தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங‌‌‌ொ) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங‌‌ை) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங‌‌‌ொ)  தெ.பொ.மீ. மதுரைப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானதும் ‘தமிழக வரலாறும் பண்பாடும்’ என்னும் பாடத்தை நீக்கி விட்டு ‘இக்கால இலக்கியம்’ என்பதைக் கொணர்ந்தார். இக்கால இலக்கியம் என்னும் போர்வையில் கொச்சைத் தமிழ்நடைகள் உடைய படைப்புகள் கோலோச்சுகின்றன. இதனால் தமிழுக்கு மேலும் கேடுகள்தாம் விளைகின்றன. எழுத்து மொழியை வலியுறுத்திய பேராசிரியர் இலக்குவனாரின் கருத்துகளில் ஒன்றைக் காண்போம். “இன்று நம்மில் சிலர், ‘ மொழியின் உயிர் வழக்கு மொழியில்தான் உள்ளது. வழக்கு மொழியேதான் எழுத்து மொழியாகவும் கொள்ளப்படல் வேண்டும்…

இனிதே இலக்கியம் – 11 : தமிழே இன்பம்! – முடியரசன் – இலக்குவனார் திருவள்ளுவன்

 11 : தமிழே இன்பம்! – முடியரசன்   தாயே உயிரே தமிழே நினைவணங்கும் சேயேன் பெறற்கரிய செல்வமே – நீயே தலை நின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீ இங்கு இலை என்றால் இன்பம் எனக்கு ஏது?   பாவேந்தர் மரபுக்கவிஞரான முடியரசன் அவர்களின் ‘முடியரசன் கவிதைகள்’ தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட பாடல்.   “பிறவிகளுக்கெல்லாம் காரணமாகும் தாயைப்போன்று எங்களின் தாயாய் விளங்கும் மொழிகளின் தாயே! எங்களை இயக்கும் உயிரே! உன்னை வழங்கும் குழந்தையாகிய நான் பெறுதவற்கு அரிய பேறாய் எனக்குக் கிடைத்த செல்வமே!…

இனிதே இலக்கியம் – 10: முதல் நாவை யசைத்த மொழி – அ.வரத நஞ்சையப்பர்

 10 தமிழன்னையை வாழ்த்துவோம்! நண்ணுமிளமைப் பருவத்தி லேமுதல் நாவை யசைத்த மொழி- எங்கள் கண்ணைத் திறந்துல கத்தை விளக்கிக் கருத்தோ டிசைந்த மொழி- எந்தம் எண்ணத்தைக் கூறற்கு நானென்று முன்வந் திருந்து திருந்து மொழி- வேற்று வண்ணப் பிறமொழி கற்க வுதவிய வண்மைபொ ருந்தும் மொழி- அதனால் எங்கள் தமிழன்னை வாழிய வாழிய வென்றடி வாழ்த்துவமே! தாராமங்கலம் புலவர் அ. வரதநஞ்சைய(பிள்ளை) அவர்கள் இயற்றிய ‘தமிழரசி குறவஞ்சி’ நூலில்   வரும் தமிழ் வாழ்த்துப் பாடல்.    “மழலைப்பருவத்தில் முதல் முதலில் நாவை அசைத்துப் பிறந்த…

இனிதே இலக்கியம் – 9 தமிழன்னையைப் போற்றுவோம்!: க.சோமசுந்தரப்புலவர்

9 தமிழன்னையைப் போற்றுவோம்!     செந்தமிழ்ச் செல்வியைத் தாமரையாட்டியைத் தென்பொதியச் சந்தனச் சோலையில் ஏழிசை கூவுந் தனிக்குயிலைச் சிந்தையிற் பூத்துச் செந்நாவிற் பழுத்துச் செவியினிலே வந்து கனியும் பனுவற் பிராட்டியை வாழ்த்துதுமே!   தங்கத்தாத்தா என அழைக்கப்பெறும் யாழ்ப்பாணத்து நவாலியூர் க.சோமசுந்தரப்புலவர் அவர்களின் பாடல்.   “தமிழன்னையே! என்றும் அறிவுச் செல்வமும் இளமையும் மிக்க செந்தமிழ்ச்செல்வி நீ! அனைத்துக் கலைகளும் உடையவள் ஆதலால் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகள் நீயே! தென் பொதிகையில் நறுமணம் மிக்க சந்தனக்காட்டில் ஏழிசை கூவும் குயிலும் நீயே! புலவர்…

தமிழ் அன்னை- – கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார்

தமிழ் அன்னை அன்புருவான தமிழ் அன்னை – மொழி  அரசியான தமிழ் அன்னை  இன்பம் அளிக்கும் தமிழ் அன்னை – எங்கள் இன்னுயிரான தமிழ் அன்னை  ஆறுகள் ஊறும் மலை வளர்த்தாள் –  இயல்  அழகு சொட்டும் பசு வளர்த்தாள்  வீறுய் மிகுந்த படை வளர்த்தாள்  – ஞான  வித்தகர் போற்றும் கலை வளர்த்தாள்.   – கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார்

அழகார்ந்த செந்தமிழே! வாழ்த்தி வணங்குவமே! – பாவலரேறு பெருஞ்சித்திரனார்

அன்னை மொழியே அழகார்ந்த செந்தமிழே! முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே! கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில் மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே! தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே! இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே ! நற்கணக்கே! மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே சிந்தா மணிச்சுடரே! செங்கை செறிவளையே! தந்த வடமொழிக்கும் தாயாகி நின்றவளே! சிந்து மணற்பரப்பில் சிற்றில் விளையாடி முந்தை எகுபதியர் மூத்த சுமேரியத்தார் செந்திரு நாவில் சிரித்த…

தமிழ்த்தாயே! – முனைவர் மறைமலை இலக்குவனார்

    உன்னை நாள்தோறும் மூச்சுத் திணற வைக்கிறார்கள் இந்த அச்சு அடிப்பாளர்களும் பத்திரிகைக் காரர்களும்! எலும்பில்லாத தங்கள் நாக்கையே ஆயுதமாய்க்  கொண்டு உன்னை நாள்தோறும் கொலை செய்யப் பார்க்கிறார்கள் ஊடகத் தொகுப்பாளர்கள்! உன்னைக் குற்றுயிரும் குலையுயிருமாகச் சித்திரைவதைச் செய்வதிலேயே இன்பம் அடைகிறார்கள் திரைப்பட நடிக நடிகையரும் பின்னணிப் பாடகர்களும்! உன்னை நாள்தோறும் ஊமைக்காயப் படுத்துகிறார்கள் பள்ளிப் பிள்ளைகளும் ஆசிரியர்களும்! பல்கலைக் கழகப்  பேர்வழிகளோ உன்னை மானபங்கப் படுத்த முயற்சி செய்கிறார்கள், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்! தமிழ்த்தாயே! இத்துணை இன்னல்களுக்குப் பிறகும் இன்னும் …….