சொல்லாக்க ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும் “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்”  நூல் 3/3

(சொல்லாக்க ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும் நூல் 2/3தொடர்ச்சி) “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” – நூலாய்வு 1) காற்று: உயிரினம் வாழ்வதற்கு இன்றியமையாதது காற்று. இந்த அறிவியல் உண்மையை உணர்ந்தமையால் காற்று என்பதற்கு, ‘உயிர்ப்பு’ என மற்றொரு பெயரையும் நம் முன்னோர்கள் வைத்தனர். காற்று அங்கும் இங்கும் அசைவதால் ‘சலனம்’ எனப்பட்டது. உலவியதால் ‘உலவை’ எனப்பட்டது. வடக்கில் இருந்து வரும் காற்று வடந்தை எனப்பட்டது. அது வாட்டும் தன்மையால் வாடை எனப்பட்டது. மேற்கே இருந்து வருவதால் அது மேல் காற்று, எனப்பட்டது. அது கோடைகிழக்கே…

சொல்லாக்க ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும் “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்”  நூல் 2/3

(சொல்லாக்க ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும் நூல் 1/3தொடர்ச்சி) “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” – நூலாய்வு சொற் சிக்கனம் என்பது மொழிக்குச் சிறப்பாகும் என்று எடுத்துரைக்கும் கட்டுரையாளர், ஒரு சொல் குறிப்பிட்ட ஒரு துறையில் ஒரு பொருளை மட்டும் விளக்கும் வகையிலும் பிற துறைகளில் வெவ்வேறு பொருளை விளக்கும் வகையிலும் அமையலாம். அதேநேரம் ஒரு துறையில் ஒரு சொல்லே வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருள்களில் கையாளும் நிலை இருக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறார். எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் Post என்னும் சொல் light post என்னும்…

சொல்லாக்க ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும் “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்”  நூல் 1/3 – புதேரி தானப்பன்

“சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” – நூலாய்வு ஆட்சித் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள், “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” என்னும் நூலொன்றை வெளியிட்டுள்ளார். இது கலைச் சொற்கள் தொடர்பான ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பு நூலாகும். இந்த நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் என்ன சொல்லுகிறது என்பதைச் சொல்லும் கட்டுரையாக ‘முன்னுரை’ என்னும் முதற் கட்டுரை அமைந்துள்ளது. இக் கட்டுரைகள் யாவும் கலைச் சொற்கள் தொடர்பானவையே. எனினும் இந்நூல் கலைச் சொற்கள் குறித்து எழுதப்பட்ட தனி நூல் அல்ல. ஆயினும் கலைச் சொற்கள் குறித்த…

தமிழன்னைக்குப் பெருமை சேர்க்க வருகிறாள் தமிழணங்கு

  உலகத் தமிழர்களை இந்துக்கள் என்று அடையாளப்படுத்தும் முயற்சி நடைபெறுவதால் ‘தமிழராய் இணைவோம்‘ என்ற இலக்குடன் தமிழணங்கு மாத இதழ் தொடங்கப்பட்டுள்ளது. இணையத்திலும் அச்சிலும் வெளிவருகிறது. தமிழ் மரபு, பண்பாடு, சமயம், வரலாறு, மொழி இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. rajetamiljuly1@gmail.com  க்கு கட்டுரைகளை அனுப்புங்கள். முதல் இதழ் 134 பக்கங்களுடன் வெளிவந்துள்ளது. விலை உரூ120/- ஆசிரியர்: முனைவர் செ. இராசேசுவரி amazon.in amazon.com தளங்களில் வாங்கலாம்.

தமிழணங்கை வணங்குவோம் – சங்குப் புலவர்

தமிழணங்கை வணங்குவோம்!   காதிலங்கு குண்டமாகக் குண்டலகே                 சியுமிடையே கலையாச் சாத்தன் ஓதுமணி மேகலையும் ஒளிர்கைவளை                 யாவளையா பதியும் மார்பின் மீதணிசிந் தாமணியாச் சிந்தாம                 ணியுங்காலில் வியன்சி லம்பாத் திதில்சிலப் பதிகார மும்புனைந்த                 தமிழணங்கைச் சிந்தை செய்வோம்! – சங்குப் புலவர்