இந்திய எரிவளி ஆணையக் (GAIL) குழாய்கள் பதிப்பும் தமிழக வாழ்வாதார அழிப்பும் – கருத்தரங்கம்   மாசி 08, 2047 – 20-2-2016 சனிக்கிழமை பகல் 12 மணிக்கு, சென்னை இதழாளர் மன்றத்தில் இந்திய எரிவளி ஆணையக் (ழுஹஐடு) குழாய்ப் பதிப்பின் கண்டத்தை(ஆபத்தை) விளக்கும் இதழாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தற்சார்பு உழவர்கள் சங்கத் தலைவர் தோழர் கி.வெ.பொன்னையன், திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பார்கள் தோழர் பிரவின், தோழர் திருமுருகன், இந்திய எரிவளி ஆணையக் (GAIL)…