று சொல்லிக் கொண்ட தருண் விசய், இந்தியாவின் இன-நல்லிணக்க நோக்கத்தையும் கண்ணோட்டத்தையும் தற்காத்துப் பெருமைபடுத்திப் பேசுவதாக நினைத்து, “ நாங்கள் (இந்தியர்கள்) இனவெறியர்கள் அல்லர். எங்களைச் சுற்றியும் கறுப்பு நிறத் தென்னிந்தியர்கள் இருக்கிறார்கள். நாங்கள் இனவாதிகளாக இருந்தால் தென்னிந்தியர்களோடு எப்படிச் சேர்ந்து வாழ்கிறோம்?” என்று பேசியுள்ளார்.. அவர் பேசிய நோக்கம் எதுவானாலும், சொற்கள் தென்னிந்தியர்களை அயன்மைப்படுத்தி(அன்னியப்படுத்தி)க் காயப்படுத்துவதாக…
சூழ்ச்சித் திட்டம் தீட்டியது யார்? – புகழேந்தி தங்கராசு
(மு.க.தாலின் மறந்தாலும் மக்கள் மறக்கவில்லை பிப்பிரவரி 19ஐ – தொடர்ச்சி) மு.க.தாலினும் பிப்பிரவரி 19-உம்! (2) சூழ்ச்சித் திட்டம் தீட்டியது யார்? ‘பழையவற்றையெல்லாம் ஏன் கிளறுகிறீர்கள்’ – எனச் சண்டைக்கு வருகிறார்கள், பழைய நண்பர்கள் சிலர். உள்ளூர் அழைப்புக்கும் 25 காசு, வெளியூர் அழைப்புக்கும் 25 காசு என்கிற கட்டணக் குறைப்புத் திட்டத்தில் (Rate cutter) இணைந்து விட்டார்கள் போலிருக்கிறது… என்னை ஒரு சொல் சொல்ல விடாமல் மூச்சு விடாது பேசிக் கொண்டிருக்கிறார்கள். கூட இருந்தே குழி பறிப்பவர்களுக்கு மறப்போம் மன்னிப்போமெல்லாம் பொருந்தாது…
மு.க.தாலின் மறந்தாலும் மக்கள் மறக்கவில்லை பிப்பிரவரி 19ஐ – புகழேந்தி தங்கராசு
மு.க.தாலினும் பிப்பிரவரி 19-உம்! வாய்ப்புக் கிடைக்கிறபொழுதெல்லாம் “விரைவில் தி.மு.க., ஆட்சி” என அச்சுறுத்தியபடியே இருக்கிறார் மு.க.தாலின். உச்சநீதிமன்றத் தீர்ப்பு வருகிற வரை, கோபிநாத்தையே பின்னுக்குத் தள்ளிவிட்ட பன்னீர்செல்வம் – சசிகலாவின் ‘நீயா நானா’ வுக்கு இடையே ஒலித்த தனி இசை – தாலினின் குரல்தான்! 8 ஆண்டுகளுக்கு முன் உயர்நீதிமன்ற வளாகம் குருதிச் சேறாக்கப்பட்ட பிப்பிரவரி 19 நெருங்குகிற நிலையில் தாலின் இப்படியெல்லாம் பேசுவதைக் கேட்கும்பொழுதே குலை நடுங்குகிறது. செவ்வாய்க்கிழமை வெளியான உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மீதே அனைவரது கவனமும் பதிந்திருக்கும் நிலையில்,…
தமிழுக்கு முதலிடம் தந்த அம்மா! – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழக அரசியல்
தமிழுக்கு முதலிடம் தந்த அம்மா! இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ்க்காப்புக்கழகத்தலைவர் மறைந்த முதல்வர் செயலலிதா தமிழுக்கு முதன்மை அளித்தவர். ‘சிங்காரச் சென்னை’ என்பதை ‘எழில்மிகு சென்னை’ என மாற்றியவர் கலைபண்பாட்டுத்துறையில் முத்தமிழ்க்கலையறிஞர்களின் நினைவு போற்றும் வகையில் நினைவில்லங்கள் எழுப்பும் திட்டம் அறிமுகமானது. இவற்றை நினைவில்லம் என்று அழைக்காமல் மறைந்த கலை ஆன்றோர்களின் புகழைப் போற்றுவதால் ‘புகழரங்கம்’ என்று அழைக்க வேண்டும் என்று கலைபண்பாட்டுத் துறை சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. துறைச் செயலர் இதற்கு உடன்படவில்லை. ஆனால் முதலமைச்சர் செயலலிதா “புதிய நல்ல தமிழ்ச்சொல்லாக உள்ளது;…
ஆரா: பருமாவில் பரிதாப நிலையில் தமிழ்- இலக்குவனார் திருவள்ளுவன் ஆதங்கம்: ‘தமிழக அரசியல்’
பர்மாவில் பரிதாப நிலையில் தமிழ் – பயணம் செய்த தமிழறிஞரின் ஆதங்கம் பருமாவில் தமிழ்க்கல்வி வளர்ச்சி மையமும் சந்திரசேகரரின் நந்தவனம் நிறுவனமும் இணைந்து கடந்த மாதம் இலக்கியப் பெருவிழாவை நடத்தின. அதில் சிறப்புரையாற்றச் சென்று சென்னை திரும்பியிருக்கிறார் தமிழ்க்காப்புக்கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன். அவரிடம் பருமாவில் தமிழன், தமிழின் நிலை என்ன என்று கேட்டோம். நம்மிடம் பருமா பற்றி விரிவான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் இலக்குவனார் திருவள்ளுவன். பர்மா( பருமா) என்று அழைக்கப்பட்ட நாட்டின் இப்போதைய பெயர்…
பசுவை வணங்கு…. கன்றுக்குட்டியைக் காயப்போடு! – புகழேந்தி தங்கராசு
பசுவை வணங்கு…. கன்றுக்குட்டியைக் காயப்போடு! பசு மாட்டை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள்…… எதை உண்பது, எதை உடுத்துவது என்பதைத் தீர்மானிக்க நீங்கள் யார்….. என்று பொரிந்து தள்ளியிருக்கிறார் வங்காளிகளின் ‘தீதி’ மம்தா பானர்சி. பசு மாட்டு அரசியல் தான் விந்திய மலைக்கு அந்தப்புறம் கொடிகட்டிப் பறக்கிறது. மாட்டு இறைச்சி வைத்திருப்பவர்களைத் தூக்கிப் போட்டு மிதிக்க ஒரு கும்பல், மாட்டுத்தோல் வைத்திருப்பவர்களைக் கட்டிவைத்துப் பிளக்க இன்னொரு கும்பல் என்று வெறியுடன் திரிகிறது வட இந்தியா. மாட்டுத்தோலை உறிப்பதைத் தடுக்க, மனிதத் தோலை உறித்துக்…
ஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை…2/2 – புகழேந்தி தங்கராசு
2/2 தமிழர் தாயகத்தைக் காப்பது… தமிழ் தேசிய அடையாளங்களைக் காப்பது… தமிழரின் தன்னாட்சி உரிமையை மீட்பது… இவைதாம் பிரபாகரன் என்கிற அப்பழுக்கற்ற மனிதனின் நோக்கங்களாக இருந்தன. சிங்களக் குமுகாயத்தை அழித்து ஒழிப்பது எந்தக் காலத்திலும் புலிகளின் நோக்கமாக இருந்ததில்லை. தமிழ்க் குமுகாயத்தின் மானத்தை மீட்பதென்கிற பெயரில், அடுத்தவரின் மானத்துக்குக் கறை ஏற்படுத்துகிற செயலில் பிரபாகரனின் தோழர்கள் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. வெற்றி பெற்ற போர்முனை ஒன்றில், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் சிங்களத் தேசியக் கொடியை எரித்த போராளிகளைக் கடுமையாகக் கண்டித்த பிரபாகரனின் நேர்மையைப் புரிந்தும்…
ஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை1/2 – புகழேந்தி தங்கராசு
1/2 ஒரு தலைமுறையையே தலைநிமிரச் செய்த பிரபாகரனின் பிறந்தநாளை, எண்ணூர் அசோக்கு இலேலண்டுத் தொழிலாளர்களுடன் சேர்ந்து, மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் வை.கோ கொண்டாடியதுதான், இந்த வாரத்தின் நெகிழ்ச்சி நிகழ்ச்சி. காலை ௭ (7.00) மணிக்குத் தொழிலாளர்களுக்கு இனிப்புருண்டை (இலட்டு) வழங்கத் தொடங்கியவர், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்குக் கொடுத்து முடிக்கிற வரை சலிக்கவேயில்லை. இத்தனைக்கும் தொழிலாளத் தோழர்கள், வை.கோ-விடமிருந்து இனிப்புப் பெறுவதைக் காட்டிலும், அவருடன் கைக்குலுக்குவதில்தான் அதிக அக்கறை காட்டினர். அசோக்கு இலேலண்டிலிருந்து மகிழ்ச்சியுடன் திரும்பிய ஓரிரு மணி நேரத்தில், யாழ்ப்பாணம் அருகே ௧௮ (18)…
நீறு பூத்த நெருப்பு 2/2 – புகழேந்தி தங்கராசு
(நீறு பூத்த நெருப்பு 1/2 தொடர்ச்சி) நீறு பூத்த நெருப்பு 2 எட்டுக் கோடித் தமிழக மக்களின் முதல்வராயிற்றே – என்று கூடப் பாராமல், உடன்பிறந்தாள் செயலலிதா குறித்துப் பொறுக்கித்தனமாக நையாண்டிச் சித்திரம்(கார்ட்டூன்) போட்ட திவயினதான், இப்போது இப்படி எழுதுகிறது. எந்த வழக்கும் இல்லாமல் ௨௦(20) ஆண்டுகளாகச் சிறையில் வைக்கப்பட்டிருந்த ஏதுமறியாதவர்கள் மீது ‘புலிகள்’ என முத்திரை குத்தப் பார்க்கிறது. சிறையில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்று கற்பூரம் கொளுத்தி ஆணையிட்டு விட்டு, அரசியல் கைதிகள் போராடிய பிறகு உண்மையை…
நீறு பூத்த நெருப்பு 1/2 – புகழேந்தி தங்கராசு
நீறு பூத்த நெருப்பு 1 ‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’ – என்பதைப் போலவே, ‘அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்’ – என்பதும் இலங்கைக்குப் பொருந்தாது போலிருக்கிறது. ஐ.நா.வும் உலக நாடுகளும் மிதிமிதியென்று மிதித்தும் இம்மியும் நகரவில்லை இலங்கை. இவர்கள் உண்மையாகவே மிதிக்கிறார்களா, முன்பு போலவே மிதிப்பது போல நடிக்கிறார்களா என்கிற ஐயம் எழுவதைத் தவிர்க்கவே முடியவில்லை. ‘ஐ.நா குழுவையெல்லாம் நுழைய விடவே முடியாது’, என்று தொடர்ந்து அடம்பிடித்து வந்த இலங்கையின் இடுப்பெலும்பை முறித்தவர், பிரிட்டன் தலைமையமைச்சர் தாவீது கேமரூன்…
இரத்தத்தால் எழுதப்பட்ட ஈழம் 2/2 : புகழேந்தி தங்கராசு
(இரத்தத்தால் எழுதப்பட்ட ஈழம் 1 இன் தொடர்ச்சி) 2 பாரீசு வன்கொடுமையைத் திரித்துக் கூறி, போர்க் குற்றத்துக்கான தண்டனையிலிருந்து தப்பிக்க இலங்கை முயல்வது இயல்பானது. எந்த இண்டுஇடுக்கையாவது பயன்படுத்தித் தப்பிக்க நினைப்பது குற்றவாளிகளின் இயல்வு. நம்மைப் பொறுத்த வரை, கொல்லப்பட்ட நூற்றைம்பதாயிரம் உறவுகளுக்கு நீதி கிடைக்க எது தடையாக இருந்தாலும் அதைத் தகர்த்தாக வேண்டும். ஐ.நா போன்ற பன்னாட்டு அமைப்புகளில் இடம்பெறாத தனித்த அமைப்புகளின் வன்கொடுமையைக் காட்டிலும், பன்னாட்டு அமைப்புகளில் இருக்கும் ஓர் அரசின் வன்கொடுமை கடுமையானது. பன்னாட்டு அமைப்புகளில்…
இரத்தத்தால் எழுதப்பட்ட ஈழம் 1/2 : புகழேந்தி தங்கராசு
1 பாரீசு கொடுமையைக் குறிப்பிடும்போது, ஏறத்தாழ எல்லா ஊடகங்களுமே, ‘மென்மையான இலக்கு’ (SOFT TARGET) என்கிற சொல்லைப் பயன்படுத்துகின்றன. ஒற்றைக் கையால் நூறு பேரை அடித்துத் துவைக்கிற தமிழ்த் திரைப்படக் கதைத்தலைவனை வழிக்குக் கொண்டு வர, அவன் குழந்தையைக் கடத்துகிற கயவனை(வில்லனை) எத்தனையோ படங்களில் பார்த்திருக்கிற நமக்கு மென்மையான இலக்கு என்கிற சொல் புதிதன்று! அதுதான் இது! பிரான்சுப் படுகொலைகளைத் தொடர்ந்து, கயவன் யார், கதைத்தலைவன் யார் எனவெல்லாம் அக்பர் சாலை ஏதிலியர்கள்(அகதிகள்) முதல் ஆசம்கான்கள் வரை ஆளாளுக்குப் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்….